Saturday, 12 June 2010
மோதிக் கொள்ளும் கூகிளும் ஆப்பிளும்
கைத்தொலைபேசித் துறையில் விளம்பரங்களுக்கான் கடும் போட்டி இப்போது கூகிளுக்கும் ஆப்பிளுக்கும் இடையில் பெரும் மோதலாக உருவெடுத்துள்ளது.
ஒரு காலத்தில் சிலிக்கன் பள்ளத்தாக்கில்(Silicon Valley) நண்பர்களாக இருந்த இவ்விரு நிறுவனங்களுக்கும் இடையில் கடும் முறுகல் தோன்றியுள்ளது. இப்போது உலகெங்கும் smartphoneகள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று வருகின்றன. ஆப்பிளின் ஐபோன்களில் கூகிள் விளம்பரங்களைப் புகுத்தாமல் ஆப்பிள் தடை செய்ததைத் தொடர்ந்து இரு நிறுவங்களுக்குமிடையில் மோதல் மோசமடைந்துள்ளது.
Under the terms of Apple’s latest operating system, clarified by the company on Monday, critical information for distributing and analysing adverts cannot be shared with services owned by makers of other mobile operating systems. Effectively, this cuts AdMob, Google’s newly-acquired mobile advertising service, out of the iPhone platform completely.
அமெரிக்க அரசு நிறுவனங்களுக்கிடையில் ஆரோக்கியமான போட்டியை வளர்த்து அதன் மூலம் மக்களுக்கு குறைந்தவிலையில் பொருட்கள் கிடைக்க வழிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் முக்கிய அம்சமாகும்.
இனிவரும் காலங்களில் இப்போது கணனிகள் வகிக்கும் இடத்தை நவீன கைத்தொலைபேசிகளான smartphoneகள் கைப்பற்ற இருக்கின்றன. அதனால் பல வர்த்தக நிறுவனங்கள் smartphone துறையில் தமது ஆதிக்கத்தை செலுத்தத் தாயாராகின்றன. இதன் முன்னோடியாக கூகிள் நிறுவனம் 750மில்லியன் டொலர்களுக்கு அட்மொப் (AdMob) என்னும் விளம்பரத் துறை நிறுவனத்தை விலைக்கு வாங்கி தனது இணைய விளம்பரத்துறை ஆதிக்கத்தை மேலும் அதிகரிக்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது. ஆப்பிளும் தன்பங்குக்கு iAd என்னும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. கைத்தொலைபேசிகளுக்கு குறுந்தகவல்கள் மூலம் விளம்பரங்களை அனுப்பி பெரும் தொகையை சம்பாதிப்பதில்தான் ஆப்பிளும் கூகிளும் மோதிக் கொள்கின்றன.
AT&T, Nissan, Disney ஆகிய நிறுவனங்கள் தமது விளம்பரங்களை iAdமூலம் ஆப்பிளின் கைத்தொலைபேசிகளில்(iPhone and iPod Touch) செய்கின்றன. இதன் மூலம் ஆப்பிளின் ஆரம்ப வருமானம் இந்த ஆண்டில் 60மில்லியன் டொலர்கள். தனது iPhone and iPod Touch ஆகியவற்றில் கூகிளின் விளம்பரங்களைத் தடுப்பதன் மூலம் தனது தனியுரிமையை iPhone and iPod Touch நிலை நாட்ட ஆப்பிள் முயல்கிறது.
கைத்தொலைபேசிகளூடான மொத்த விளம்பர வருமானம் தற்போது 600மில்லியன் டொலர்களாகும். இது இன்னும் மூன்று வருடங்களில் ஒன்றரை பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தப் பெரும் வருமான வளர்ச்சியை யார் அதிகம் கைப்பற்றுவது என்பதுதான் கூகிளிற்கும் ஆப்பிளிற்கும் இடையில் நடக்க்கும் போட்டி.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment