

இலங்கை அதிபர் ராஜபக்ச ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது என்று சிங்கப்பூரின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் நவீன சிற்பியும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ பரபரப்பாக கூறியுள்ளார். இவர் ஆசியாவில் மதிப்பிற்குரிய ஒரு தலைவர்.
லீ குவான் யூ அதிகாரத்தில் இருக்கும்போது சிங்கப்பூரில் தமிழர்கள் பல முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள் என்று சிலர் அவரிடம் தமிழர்களுக்கு எதிராக வேட்டு வைத்தார்கள். அதற்கு அவர் இந்த நாட்டைக் கட்டி எழுப்பியவர்கள் தமிழர்கள் என்றார்.
லீ குவான் யூ மஹிந்த ராஜபக்சவைப் பற்றி மேற்படி கருத்துத் தெரிவித்திருக்கையில் இலங்கைத் தமிழர்களின் மிக மூத்த தமிழ்ப் பெண் அரசியல்வாதியாகக் கருதப்படும் திருமதி மங்கையர்கரசி அமிர்தலிங்கம் ராஜபக்ச தமிழர்களுக்கு எதிரான போரில் வென்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஒருகாலத்தில் மேடைகளில் ஏறி முழங்கி தமிழர்களுக்கு உசுப்பேத்திய பெண்மணி மங்கையர்கரசி அமிர்தலிங்கம்.
மங்கையர்கரசி அமிர்தலிங்கம் அவர்களைப் பற்றி ஒருகாலத்தில் பாராளமன்றத்தில் பேசிய காமினி திசாநாயக்க மங்கையர்கரசியின் வயை மட்டும்தான் அடக்க முடியாதா அல்லது பிற உறுப்புக்களையுமா அடக்க முடியவில்லையா என்று கேள்வியை எழுப்பினார். அவர் மேலும் மங்கயர்கரசி ஆயிரக் கணக்கில் தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப் பட்டனர் என்று கூறியதைப் பற்றி குறிப்பிடுகையில் ஆயிரக் கணக்கில் பெண்கள் கற்பழிக்கப் படவில்லை ஒரு பெண் ஆயிரம் தடவை கற்பழிக்கப் பட்டார் என்றார்.
ஒரு கொழும்பு பத்திரிகை அரச தோற் பொருள் கூட்டுத்தாபனத்திற்கு தலைவராக நியமிக்கப் படவேண்டும் என்று எழுதியது. சிங்கள மக்கள் விபச்சாரிகளை தோல் வியாபாரிகள் என்று அழைப்பார்கள்.
இதை எல்லாம் மங்கையர்கரசி அமிர்தலிங்கம் மறந்துவிட்டார் தமிழ் இன உணர்வு உள்ளவர்கள் மறக்கவில்லை.
No comments:
Post a Comment