
அது ஒரு மக்கள் நெரிசல் மிக்க நகரம். அதில் ஒரு மக்கள் நிறைந்த பேருந்துத் தரிப்பிடம். அதில் ஒரு கட்டழகி வரிசையில் முன்னணியில் நின்றாள். இறுக்கமான குட்டைப் பாவாடை. அதுவும் தோற் பாவாடை. பேருந்து வந்து நின்றது. அவள் காலைத் தூக்கி படியில் ஏற முயன்றாள் முடியவில்லை. தடுத்தது அந்த இறுக்கமான தோற் குட்டைப் பாவாடை. பேருந்து நடத்துனரைப் பார்த்து ஒரு புன்னகை செய்துவிட்டு தனது பாவாடையின் பின் புறத்தில் இருக்கும் ஜிப்பை கொஞ்சம் தளர்த்தினால் ஏறலாம் என்று. பின்புறம் கையை விட்டு ஜிப்பைக் கொஞம் கீழே தள்ளிவிட்டு ஏற முயன்றாள். பாவம் முடியவில்லை. மீண்டும் செலுத்துனரைப் பார்த்து ஒரு புன்னகை செய்து விட்டு மீண்டும் பின்புறம் கையை விட்டு ஜிப்பைக் கொஞம் கீழே தள்ளிவிட்டு ஏற முயன்றாள். பாவம் முடியவில்லை. மூன்றாவது தடவையாக செலுத்துனரைப் பார்த்து மன்னிப்புக் கேட்பது போன் ஒரு கவர்ச்சிப் புன்னகை செய்து விட்டு பின்புறம் கையை விட்டு ஜிப்பைக் கொஞம் கீழே நன்றாகத் தள்ளிவிட்டு ஏற முயன்றாள். பாவம் மூன்றாம் தடவையும் முடியவில்லை. அவளின் பின்னால் நின்ற நல்ல காத்திரமான உடலமைப்புக் கொண்ட வாலிபன் அவளை இடுப்பில் பிடித்துத் தூக்கி பேருந்தில் ஏற்றினான்.
கட்டழகிக்குக் கோபம் வந்து அவனைப் பார்த்து எனக்கு முன் பின் தெரியாத நீ எப்படி என் உடலைத் தொட்டுத் தூக்க முடியும் என்று சீறினாள். அதற்கு அந்த வாலிபன் எனக்கும் உன்னைத் தெரியாதுதான் ஆனால் நீ முன்று தடவை எனது ஜிப்பை கீழே தள்ளி விட்டபின் நாம் இருவரும் அன்னியோன்யம் ஆகிவிட்டோம் என்றான்
4 comments:
Good Comedy
ஐயோ பாவம்..
That was quite good twist. hope not taken from playboy jokes!!!
Hoyyale Supperungoo..
Post a Comment