

இந்தியத் திரைப்பட விழாவை தென்னக நடிகர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இலங்கையில் நடத்தினர் வட இந்தியப் பேய்கள். இலங்கை அரசு இதற்காக அறுநூறு மில்லியன் ரூபாக்களை செலவிட்டதாகத் தெரிவிக்கப் படுகிறது. இந்த விழாவிற்கு சில வட இந்திய உயர் நட்சத்திரங்கள் வராதது இலங்கியில் நடந்த இனக்கொலையை உலகிற்கு மேலும் பறைசாற்றியது.
இந்த இந்தியத் திரைப் பட விழாவில் வட இந்திய சினிமாநடசத்திரங்கள் இந்த விழாவில் சிங்கள சினிமா நட்சத்திரங்களுக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என்று சிங்களவர்கள் அதிருப்தியடைந்தனர். பழம் பெரும் சிங்கள நடிகை மாலினி பொன்சேக்காவிற்கு பின்வரிசை ஆசனமே ஒதுக்கப்பட்டது. இந்த மாலினி பொன்சேக்கா சி.என். செய்திச் சேவையின் கருத்துக் கணிப்பின்படி ஆசியாவின் முதல் 25 நடிகர்களில் ஒருவர். பல சிங்கள நடிகர்கள் தாம் புறக்கணிக்கப் பட்டதாக ஆத்திரம் அடைந்தனர். இதனால் இலங்கை அதிபர் ராஜபக்சே விழாவைப் புறக்கணித்தார். அவர்செலவழித்த பணம் அவருக்கே பயன்படவில்லை. அவர் அங்கு தமிழிலும் ஒரு உரையாற்றி இருந்திருப்பார். ராஜபக்சவின் அலரி மாளிகையில் அவர் இந்திய நட்சத்திரங்களுக்கு விருந்து அளிக்கும் பொருட்டு விடுத்த அழைப்பை இந்திய நட்சத்திரங்கள் புறக்கணித்தன. ராஜபக்சவின் மனைவியும் மகனும் விழாவிற்குச் சென்றுவிட்டு இடையில் எழுந்து சென்று விட்டனர். அரசியல்வாதியும் நடிகருமான ரவீந்திர ரன்தெனிய உள்ளூர் நடிகர்களை அவமதிக்கும் வகையில் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டதாக ஆத்திரத்துடன் தெரிவித்தார்.
இந்தியர்களைப் பழிவாங்கிய இலங்கை
இந்தியாவின் நட்சத்திரங்களின் செய்கைக்கு பழிவாங்கும் முகமாக ராஜபக்சவின் மனைவி இந்திய தொழிலதிபர்களின் நிகழ்ச்சிக்கு இரண்டு மணி நேரம் பிந்திச் சென்றார். இதனால் பல இந்தியத் தொழிலதிபர்கள் தங்கள் விமானப் பயணத்தை தவறவிட்டனர்.
தவிடு பொடியான இந்தியச் சதித் திட்டம்.
இலங்கையின் மதிப்பை சர்வதேசத்தில் உயர்த்தவும் இலங்கை இந்திய உறவை மேம்படுத்தவும் இந்தியா விடாப் பிடியாக நின்று இந்த விழாவை தமிழர்களின் எதிர்ப்புக்களுக்கு வழமை போல் மதிப்புக் கொடுக்காமல் நடாத்தியது. இந்தியாவின் இரு திட்டமும் தவிடு பொடியானது.
3 comments:
பல சிங்கள நடிக நடிகைகள் ஆங்கிலம் பேச முடியாததால் பகிஷ்கரித்தனராம்...
கருணாநிதியும் சோனியாவும் ஒரு டூயட் ஆடியிருக்கலாம்....
kalaingar paada adhukku soniyavum rajabaksheum oru duet aada,.... ada..da..da..da..aaaa
Post a Comment