மூன்று முறை விடுத்த யுத்த நிறுத்தக் கோரிக்கையை இலங்கை நிராகரித்ததைத் தொடர்ந்து கடைசியாக (ஏப்ரல்-4) விடுத்த அறிக்கையில் யுத்த நிறுத்தக் கோரிக்கை விடுவதை தவிர்த்துக் கொண்டது. அத்துடன் புலிகள் மீது குற்றம் சுமத்துவதையும் அதிகரித்துக் கொண்டது.
ஏப்ரல் மாத நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் இல்லை
தமிழர் அவலத்தில் அக்கறைபோல் காட்டிக் கொண்ட மெக்சிக்கோ பிரதிநிதி கிலன்டே ஹெலர் ஏப்ரல் மாதத்திற்கான தலைமைப் பாதுகாப்புப் பதவியை லிபியப் பிரதிநிதியிடமிருந்து பெற்றுக் கொண்ட போதிலும் ஏப்ரல் மாத ஐநா பாதுகாப்புச் சபை நிகழ்ச்சி நிரலில் இலங்கைத் தமிழர் பிரச்சனை இடம் பெறவில்லை.
சர்வதேசச் சந்தையில் தமிழர் அவலம் முடங்கியதா?
மேற்குலக நாடுகளின் தற்போதைய அவசியத் தேவை மந்த நிலையில் இருக்கும் சர்வ தேசச் சந்தையை ஊக்கப் படுத்துவதே. இதற்கு இலங்கைக்கு சர்வ தேச நாணய நிதியத்தின் மூலமாக கடன் கொடுத்தே ஆக வேண்டும். தற்போது இலங்கையில் நடக்கும் இனக் கொலை ஆட் கடத்தல், கொலை, சிறைக் கைதிகளாக்கப் பட்ட அகதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் கொலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால் இலங்கைக்கு எந்த வித நிதியுதவியும் செய்ய முடியாது. அப்படி வழங்காமல் விட்டால் சர்வ தேசச் சந்தை சீரடையாது. ஆகவே இலங்கையிடமிருந்து சில வெற்று வாக்குறுதிகளைப் பெற்றுக் கொண்டு இலங்கைக்கு நிதி உதவியை வழங்கி விடுவர் மேற்குலகினர்.
4 comments:
ராணுவ மந்திரி திருமாகாந்தியுடன்...ஒரு சந்திப்பு....
17.05.2009 மாலை மணி 5...
உள்ளே நுழைந்ததும்,சுமார் 9 அடி உயர சோனியாவின் படத்துக்கு முன்புறம் கம்பீரமாக அமர்ந்து தனது மீசையை முறுக்கியபடியே...வாங்க! வாங்க என்று என்னை அழைத்தபோது,திருப்பனந்தால் சைவ மடம் சாமியார் மாதிரியே காட்சியளித்தார்.
வணக்கம்,திருமாவளவன் அவர்களே...(நான் முடிப்பதற்குள்,சீறினார்)-என்னை திருமா காந்தி என்று அழையுங்கள்
எனது திகைப்பு,அடங்குவதற்குள்,முதலில்,உபசரிப்பு,பிறகுதான் பேட்டி என்றார்..
தனது உதவியாளரை அழைத்து,இடாலி நூடுல்ஷ்,இடாலி சூப் தயார் பண்ண கட்டளை இட்டார்!இடாலி சூப்பை பறுகும்போது,மறக்காமல்,இத்தாலி தாயே உனக்கு நன்றி என்று 3 முறை கூறினார்!
கதை எழுதுகிற ஆசாமியாலும்,நடனக்காரியாலும்,தமிழர்கலுக்கு ஆபத்து!
இலங்கை அரசைத் தாக்குவது போல் தாக்கிவிட்டு தாங்கிப் பிடிக்கப் போகிறாங்கள்.
தமிழர்கள் எந்த ஒரு வெளிநாட்டையோ அல்லது அமைப்பையோ நம்ப முடியாது. நம்பவும் கூடாது.
Post a Comment