தமிழினத்திற்கு எதிரான இன அழிப்புப் போரில் 2008 இல் இருந்து இதுவரை இருபதினாயிரம் படையினரையும் 1.6 பில்லியன் டொலர்களையும் இழந்துள்ளது இலங்கை அரசு. இலங்கைப் பொருளாதாரம் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவதை சர்வதேச நாணய நிதியம் விரும்பவில்லை. இதற்கான காரணம் இலங்கையின் தொழிலாளர்களின் ஆடை உற்பத்தி மற்றும் கருவிகள் இணத்தல் திறமைகளை சுரண்டும் வாய்ப்பு சர்வதேச முதலாளிகளுக்கு இல்லாமல் போய்விடும் என்பதுதான். ஐக்கிய நாடுகள் சபை மூன்றுமுறை முன் வைத்த யுத்த நிறுத்தக் கோரிக்கையை இலங்கை நிராகரித்தமையும் இலங்கையில் நிலவும் மோசமான மனித உரிமை மீறல்களும் இலங்கைக்கு எதிராக பல சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தமது பலத்த அதிருப்தியை வெளியிட்டமையும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடனுதவி செய்வதில் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடி வந்தவர்களை சர்வ தேச நியமங்களுக்கு எதிராக அடைத்து வைத்திருப்பதும் அவர்களுள் பல இளைஞர் யுவதிகள் காணாமல் போனதும் நிலமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இலங்கையின் போர்க் குற்றங்களை ஐக்கிய நாடுகள் சபை மறைத்து வைத்திருப்பதாகக்கூட குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்குகடன் கொடுக்குவே விரும்புகிறது.
திரை மறைவு கலந்துரையாடல்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் நடாத்தும் திரை மறைவுப் பேச்சு வார்த்தையை அவாதானிக்கும் போது பின் வருபவை புலப்படுகிறது:
1. சர்வதேச நாணய நிதியம் இலங்கையிடமிருந்து மனித உரிமை மற்றும் தமிழர் தொடர்பாக சில வாக்குறுதிகளைப் பெறலாம்.
2. இலங்கையின் அரசுக்கு தர்ம சங்கடம் ஏற்படாத வகையில் தனது நிபந்தனைகளைத் தளர்த்தலாம்
3. தமிழர்களது அவலத்திற்கு விடிவு இதன் மூலம் கிடைக்கப் போவதில்லை.
இனப் படுகொலைக்கு எதிரான தமிழர்களின் நடவடிக்கைக் குழு ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
3 comments:
வணக்கம் வேல் தருமா
உங்கள் ஆக்கத்தை சுடுவது இல்லை நோக்கம். நல்ல விடயமாக இருந்தது. ஆகையால் போட்டோம். உங்கள் பெயரையும் இணைத்து உள்ளேன்.
சொட்டையை நம்பியவர் மண்டயை போடுவார்!
சொட்டை வாழும்,அடுத்தவன் சாவில்!
தமிழர் விடயத்தில் எப்படியாவது நல்லவிடயங்களை செய்தலும் தப்பில்லை...
Post a Comment