Monday, 30 March 2009
தமிழர்கள்பேரில் பிச்சை எடுக்கும் ராஜபக்சேக்கள்.வீராப்புப் பேசிய ராஜாபக்சேக்கள் வீழ்ந்து மண்டியிடுகின்றனர்.
வீராப்புப் பேசிய ராஜாபக்சேக்கள் வீழ்ந்து மண்டியிடுகின்றனர்.
சர்வதேச நாணயநிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிய மாட்டோம் என்று வீராப்புப் பேசி வந்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயும் அவர் சகோதரர்களும் இன்று திரை மறைவில் சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழினக் கொலை யுத்தத்தில் பலகோடிகளை ஏப்பம் விடப்பட்ட நிலையில் இப்போது இலங்கை அரசு பலத்த நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்தியா கொடுத்த நூறு மில்லியன் டொலர் கடன் பாக்கிஸ்த்தானிடம் ஆயுதங்கள் வாங்கி தமிழினக் கொலை யுத்தத்தில் வீணாக்கி முடிந்த்து விட்ட நிலையில் மேலும் ஆயுதங்கள் வாங்க இலங்கை அரசிற்கு நிதி தேவைப் படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இத்தாலிச் சனியாளிடம் இருந்து இலங்கை அரசு பகிரங்க உதவிகளை எதிர் பார்க்க முடியாது
தமிழர்கள்பேரில் பிச்சை எடுக்கும் ராஜபக்சேக்கள்.
இலங்கை அரச நிதியைக் காலி செய்து பேரழிவு ஆயுதங்களை வாங்கிக் குவித்து அப்பாவி சிங்கள இளைஞர்களுக்கு போர் வெறியூட்டி இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளை நிர்மூலம் செய்து தமிழர்களை நிர்க்கதியாக்கி உயிரழித்து உடமை அழித்து அகதி முகாம்களில் அடைத்த ராஜபக்சே சகோதரர்கள் தமிழர்களுக்கு நன்மை செய்ய என்று கூறி சர்வதேச நாணயநிதியத்திடம் பிச்சை கேட்கின்றனர். இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளை புனர் நிர்மாணம் செய்வதற்கும் மக்களை மீள் குடியேற்றவும் மக்களுக்கு மறுவாழ்வு அழிப்பதற்கும் தற்போதுள்ள இடைத்தங்கல் முகாம்களை பராமரிப்பதற்கும் என்று சொல்லி சர்வதேச நாணயநிதியத்திடம் கடன் கேட்கின்றனர்.
சிங்களக் குடியேற்றத்திற்கே பயன்படும்
தமிழர் தரப்பு சர்வதேச நாணய நிதியத்தின் கடனை இலங்கை அரசு தமிழர் தாயக பூமியில் சிங்களக் குடியேற்றத்திற்கே பயன் படுத்தும் என்று உறுதியாக நம்புகிறது. இந்தக் கடன் தொகை இராணுவ நடவடிக்கை போல் தோற்றமளிக்கும் எந்தவித செயற்பாட்டிற்கும் பயன்படுத்துவதை சர்வதேச நாணய நிதியம் உறுதி செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் செயற்படும் பத்திரிகையாளர்களான Inner City Press சர்வதேச நாணயநிதியத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
2 comments:
These people do anything for money.
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் காசின் முன் செல்லாது.
Post a Comment