Friday, 3 April 2009

தனது பிராந்திய நலன்களைக் கோட்டை விட்டது இந்தியா


இலங்கையில் சீன திட்டமிட்ட முறையில் காலூன்றி வருகிறது. தனது ஆதரவு சக்தியான ஜனத விமுக்திப் பெரமுனை என்னும் பேரின வாதக்கட்சியை மறைமுகமாக ஆதரவு அளித்து வளர்த்து வருகிறது. அமெரிக்கா எழுபதுகளில் திருகோணமலையில் தளம் அமைக்க முற்பட்டபோது இந்திரா காந்தி அம்மையார் அதைப் பலவழிகளில் எதிர்த்தார். அதற்கு அவர் தமித் தேசியவாதிகளை ஆதரித்து வளர்த்து எதிர்தார். 1984இல் அலன் தம்பதிகள் தமிழ்ப் பேராட்டக்குழு ஒன்றினால் கடத்தப் பட்டபோது அவர்களைத் தேட அமெரிக்க விமானம் ஒன்று கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்து இறங்கியது. இதை அறிந்த இந்த்திரா காந்தி அம்மையார் அவ்விமானம் எந்தத் தேடுதல் நடவடிக்கையிலும் ஈடு படக்கூடாது என்று இலங்கையை எச்சரித்து அந்த விமானத்தைப் பறக்காமல் செய்தார். அவ் விமானம் பறப்பில் ஈடுபட்டால் இந்தியக் கரையோரப் பகுதிகளை வேவு பார்க்கக் கூடும் என்றே இலங்கையை மிரட்டிப் பணிய வைத்தார். தமிழ்த்தேசிய வாதிகளின் பக்கபலத்தால் இதை அவ்ரால் சாதிக்க முடிந்தது. சிங்கள அரசு சம்மதிக்காவிட்டால் தமிழ்த்தேசியவாதத்தை ஆதரிப்போம், ஆயுதம் கொடுப்போம் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடாக இலங்கைக்கு உணர்த்தப் பட்டது. ஆனால் இன்று நடப்பது என்ன? அம்பாந்தோட்டையில் சீனா காலூன்றி விட்டது. சீன ராடர்கள் இலங்கையின் பல பகுதிகளிலும் இருக்கின்றன. அவற்றால் இந்தியாவை வேவு பார்க்க முடியும். பாக்கிஸ்தானிய உளவாளிகள் விமான ஓட்டிகள் இலங்கையில் செயல் படுகின்றனர். இந்தியாவின் பிராந்திய நலன் இங்கு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இந்தியாவின் அதிகார மையம் இன்று சோனியா காந்தியினதும் சிவ சங்கர மேனனினதும் கையில் உள்ளது. இந்த அதிகார மையம் இலங்கைப் பிரச்சினையை விடுதலைப் புலிகளை அழிப்பதை மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அணுகுகிறது. அத்துடன் சில இந்திய முதலாளிகளின் குறுங்கால இலாபத்தையும் அது கருத்தில் கொள்கிறது.
.
பழி வாங்கத் துடிக்கும் சோனியா
இத்தாலியப் பெண்ணான சோனியாவிற்கு எவ்வளவுதூரம் இந்தியப் பிராந்திய நலனில் அக்கறை இருக்கும் என்பது கேள்விக்குறியே. அவர் விடுதலைப் புலிகளைப் பழிவாங்குவதில் மட்டும் குறியாக இருக்கிறார். அதனால் அவருக்கு இந்தியப் பிராந்திய நலனில் கவனம் செலுத்த முடியவில்லை. சீனவிற்கும் பாக்கிஸ்தானிற்கும் பேட்டி போட்டுக் கொண்டு இலங்கைக்கு உதவுவதே அவரது தெரிவாக இருக்கிறது.
.
சாதியத்தை தகர்த்தெறிந்த ஒருவன் தமிழர் தலைவனாவதை இந்தியப் பார்ப்பனர்கள் விரும்பவில்லை.
சிவ சங்கர மேனனோ சாதியத்தை தகர்த்தெறிந்த ஒருவன் தமிழர் தலைவனாவதை விரும்பவில்லை. இதுதான் இந்தியாவில் உள்ள பார்ப்பனர் பலரும் விடுதலைப் புலிகளை எதிர்ப்பதற்குக் காரணம். இதனால் இந்த சோனியா-மேனன் அதிகார மையம் இந்தியப் பிராந்திய நலனுக்கு உகந்த தமிழ்த் தேசிய வாதத்தை இந்திரா காந்தி பயன் படுதியதுபோல் இவர்களால் பயன் படுத்த முடியவில்லை. தமிழ்த் தேசிய வாதத்தை ஒழிப்பது இந்தியப் பிராந்திய வாதத்திற்கு எவ்வளவு முட்டுக் கட்டையாக அமையும் என்பதையும் உணரவில்லை

2 comments:

unearth.com said...

idam kidaithaal ethaiyavathu eluthividuvathaa.
Pachhchonthiyaium minchi vittanar nammavar.
Kurai sollakoodathu Kaaranam kandupidipathil
kinkararhal nam thamilar.
vivasthai illaamal aahivittathu.
thadi eduthavan ellaam thandalkaaran

ttpian said...

புலிகலின் பலம் ஒரு புதிர்...
புதிர் அவிழும்போது....சுமார் 35,000 சிஙகள கூலிப்பட்டாலம் பொட்டலம் கட்டப்பட்டிருக்கும்....

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...