அற்ற குளத்து அறுநீர்ப்பறவைகள் நாம்
உற்ற நேரத்தில் உறவுகளைப் பிரிந்தோம்
தக்க தருணத்தில் ஆயுதம் ஏந்தவில்லை
தாய்மண்ணைக் காக்க முனையவில்லை
வெளிநாடு வந்தோம் தப்பிப் பிழைத்தோம்
நீயும் நானும் காதல் வசப் பட்டோம்
ஆனாலும் எமக்குள் கருத்து வேறுபாடு
ஈழ விடுதலை தொடர்பாக
எந்நேரமும் என் சிந்தனையில்
ஈழத்தோர் படும் துயர்
நீ வெளி நாட்டு மோகத்தில்
தாயகப் போராட்டத்திற்கு
நீ நிதியுதவி செய்யவில்லை
பாராளமன்றத்தின் முன்
கோஷம் போட நீ வரவில்லை
எதிர்ப்பு ஊர்வலங்களிற்கும் வரவில்லை
தாயகத்து உணரவின்றி வாழ
என்னால் முடியாது பெண்ணெ.
சரிவராது உனக்கும் எனக்கும்
பிரிவோம் சந்திக்க வேண்டாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...
-
வட கொரியா , ஈரான் ஆகிய நாடுகள் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் மிகவும் துரிதமாக வளர்ந்து வருகின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வட கொரியா உலகின் ...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...
No comments:
Post a Comment