
எந்த ஆயுதங்கள் உங்களுக்கு வேண்டுமோ
அந்த ஆயுதந்களை நன்றாகவே கொடுத்தோம்
எந்தப் பயிற்ச்சி உங்களுக்கு வேண்டுமோ
அனைத்தையும் நன்றாகவே கொடுத்தோம்
எவர் தாலிகள் அறுந்திட வேண்டுமோ
அவர் தாலிகள் நன்றாகவே அறுகின்றன
எவர் பெண்கள் கற்பு சூறையாடப்பட வேண்டுமோ
அவர் பெண்கள் கற்பு நன்றாகவே பறிக்கப்படுகின்றன
எவர் குழந்தைகள் உடல்கள்சிதற வேண்டுமோ
அவர் குழந்தைகள் நன்றாகவே இறக்கின்றன
எவர் மருத்துவ மனைகள் உடைபட வேண்டுமோ
அவர் மருத்துவ மனைகள நன்றாகவே சிதைகின்றன
எவர் சுதந்திரப் போர் நசுக்கப் பட வேண்டுமோ
அவர் சுதந்திரப் போர் இன்னும் ஒழிக்கப் படவில்லையே!
No comments:
Post a Comment