நயன்தாரா போலென்று வர்ணித்ததெல்லாம்
நயம் தாராதென்று இன்றுணர்ந்தேன்.
வருவாய் நீயென்று காத்திருந்ததெல்லாம்
வருவாய் இலாததென்று இன்றுணர்ந்தேன்
பாவனை எல்லாம் பாவனா போலென்றேன்
சோதைனை சூழ் வாழ்வென்றானது
திரிஷா போல் திகட்டாத அழகென்றேன்
தரிசாய்ப் போனது என் இள வாழ்க்கை
நமீதா போல் கால்கள் இரண்டு மென்றேன்
தகதிமிதா எனத்தள்ளாடிப் போனதென் மனம்.
பிரியாமணியைப் போல் உன் உடலென்றேன்
தெரியாமணியாய் போய் மறைந்தாயே
மொத்தத்தில் நீயோர் ஐஸ்வர்யா என்றிருந்தேன்
சித்தத்தில் தெளிவின்றித் தினம் தவிக்கின்றேன்
எல்லாம் நீயென்று இருந்ததால் - இன்று
எல்லாம் இழந்து இருக்கின்றேன்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
1 comment:
Hi
உங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு
நன்றி.
உங்கள் இணைப்பை இப்பூக்களில்
பார்க்கவும்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
Post a Comment