ஜனவரி-25-ம் திகதி எகிப்தில் அரபு வசந்தந்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவு நாள். கடந்த நான்கு ஆண்டுகளாக ஜனவரி-25ம் திகதி அதிக சுதந்திரம் கோரும் பெரும் ஆர்ப்பாட்டங்களுடன் நினைவு கூரப்படும். இந்த ஆண்டு எதுவும் நடக்கவில்லை. நடக்காமல் விட்டதற்கான காரணம் போதிய சுதந்திரம் கிடைத்தமையால் அல்ல உள்ள சுதந்திரமும் பறிக்கப் பட்டுவிட்டது. மக்கள் கைது செய்யப் படலாம் என்ற அச்சத்தில் எகிப்திய அரபு வசந்தத்தம் உருவான தஹ்ரீர் சதுக்கப் பக்கம் போகவில்லை. ஜனவரி - 25இற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே பலர் கைது செய்யப்பட்டுவிட்டனர். ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்யக் கூடியவர்கள் கடுமையாகக் கண்காணிக்கப் பட்டனர். அவர்கள் கூடக் கூடிய இடங்கள் தீவிர சோதனைகளுக்கு உள்ளாக்கப் பட்டன.
அரபு வசந்தத்தின் பிறப்பிடமான துனிசியாவில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் தலை தூக்கியுள்ளன. அங்கு எழு இலட்சம் பேர் வேலையின்றி இருக்கின்றார்கள். இது மக்கள் தொகையின் 15 விழுக்காடாகும். 62 விழுக்காடான பட்டதாரிகள் வேலையின்றியும், இளையோரில் 38 விழுக்காட்டினர் வேலையின்றியும் இருக்கின்றனர். இது ஒரு மக்கள் எழுச்சியின் பிறப்பிடமாக மீண்டும் உருவாகியுள்ளது. ஊரடங்குச் சட்டம் அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
துனிசியாவின் மொஹமட் பௌஜிஜி (Mohamed Bouazizi) மறக்கப்பட்டுவிட்டார். எகிப்த்தின் அஸ்மா மஹ்பூஸ் என்றால் யாருக்கும் தெரியாது. இஸ்லாமியர்களின் வேலை இறை நம்பிக்கை அற்ற அமெரிக்கர்களை ஒழித்துக் கட்டுவதே என அல் கெய்தா பரப்புரை செய்து கொண்டிருக்க. இஸ்லாமியப் "பயங்கரவாதத்திற்கு" எதிராக அமெரிக்கா போராடிக் கொண்டிருக்க. இஸ்லாமியர்களும் மனிதர்களே அவர்களும் இம்மண்ணில் வாழ வேண்டும் என எழுந்தவர்கள் இவர்கள் இருவரும். அரபு மக்கள் தமது மக்கள் எழுச்சியை மல்லிகைப் புரட்சி என அழைத்தனர். மேற்கு நாட்டு ஊடகங்கள் அதை அரபு வசந்தம் என அழைத்தன. துனிசியா, எகிப்து, லிபியா, சூடான் ஆகிய நாடுகளில் ஆட்சியாளர்கள் பதவியில் இருந்து விரட்டப்பட்டனர். 14 மாத எழுச்சியில் 4 ஆட்சியாளர்களின் மொத்த 117 ஆண்டுகால ஆட்சி முடிவிற்குக் கொண்டு வரப்பட்டது.
துனிசியாவில் தந்தையற்ற தன் குடும்பத்தைக் காப்பாற்ற தெருவோரம் பழவியாபாரம் செய்து கொண்டிருந்த மொஹமட் பௌஜிஜியை எழு அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பணத்தை இலஞ்சமாகக் கொடுத்த மறுத்தமைக்காக துனிசிய அரச காவற்துறையைச் சேர்ந்த பெண் ஒருத்தி தாக்கி அவன் முகத்தில் காறி உமிழ்ந்தாள். அவன் தற்கொலை செய்து கொள்ள துனிசியாவில் உருவான இளையோர் எழுச்சி மேற்காசியவிலும் வட ஆபிரிக்காவிலும் உள்ள பல நாடுகளிற்கும் பரவியது. அல்ஜீரியா, லிபியா, எகிப்து, சிரியா, சூடான், சவுதி அரேபியா, பாஹ்ரேன், ஈராக் எனப் பல நாடுகளில் மக்கள் ஆடம்பர வாழ்கை வாழும் அக்கிரம ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தனர். மன்னராட்சி அல்லது படைத்துறையினரின் ஆட்சி மட்டுமே மேற்காசிய மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் நடக்கின்றன.
ஒரு புரட்சி என்பது அக்கிரமம் பிடித்த ஆட்சியாளர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும், ஆட்சி முறைமையை மாற்ற வேண்டும், ஆட்சி பிழையானவர்களின் கைகளுக்குப் போகமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மக்கள் வாழ்வு மேம்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எகிப்திய மக்கள் 18நாட்கள் நடத்திய "புரட்சியின்" மூலம் பெப்ரவரி 11-ம் திகதி ஹஸ்னி முபாரக்கைப் பதவியில் இருந்து விரட்டினர். ஆனால் புரட்சி என்பது ஒரு ஆட்சியாளரை மாற்றுவதுடன் முற்றுப் பெறுவதல்ல என்பதற்கு எகிப்து ஒரு நல்ல உதாரணமாக அமைகிறது. எகிப்த்தில் உருவான மக்கள் எழுச்சி அமெரிக்காவின் பாதுகப்புத்துறையினரையும் உளவுத் துறையினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அமெரிக்கா தான் பாதுகாத்து வந்த அடக்கு முறை ஆட்சியாளர்களில் ஒருவரான ஹஸ்னி முபாரக்கைக் கைவிடும் அளவிற்கு நிலை மோசமாக இருந்தது.
துனிசீய மக்கள் ஆரம்பித்து வைத்த அரபு வசந்தத்தால் உந்தப்பட்ட எகிப்திய மக்கள் ஒரு திடமான சக்தியாக திரண்டு அதிக இரத்தம் சிந்தாமல் 18 நாட்கள் நடத்திய "புரட்சியின்" மூலம் 2011பெப்ரவரி 11-ம் திகதி ஹஸ்னி முபாரக்கைப் பதவியில் இருந்து விரட்டினர். ஐக்கிய அமெரிக்காவின் உளவுத் துறை எகிப்தியப் படையினரை புரட்சியை எதிர்க்காமல் இருப்பதை உறுதி செய்தது. இதனால் எகிப்தியப் படைத்துறைக்கு புரட்சியாளர்களால் எந்த விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. எகிப்தியப் படைத்துறையின் உயர்பதவிகளில் இருப்போர் அமெரிக்காவில் பயிற்ச்சி பெற்றவர்கள். இந்தப் புரட்சியை முன்னெடுப்பதில் முன்னணியில் நின்று செயற்பட்டவர் ஒரு இளம் பெண். அஸ்மா மஹ்பூஸ் என்ற 26 வயதான எகிப்தியப் பெண் ஹஸ்னி முபராக்கின் அடக்கு முறைக்கு எதிராக தனியான ஒரு போராட்டத்தை ஆரம்பித்தாள். முதலில் முகவேட்டில் அனைவரையும் தஹ்ரீர் சதுக்கத்தில் திரளும்படி அழைப்பு விடுத்தாள். அவளது அழைப்பை மூன்று இளைஞர்கள் மட்டுமே வந்தனர். முகவேட்டின் மூலம் தகவலை அறிந்த காவற்துறை அவர்கள் நாலு பேருக்கும் முதல் அங்கு திரண்டுவிட்டனர். அந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்த காவற்துறையினர் அஸ்மா மஹ்பூஸை எச்சரித்து விட்டுச் சென்றனர். அத்துடன் அஸ்மா மஹ்பூஸ் சளைக்கவில்லை பின்னர் ஒரு காணொளியைத் தயாரித்து அதன் மூலம் நான் மீண்டும் தஹ்ரீர் சதுக்கம் செல்வேன் உங்களுக்குத் தன்னம்பிக்கை இருந்தால் என்னுடன் வாருங்கள் என்று அறை கூவல் விடுத்தாள். அது பெரும் மக்கள் எழுச்சியாக மாறி 18 நாட்களில் ஹஸ்னி முபராக்கின் ஆட்சியை எகிப்த்தில் இருந்து அகற்றியது. ஆனால் தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்றியவர்களோ புரட்சியை முன்னெடுத்த இளைஞர்களின் மதசார்பற்ற கொள்கைக்கு முரணான இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினர். அவர்களின் ஆட்சி ஹஸ்னி முபாராக்கின் ஆட்சியிலும் பார்க்க மோசமானதாக அமைந்தது. இதனால் இளைஞர்கள் மீண்டும் கிளர்ந்து எழுந்தபோது இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டு படையினர் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டனர். மீண்டும் மக்கள் அடக்கு முறை ஆட்சிக்கு உள்ளாகி உள்ளனர். இன்னும் ஒரு மக்கள் எழுச்சி எகிப்தில் ஏற்பட தற்போது வாய்ப்பில்லை. எகிப்தின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகித்த உல்லாசப் பயணத்துறை மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளது. இளையோர் மத்தியிலான வேலைவாய்ப்பின்மையே அரபு வசந்தத்திற்கு வித்திட்டது. அது அரபு வசந்த எழுச்சிக்கு முன்பிருந்ததை விட இப்போது அதிகரித்துள்ளது. எகிப்தின் பாதீட்டுப் பற்றாக்குறை பத்து விழுக்காட்டிலும் அதிகம். அதன் கடன் பளு அதன் அதன் மொத்தத் தேசிய உற்பத்தியிலும் அதிகமானதாகும்.
லிபியாவில் அரபு வசந்தம் ஒரு பெரும் உள்நாட்டுப் போராக வெடித்தது. கடாஃபியைப் பதவியில் இருந்து வெளியேற்றத் துடித்த மேற்கு நாடுகள் அவரது படையினருக்கு எதிராக போர் விமனத் தாக்குதல்கள் வழிகாட்டி ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்து அவரை ஆட்சியில் இருந்து அகற்றிக் கொல்ல வழி வகுத்தன. தேர்தலுக்காக கடாஃபியிடம் இருந்து பணம் பெற்ற அரசியல்வாதிகளின் இரகசியங்கள் அவருடன் அழிக்கப்பட்டன. லிபியா இப்போது ஒரு தேறாத தோல்வியடைந்த நாடக இருக்கின்றது. இரண்டு அரசுகள் இப்போது அங்கு ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருக்கின்றன. பல போர்ப்பிரபுக்கள் மத்தியில் லிபிய மக்கள் சிக்குண்டு கொண்டிருக்கின்றனர். ஆபிரிக்காவின் செல்வந்த நாடுகளில் ஒன்றான லிபியாவில் உலகின் தலை சிறந்த சமூக நலக் கொடுப்பனவுகள் கடாஃபியின் ஆட்சியால் செய்யப்பட்டன. அறுபது இலட்சம் மக்களும் நன்கு வாழக்கூடிய எண்ணெய் வளம் அங்கு இருக்கின்றது. ஆனால் 2015-ம் ஆண்டு டிசம்பரில் லிபியாவின் அரசியல்வாதி ஒருவர் அடுத்த சோமாலியாவாக லிபியா மாறப்போகின்றது என எச்சரித்தார்.
சிரியாவின் அரபு வசந்த எழுச்சி முதலில் சியா மற்றும் சுனி முஸ்லிம்களுக்கு இடையிலான போட்டியாக மாறியது. பின்னர் ஈரானுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான போட்டிக்களமானது. தற்போது உலக வல்லரசுகளின் போட்டிக் களமாகியுள்ளது. சிரிய நகரங்களின் அரைவாசி தரைமட்டமாகிவிட்டது. தற்போது பிரச்சனை பஷார் அல் அசாத்தின் அடக்குமுறை மிக்க ஆட்சியை அகற்றுவதல்ல இஸ்லாமியத் தீவிரவாதத்தை எப்படி ஒழிப்பது என்பதே! மற்ற எல்லா நாடுகளையும் விட மோசமான உயிரிழப்பு சிரியாவிலேயே ஏற்பட்டது. மூன்று இலட்சத்திற்கு மேலான அப்பாவிகள் கொல்லப் பட்டனர். 65இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர்.
அரபு வசந்தத்தின் பின்னர் ஈராக் மூன்றாகப் பிளவு பட்டுள்ளது. சியா முஸ்லிம்களின் ஆட்சி, குரிதிஷ் மக்களின் ஆட்சி, ஐ எஸ் அமைப்பினரின் ஆட்சி என மூன்று ஆட்சிகள் அங்கு நிலவுகின்றன. அதன் பொருளாதாரம் மோசமாகின்றது. ஈராக்கில் யதீஷியர்கள் இனக்கொலைக்கு உள்ளானார்கள்.
சவுதி அரேபியாவிலும் பாஹ்ரேனிலும் உருவான மக்கள் எழுச்சியையும் அதை சவுதி அரேபியப் படைகள் மூர்க்கத்தனமாக அடக்கியதைப் பற்றியும் மேற்கு நாட்டுப் பத்திரிகைகள் பெரிது படுத்தவில்லை. அமெரிக்காவின் படைத்தளமுள்ள பாஹ்ரேனில் ஈரானிய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்கள் பெரும் போராட்டம் செய்தனர். நிலைமை மோசமானவுடன் சவுதி அரேபியா தனது படைகளை அங்கு அனுப்பி கிளர்ச்சிக்காரர்களை அடக்கியது. பஹ்ரேனில் அரபு வசந்தத்தின் பின்னர் மோசமான அடக்கு முறை நிலவுகின்றது.
அரபு நாடுகளில் ஓர் நல்ல ஆட்சி முறைமை இருந்ததில்லை. அவ்வப்போது வந்த ஒரு சில ஆட்சியாளர்களைத் தவிர மற்ற எல்லா ஆட்சியாளர்களும் ஊழல் மிக்கதும் திறனற்றதுமான ஆட்சியையே செய்தனர். துனிசியாவைத் தவிர எல்லா நாடுகளிலும் அரபு வசந்தத்திற்கு முன்னர் இருந்ததிலும் பார்க்க மோசமான ஆட்சி, மோசமான அடக்கு முறை, மோசமான மனித உரிமை மீறல்கள், மோசமான பொருளாதாரச் சூழல் ஆகியவை நிலவுகின்றன. இவற்றில் மாற்றம் ஏற்படக் கூடிய நிலைமை அண்மையில் இல்லை. அரபு வசந்தம் துயரைத் தவிர வேறு எதையும் கொண்டு வரவில்லை.
Tuesday, 26 January 2016
Tuesday, 19 January 2016
ஈரான் மீதான பொருளாதாரத் தடை நீக்கலின் விளைவுகள்
எண்பது மில்லியன் கல்வியறிவு மிக்க மக்களைக் கொண்ட நாடாகிய ஈரானின் சரித்திரப் பெருமை தனித்துவமானது. அதன் எண்ணெய் வளமும் எரிவாயு வளமும் அபரிமிதமானது. அதன் புவிசார் இருப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.மேற்கு நாடுகள் ஈரானுக்கு எதிராக விதித்த பொருளாதாரத் தடை முடிவிற்கு வந்துள்ளது. ஈரான் “preparing for takeoff.” என ஈரானியர்கள் தெரிவிக்கின்றனர். உலகின் 18வது பெரிய பொருளாதாரம் உலக வர்த்தகத்தில் தடையின்றி ஈடுபடக் கூடிய நிலையை எட்டியுள்ளமை உலகப் பொருளாதாரத்திற்கு உகந்த ஒன்றே. ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானி ஈரான் மீதான பொருளாதாரத் தடை நிக்கப்பட்ட 2016 ஜனவரி 16-ம் திகதி ஈரானிய வரலாற்று ஏட்டின் பொன்னான பக்கம் என்றார்.
இறக்கை நறுக்கப்பட்ட ஈரான்
யூரேனியப் பதப்படுத்தும் குழாய்களான centrifuges ஈரானிடம் 19,000 இருந்தன. அது இப்போது 6104ஆகக் குறைக்கப் பட்டுள்ளது. ஈரானிடம் நவீன centrifuges ஆயிரம் இருந்தன அவை இப்போது இல்லாமற் செய்யப் பட்டுள்ளன. தாழ்-நிலையில் பதப்படுத்தப் பட்ட யூரேனியம் ஈரானிடம் 19,000இறாத்தல்கள் இருந்தன. அவை இப்போது 660 இறாத்தல்கள் ஆகக் குறைக்கப் பட்டுள்ளன. ஈரான் புளூட்டோனியத்தைப் பாவித்து அணுக்குண்டு தயாரிக்க முடியாதபடி செய்யப்பட்டுள்ளது. ஈரான் பதப்படுத்திய 8.5 தொன் யூரேனியம் இரசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஈரான் முழுமையான ஊடுருவல் கண்காணிப்புக்கு (the most comprehensive, intrusive inspectio) உட்படுத்தப் பட்டுள்ளது என்றார்.
அமெரிக்க ஈரானிய உறவில் மாற்றம்
1979-ம் ஆண்டு ஈரானில் அமெரிக்க சார்பு மன்னர் ஷாவிற்கு எதிராக நடாந்த மதவாதப் புரட்சிக்குப் பின்னர் அமெரிக்க ஈரானிய உறவு ஒரளவிற்கு சீரடைந்துள்ளது. இதற்கு எடுத்துக் காட்டாக ஈரான் கைது செய்த இரண்டு அமெரிக்கக் கடற்படை வீரர்கள் எதிர்பார்த்ததிலும் பார்க்க துரிதமாகவும் (24 மணித்தியாலத்தினுள்) சுமூகமாகவும் விடுவிக்கப் பட்டுள்ளனர். அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஜோன் கெரியும் அமெரிக்காவில் படித்த ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் மொஹமட் ஜவார் ஜரிஃப்பும் தேவைப்படும் போதெல்லாம் ஒருவருடன் ஒருவர் தொலைபேசியீல் உரையாடுகின்றனர். அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையில் 1981-ம் ஆண்டில் இருந்து வந்த நிதிப் பிணக்குத் தீர்க்கப்பட்டுள்ளது.
ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானி(Hassan Rouhani)
ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானி 2013-ம் ஈரானின் மீதான பொருளாதாரத் தடையை நீக்குவேன் என்ற உறுதி மொழியுடன் தேர்தலில் போட்டியிட்டு எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றார். ஈரானின் பல அதிகார மையங்கள் உள்ளன:
1. மக்களால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப் படும் அதிபர்
2. மக்களால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும்290 உறுப்பினர்களைக் கொண்ட பாராளமன்றம்.
3. மக்களால் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை 88 உறுப்பினர்களைக் கொண்ட அறிஞர்கள் சபை.
4. அறிஞர் சபையால் தேர்ந்தெடுக்கப்படும் உச்சத் தலைவர் - தற்போது இருப்பவர் அலி கொமெய்னி. ஆரம்பத்தில் இருந்தவர் அயத்துல்லா கொமெய்னி.தேர்தல்களில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களும் 12 உறுப்பினர்களைக் கொண்ட Guardian Council எனப்படும் காப்பாளர்கள் சபையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்தப் பன்னிரண்டு உறுப்பினர்களில் அறுவர் இஸ்லாமியச் சட்டத்தில் வல்லவர்களாக இருக்க வேண்டும். எஞ்சிய ஆறு பேரும் பல்வேறு சட்டத் துறைகளில் வல்லவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் பன்னிருவரையும் உச்சத் தலைவர் நியமிப்பார். அதிகாரம் மிக்க இச்சபையை நியமிக்கும் உச்சத்தலைவரே ஈரானில் அதிகாரம் மிக்கவராவார். ஈரானின் சிறப்புப் படையணியான Quds Force ஈரானில் உள்ள ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அதிகார மையமாகும். காப்பாளர் சபை உறுப்பினரை நியமிக்கும் உச்சத் தலைவர் ஈரானில் அதிகாரம் மிக்கவராவார். தற்போது உள்ள உச்சத் தலைவர் அலி கொமெய்னி வல்லரசு நாடுகாளுடன் யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பான பேச்சு வார்த்தைக்கு உரிய அதிகாரம் வழங்கியிருந்தார்.
தேர்தலை ஒட்டிய நகர்வுகள்
ஈரானியப் பாராளமன்றத்திற்கான தேர்தல் 2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16-ம் திகதி நடக்கவிருக்கின்றது. இந்தத் தேர்தலில் அதிபர் ஹசன் ரௌஹானியைப் போலவும் அவரது கரங்களை வலுப்படுத்தும் விதத்திலும் தாராண்மைவாத உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்படுவதற்கு ஏதுவாக ஈரான் மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது. ஈரானும் தனது யூரேனியப் பதப்படுத்துதலை 2015 ஜூலை மாதம் ஈரானும் ஐந்து வல்லரசுகளும் ஜேர்மனியும் இணைந்த P-5+1 என்னும் குழுவுடன் செய்து கொண்ட உடன்பட்டிக்கையின் படி ஈரான் மாற்றியமைத்துள்ளது. உடனடியாக ஈரான் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்பட்டது. 2015 ஜூலை மாதம் உடன்படிக்கை கைச்சாத்திட்ட போது 2016 ஜூலை மாதம் உடன்படிக்கை நிறை வேற்றப்படும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் ஈரானியப் பாராளமன்றத் தேர்தலுக்கு முன்னர் அவசரமாக உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டு ஈரான் மீதான பொருளாதாரத் தடை நீக்கப் பட்டுள்ளது.ஆனால் பொருளாதாரத் தடை நீக்கப் பட்டதால் ஏற்படும் நன்மைகள் பொது மக்களைப் போய்ச் சேர பல மாதங்கள் எடுக்கும்.
ஈரான் பணத்தை என்ன செய்யும்?
ஈரானிற்குச் சொந்தமான ஐம்பது பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகளில் முடக்கி வைக்கப் பட்டிருந்தது. அவை இப்போது விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த நிதியை ஈரான் ஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்ற இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்குக் கொடுக்கும், சிரியாவில் பஷார் அல் அசாத்தின் ஆட்சியைப் பாதுகாக்க மேலும் உதவிகளைச் செய்யும் என சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் சொல்கின்றன. இதே கருத்தை இஸ்ரேலும் கொண்டுள்ளது. ஈரானில் உள்ள தீவிரவாதிகளின் நோக்கம் அதுவாகத்தான் இருக்கும். ஆனால் ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானி இவர்களுடன் போராட வேண்டிய நிலையில் இருக்கின்றார். அவரது கைகளை வலுப்படுத்த சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளினதும் இஸ்ரேலினதும் ஆட்சேபனைகளுக்கு இடையில் ஈரான் மீதான பொருளாதாரத் தடை நிக்கப் பட்டுள்ளது.
முதலீடு தேடும் ஈரான்
ஈரானுக்கு தற்போது ஒரு ரில்லியன் வெளிநாட்டு முதலீடு தேவைப் படுகின்றது. அதற்கு ஓர் உறுதியான ஆட்சியும் அமைதியான சூழலும் அவசியம். ஈரானில் உள்ள தீவிரவாதப் போக்குடையவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் வெளிநாட்டு முதலீடு சாத்தியமல்ல. அமெரிக்க நிறுவனங்கள் ஈரானில் முதலீடு செய்யத் தயக்கம் காட்டூகின்றன. ஈரான் உடனடியாக மேற்கு ஐரோப்பாவிலிருந்து114 Airbus jets வாங்கவிருக்கின்றது. பொருளாதாரத் தடை நீக்கப் பட்ட மறுநாளே ஐரோப்பிய அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் ஈரானுக்குப் படையெடுத்தனர். இரசியா தனது படைக்கலன்களை பெருமளவில் ஈரானுக்கு விற்பனை செய்யலாம். துருக்கிக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்த இரசியா அங்கு இருந்து இறக்குமதி செய்யாமல் போன பொருட்கள் பலவற்றை ஈரானில் இருந்து இறக்குமதி செய்யலாம். ஆனால் இரசியாவிற்குப் பேரிடியாக அமையப் போவது ஈரான் எரிபொருள் ஏற்றுமதி செய்யப் போவதால் ஏற்படப் போகும் எரிபொருள் விலை வீழ்ச்சியே. 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடக்க விருக்கும் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஈரானுக்கு எதிரான அல்லது இஸ்ரேல் சொற்படி ஆடும் அல்லது இரண்டும் இணைந்த ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப் பட்டால் ஈரானில் நிலைமைகள் தலைகீழாகலாம் எனச் சில முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர்.
எரியும் எரிபொருள் விலை வீழ்ச்சிக்கு ஈரானும் எண்ணெய் ஊற்றும்
ஈரான் தான் ஏற்கனவே உற்பத்தி செய்த 50 மில்லியன் பீப்பாய்கள் மசகு எண்ணெயை கடலில் கப்பல்களில் வைப்பிலிட்டுள்ளது. ஈரான் இனி நாள் ஒன்றிற்கு ஒரு மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்ய விருக்கின்றது. மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 20 டொலர்களாகக் குறைவது நிச்சயம் என்றும் பத்து டொலர்களாக வீழ்ச்சியடைவது சாத்தியம் என்றும் சொல்லப் படுகின்றது. இது இரசியா, வெனிசுவேலா போன்ற நாடுகளை மோசமாகப் பாதிக்கப்படவிருக்கின்றன. எல்லா எரிபொருள் உற்பத்தி நாடுகளும் பாதிக்கப்படும். சீனாவிலும் இந்தியாவிலும் எரிபொருளுக்கு விதிக்கப் படும் வரிகள் அதிகரிக்கப் படும். இது அந்த நாடுகளில் பாதீட்டுப் பற்றாக் குறையை சீர் செய்ய உதவும்.
ஈரானின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அதன் மீது அமெரிக்கா செய்த பொருளாதாரத்தடைகள் தொடர்ந்தும் இருக்கும். அதே வேளை ஈரானின் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை உற்பத்தி தொடர்பாக அமெரிக்கா சில புதிய தடைகளையும் விதித்துள்ளது. ஈரானின் எதிர்கால நகர்வுத் திசையில் பெப்ரவரி மாதம் நடக்கும் தேர்தல் தீர்மானிக்கும்.

Monday, 18 January 2016
பங்குச் சந்தையில் சீனாவின் சண்டித்தனம்
முதலாளித்துவப் பொருளாதாரம் போல் சரிவு (recession) மீட்சி (recovery) என்ற சுழற்ச்சிக்குள் அகப்படாமல் சீனா ஆட்சியாளர்கள் கால் நூற்றாண்டுகளாக சீனாவின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தி தொடர் வளர்ச்சிப் பாதையில் இன்றுவரை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். 2016இலும் சீனப் பொருளாதாரம் ஐந்துக்கு மேற்பட்ட மொத்தத் தேசிய உற்பத்தி அதிகரிப்பைப் பெறும்.
சீனாவின் இரு பங்குச் சந்தைகள்
2016-ம் ஆண்டின் முதல் வாரத்தில் சீனப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி உலகை உலுப்பியது. சீனாவின் பொருளாதாரத்தைப் பற்றி கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன. 2015-ம் ஆண்டின் நடுப்பகுதியிலும் சீனப் பங்குச் சந்தை வீழ்ச்சியைச் சந்தித்த போதும் எதிர்மறையான கருத்துக்கள் பல சீன பொருளாதாரத்திற்கு எதிராக முன்வைக்கப் பட்டன. சீனா இரு பொருளாதாரக் கட்டமைப்புக்களைக் கொண்டது. ஒன்று பிரதான சீனாவிலும் மாற்றது ஹொங்கொங்க் தீவிலும் இருக்கின்றன. அதே போல் ஏ-பங்குகள் என்றும் பி-பங்குகள் என இருவகையான பங்குகள் இருக்கின்றன. ஏ-பங்குகள் உள்நாட்டு நாணயத்திலும் பி-பங்குகள் அமெரிக்க டொலரிலும் விற்று வாங்கப்படும். ஹொங்கொங்இலும் பிரதான சீனாவில் உள்ள ஷென்ஜென் நகரிலும் இரு பங்குச் சந்தைகள் உள்ளன. சீன நாணயத்திற்கும் இரு முகங்கள் உள்ளன. ஒரு முகம் ஹொங்கொங்கிலும் மறுமுகம் பிரதான சீனாவிலும் இருக்கின்றன. இரு இடங்களிலும் சீன நாணயத்தின் பெறுமதி வேறுபட்டதாக இருக்கும்
சீனா சந்தைக்குச் சென்ற நீண்ட பாதை
சீனாவின் அரச முதலாளித்துவப் பொருளாதாரத்தை சந்தைப் பொருளாதாரமாக மாற்ற எடுக்கும் முயற்ச்சி பல சவால்களைச் சந்திக்கின்றது. 1978-ம் ஆண்டு சீனப் பொருளாதாரத்தை திட்டமிடுதலையும் கட்டுப்படுத்தலையும் சீன ஆட்சியாளர்கள் தளர்த்தத் தொடங்கினர். சீனப் பொருளாதாரத்தின் செயற்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் இம் முயற்ச்சி தொடங்கப் பட்டது. ஜப்பான், தென் கொரியா, தாய்வான், சிங்கப்பூர், ஹொங்கொங் ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பார்த்து சீனா கற்றுக்கொள்ள அப்போது விரும்பியது.1979இல் வெளிநாட்டு முதலீடுகள் அனுமதிக்கப்பட்டு 1980இல் சீனா பன்னாட்டு நாணய நிதியத்திலும் உலக வங்கியிலும் இணைந்து கொண்டது. அத்துடன் சீனாவில் பல சிறப்புப் பொருளாதார வலயங்கள் வெளிநாட்டு முதலீடுகளுக்கு வசதியாக உருவாக்கப் பட்டன. 1981இல் சீன விவசாயிகள் இலாபமீட்ட அனுமதிக்கப் பட்டனர். 1982இல் சீனப் பொருளாதாரத்தைச் சந்தைப் பொருளாதாரமாக மாற்றும் ஐந்தாண்டுத் திட்டம் உருவாக்கப்பட்டது. 1984இல் சீனக் கரையோர நகரங்கள் பதின்நான்கு சிவப்பு நாடா இல்லாமலும் வரிவிலக்கு உரித்துடையவையாகவும் ஆக்கப்பட்டு வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு திறந்து விடப்பட்டன. 1986 சந்தைப் பொருளாதாரத்திற்கு உரிய சட்டங்கள் இயற்றப்பட்டன. சீனப் பொதுவுடமைக் கட்சியின் 13வது மாநாட்டில் அரச துறைக்கு மாற்றீடாகத் தனியார் துறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து சீன நாணயத்தின் அதிகரித்த பெறுமதியை உணர்ந்து கரையோர அபிவிருத்தி உபாயங்கள் வகுக்கப் பட்டன. 1988இல் தனியுடமை, பங்குடமை, வரையறுக்கப்பட்ட பொறுப்புடை பங்காண்மை ஆகியவற்றை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டது. பின்னர் 1990இல் ஷங்காய், ஷென்ஜென் ஆகிய நகரங்களின் பங்குச் சந்தைகள் திறக்கப்பட்டன. 1992இல் சமுகவுடமைச் சந்தைப் பொருளாதாரம் என்பது சீனப் பொருளாதாரத்தின் சீர்திருத்த இலக்காக பதின்நான்காவது பொதுவுடமைக் கட்சியின் மாநாட்டில் முடிவு செய்யப் பட்டது. அதைத் தொடர்ந்து வங்கிச் சீர்திருத்தம் செய்யப்பட்டது. 1997இல் ஆசியாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி சீனாவைச் சிறிதளவே பாதித்தது. 1994இல் சீன நாணயம் முகாமைப்படுத்தப்பட்டு நாணயச் சந்தையில் மிதக்க விடப்பட்டது (a market-based, but managed floating exchange rate system). அத்துடன் முழுச் சீனாவிலும் வெளிநாட்டு முதலீடு அனுமதிக்கப்பட்டது. 1997இல் சீனாவின் உள்நாட்டுக் கொள்வனவை அதிகரிப்பதின் முக்கியத்துவம் உணரப்பட்டது. 1999இல் ஐக்கிய அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டு சீனா உலக வர்த்தக நிறுவனத்தில் இணைந்து கொண்டது. 2001-ம் ஆண்டு சீன மக்கள் பி-பங்குகளில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சீனாவில் விலைக் கட்டுப்பாடு அகற்றப்பட்டது. விவசாய ஏற்றுமதிக்கான உதவிகள் நீக்கப்பட்டன. 2003-இல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சீனாவின் ஏ-பங்குகள் வாங்க அனுமதிக்கப்பட்டனர்.
சீனாவும் உலக வர்த்தகமும்
1977இல் உலக வர்த்தகத்தில் சீனாவின் பங்கு ஒரு விழுக்காடு மட்டுமே. சீனா தனது பொருளாதாரத்தை சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தியதால் உலக வர்த்தகத்தில் அது அமெரிக்காவையும் மிஞ்சி முதலாம் இடத்தில் இருக்கின்றது. தற்போது சீனா ஒரு சந்தைப் பொருளாதார நாடுமல்ல முழுமையான அரச கட்டுப்பாடுடைய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுமல்ல. இரண்டுக்கும் இடையில் தடுமாறி நிற்கின்றது. இது ஓர் ஆபத்தான இரண்டும் கெட்டான் நிலை. இதை எக்கொனொமிஸ்ற் சஞ்சிகை இப்படிச் சொல்கின்றது:
Yet China is not normal. It is caught in a dangerous no-man’s-land between the market and state control. And the yuan is the prime example of what a perilous place this is. After a series of mini-steps towards liberalisation, China has a semi-fixed currency and semi-porous capital controls. Partly because a stronger dollar has been dragging up the yuan, the People’s Bank of China (PBOC) has tried to abandon its loose peg against the greenback since August; but it is still targeting a basket of currencies. A gradual loosening of capital controls means savers have plenty of ways to get their money out.
உடைக்கப்பட்ட மடை
கடந்த ஆறுமாதமாக சீனாவில் இருந்து வெளியேறும் மொத்த மூலதனத்தின் விகிதம் ஆண்டு ஒன்றிற்கு ஒரு ரில்லியன்கள் என்ற நிலையை எட்டியுள்ளது. சீன நாணயத்தின் பெறுமதி குறையப் போகின்றது என்ற எதிர்பார்ப்புடம் சீனாவில் இருந்து ஒரு புறம் நிதி சீனாவில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்க மறுபுறம் சீனப் பங்குகள் விலை வீழ்ச்சியடையப் போகின்றது என்ற அச்சத்தில் நிதி சீனாவில் இருந்து வெளியேறுகின்றது. இது சீன நாணயத்தின் பெறுமதியை பெரிதும் பாதிக்கின்றது. 2015-ம் ஆண்டு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதியிலும் பார்க்க 595பில்லியன் டொலர்கள் அதிகமானதாகும். சீனப் பொருளாதாரம் வலுவிழந்ததால் அதன் இறக்குமதி பெரு வீழ்ச்சியை அடைந்துள்ளது. சீனாவில் இருந்து முதலீடு மடைதிறந்த வெள்ளம் போல் வெளியேறுகின்றது. சீன மக்கள் சீனாவின் பொருளாதாரத்தின் மீது நம்பிக்கையை இழக்கின்றனர். சீனப் பொருளாதாரம் ஆபத்திற்கு உள்ளாகியுள்ளது அல்லது சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது. பெரிய ஆபத்தா அல்லது சாதாரண சிக்கலா எனச் சொல்ல முடியாமல் இருக்கின்றது. காரணம் சீனாவின் புள்ளி விபரங்கள் நம்பகத் தன்மை வாய்ந்தவை அல்ல. சீனாவின் நாணயத்தின் பெறுமதி குறையப் போகின்றது என்றோ அல்லது சீனப் பங்குகள் விலை வீழ்ச்சி அடையப் போகின்றன என்றோ முதலீட்டாளர்கள் கருதினால் அவர்கள் சீனாவில் உள்ள முதலீட்டை விற்றுவிட்டு வெளியேறுவார்கள். இது சீனாவின் நாணயத்தின் பெறுமதியையும் பங்குகளின் விலைகளையும் மேலும் வீழ்ச்சியடையச் செய்யும்.
கலங்கிய சீனப் பங்குச் சந்தை
சீனாவின் கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டி தொடர்ந்து குறைந்து கொண்டு போனதால் சீனப் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடையத் தொடங்கின. 2016 ஜனவரி 7-ம் திகதி ஷாங்காய் பங்குச் சுட்டி 11.7 விழுக்காட்டும், ஷென்ஜென் பங்குச் சுட்டி15.2 விழுக்காடும் வீழ்ச்சியடைந்து 1.1ரில்லியன் டொலர்கள் பெறுமதியான் சொத்து இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் இரண்டு சுட்டிகளும் முறையே 2விழுக்காடும் 1.1 விழுக்காடும் அதிகரித்தன. இந்த அதிகரிப்புக் காரணம் சீன அரசின் தலையீடே. ஜனவரி 13-ம் திகதி சீனாவின் வர்த்தகம் தொடர்பான் சாதகமான புள்ளிவிபரங்கள் வெளிவந்த போதும் அது பங்குச் சந்தையில் சாதகமான நிலையை உருவாக்கவில்லை.
சீனாவின் கடன்பளு: பயன்தராப்புள்ளியிலா(Point of no retrun)
சீனாவின் கடன்பளு அதன் மொத்தத் தேசிய உற்பத்தியில் 280விழுக்காடாக இருக்கின்றது. சீன அரசு பொருளாதாரத்தைத் தூண்டுவதற்கு அதிகரிக்கும் பணப்புழக்கம் ஏற்கனவே வாங்கிய கடன்களை அடைக்கவே பெரிதும் பாவிக்கப் படுகின்றது. பணப்புழக்கத்தை அதிகரிக்கப் பொருளாதாரத்தினுள் செலுத்தப் படும் நிதி முழுவதும் கடன்களை அடைக்கப் பயன்படுத்தப்படும் போது அது பொருளாதார உற்பத்தியை அதிகரிக்காத நிலையை எட்டும். கடந்த பத்து ஆண்டுகளாக சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் சீனாவின் உள்கட்டுமானங்களில் செய்யப் பட்ட முதலீடுகள் அரைப்பங்காக இருந்தன. சீனாவின் பொருளாதார வளர்ச்சி சீனாவை ஒரு மலிவான தொழிலாளர்களைக் கொண்ட நாடு என்ற நிலையில் இருந்து நீக்கி விட்டது. பங்களாதேசம், வியட்னாம் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவில் தொழிலாளர் ஊதியம் அதிகமானதாகும். இது சீனாவின் ஏற்றுமதியைப் பாதித்துக் கொண்டிருக்கின்றது.
சுதந்திரமான சந்தைப் பொருளாதாரம்
சீனா சந்தையை அரச தலையீடு இல்லாமல் சுதந்திரமாக இயங்க விடவேண்டும் என்ற கருத்து இப்போது பரவலாக முனவைக்கப் படுகின்றது. சுதந்திரமான சந்தைப் பொருளாதாரம் என ஒன்று இருந்ததுமில்லை! இருக்கப் போவதுமில்லை! அமெரிக்கா உட்பட எல்லா சந்தைப் பொருளாதார நாடுகளும் சந்தையில் தலையிடுவதுண்டு ஆனால் சீனா சந்தையில் சண்டித்தனம் விடுகின்றது. தான் நினைத்தபடி சந்தையில் எல்லாம் நடக்க வேண்டும் என நினைக்கின்றது. பங்குச் சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்படும் போது வட்டி விழுக்காட்டை குறைப்பதும் வங்கிகள் நடுவண் வங்கிகளில் வைத்திருக்க வேண்டிய வைப்பீட்டைக் குறைப்பதும்தான் பொதுவான நடவடிக்கைகள். ஆனால் சீனா பல தடவை வட்டி விழுக்காட்டைக் குறைத்ததும் வைப்பீட்டுக் கோரிக்கையைக் குறைத்ததும் பங்குச் சந்தையில் விலை வீழ்ச்சியைத் தடுக்கவில்லை. இதனால் சீனா சண்டித்தன நடவடிக்கைகளில் இறங்கியது.
சீனாவின் சண்டித்தனங்கள்
1. சீனாவின் சண்டித்தனம்-பெரு நிறுவனங்களுக்குத் தடை
சீனாவின் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைவதைத் தடுக்க சீனப் பெரு நிறுவன்ங்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடாமல் சீன அரசு தடை விதித்தது.
2. சீனாவின் சண்டித்தனம்-புதிய பங்கு விற்பனைத் தடை
சீன அரச நிறுவனங்கள் புதிதாக பங்கு விற்பனை செய்வது இடை நிறுத்தப்பட்டது. ஜூலை
3. சீனாவின் சண்டித்தனம் - சுற்று முறிப்பு
சீனாவின் பங்குச் சந்தையில் திடீர் வீழ்ச்சி ஏற்படுவதைத் தடுக்க சீனா ஒரு சுற்று முறிப்பை (Circuit Breaker)அறிமுகப் படுத்தியது. அதன் படி சீனப் பங்குகளின் விலைகள் 5 விழுக்காடு விழுந்தால் பங்குகளை விற்கவோ வாங்கவோ முடியாதபடி பங்குச் சந்தை தற்காலிகமாக மூடப்படும்.இந்த சுற்று முறிப்பை 2016 ஜனவரி 4-ம் திகதி சீனா அறிமுகம் செய்தது. ஆனால் நான்கு விழுக்காடு விலை வீழ்ச்சி வந்தவுடன் சந்தை மூடப் படப்போகின்றது என உணர்ந்த முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்கத் தொடங்கி விட்டார்கள். இதனால் பங்குகளின் விலைகள் மேலும் துரிதமாகச் சரியத் தொடங்கியது. இதனால் சுற்று திரும்பப் பெறப்பட்டது.
4. சீனாவின் சண்டித்தனம்- குறுகியகால விற்பனைத் தடை
குறுகிய கால விற்றல் (short selling) தடை செய்யப்பட்டு அதை மீறுபவர்கள் கைது செய்யப்படலாம் என மிரட்டல் சீன அரசால் விடுக்கப்பட்டது. short selling என்பது பங்குளை வாங்க முன்னரே விற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வது. ஆனால் சீன ஆட்சியாளர்கள் சீனப் பங்குகளின் விலை அளவுக்கு மிஞ்சி மிகைப்படுத்தப் பட்டிருந்தன என்பதை உணரவில்லை.
சீனா ஆட்டம் காணலாம் கவிழாது
அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் பங்குச் சந்தை வர்த்தகம் அவற்றின் மொத்தத் தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் நூறு விழுக்காட்டிற்கும் அதிகமாக நடக்கும். ஆனால் சீனாவில் நடக்கும் பங்கு வர்த்தகம் சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தியின் மூன்றில் முப்பது விழுக்காடு மட்டுமே. இதனால் சீனப் பங்குச் சந்தைச் சுட்டெண் சீனப் பொருளாதார வளர்ச்சியின் சுட்டியாகக் கருத முடியாது. சீனா பல நெருக்கடிகளைச் சந்திக்கின்றது. அது சோவியத் ஒன்றியம் போல் கவிழப்போவதில்லை. ஜப்பானைப் போல் ஒரு தொடர் பொருளாதார மந்த நிலையையும் அடையப் போவதில்லை. அதன் பொருளாதார வளர்ச்சியின் வேகம் தொடர்ந்து குறைந்து கொண்டே போகும்.

Wednesday, 6 January 2016
தென் சீனக் கடலில் சீனாவின் இன்னும் ஒரு நகர்வு
2016 ஜனவரி 4-ம் திகதி தென் சீனக் கடலில் தனது இறைமைப் பிராந்தியத்தினுள் அத்து மீறியதாக வியட்னாம் குற்றம் சாட்டியுள்ளது. Spratly தீவுக் கூட்டத்தில் உள்ள Fiery Cross என்னும் பவளப் பாறையை மேடுறுத்தி சீனா உருவாக்கிய செயற்கைத் தீவில் சீனாவின் போர் விமானம் தரையிறங்கியதையே வியட்னாம் தனது இறைமைக்குள் சீனா அத்து மீறியதாகச் சொல்கின்றது. வியட்னாம் வெளியுறவுத் துறை பேச்சாளர் லீ ஹை பின் Fiery Crossஇல் விமான ஓடுபாதை சட்ட விரோதமாக நிர்மாணிக்கப் பட்டதாகத் தெரிவித்தார்.
சீன வெளியுறவுத் துறை அமைச்சர் சீனாவின் இறையாண்மைக்குள் புதிதாக நிர்மாணிக்கப் பட்ட தீவுக்குள்தான் தமது விமானம் பரீட்சார்த்தமாக தரையிறக்கப் பட்டதாகத் தெரிவித்தார் என சீனச் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா அறிவித்துள்ளது. தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ், வியட்னாம், மலேசியா, புரூனே, போன்ற நாடுகள் தமது கடல் எல்லைகள் தொடர்பாக சீனாவுடன் முரண்படுகின்றன.
சீனா தென் சீனக் கடலில் உருவாக்கும் தீவுகளை செய்மதிகள் மூலம் எடுத்த படங்களில் இருந்து அங்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள், சிறப்புப் படைகளுக்கு எதிரான நடவடிக்கை நிலையங்கள், ரடார் எனப்படும் கதுவிக் கோபுரங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், பாரிய கப்பல்களுக்கான துறைமுகங்கள் உருவாக்கும் வாய்ப்புக்கள் இருப்பதாகக் கருதப் படுகின்றது.
தென் சீனக் கடலில் சீனாவின் நிலைப்பாட்டை அமெரிக்காவும் எதிர்க்கின்றது. சீனா பன்னாட்டுக் கட்ற்பரப்பில் சுந்திரக் கடற்போக்கு வரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தீவுகளைச் செயற்கையாக உருவாக்குவதாக அமெரிக்கா சொல்கின்றது. சீனாவின் தீவுகளுக்கு சவால் விடும் வகையில் அதன் மேலாகத் தனது போர் விமானங்களைப் பறக்க விட்டதுடன் தன் நாசகாரிக் கப்பலையும் அதற்கு அண்மையாகக் கொண்டு சென்றது. அமெரிக்கப் வெளியுறவுத் துறைச் செயலர்அஸ்டன் கார்ட்டர் ஒரு போர் உருவாகக் கூடிய அபாயம் தென் சீனக் கடலில் உள்ளது என்றார். அமெரிக்காவின் அணுவலுவில் இயங்கும் Nimitz வகையைச் சேர்ந்த பெரிய விமானம் தாங்கிக் கப்பலான USS Ronald Reagan, வழிகாட்டு ஏவுகணைகள் தாங்கி நாசகாரிக் கப்பல்கள், குண்டு வீச்சு விமானங்கள் போன்றவை தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் சேவையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.
எரிபொருள் பெருமளவில் இருக்கின்றது என நம்பப்படும் தென் சீனக் கடலில் 2,740,000 சதுர மீட்டர் கடற்பரப்பை சீனா தனதாக்க முயல்கின்றது. ஆண்டு ஒன்றிற்கு நான்கு ரில்லியன் டொலர்கள் பெறுமதியான வர்த்தகம் தென் சீனக் கடலின் ஊடாக நடக்கின்றது. சீனா Fiery Crossஇல் உருவாக்கிய செயற்கைத் தீ்வு 3000மிட்டர் அல்லது இரண்டு மைல் நீளமானது. இதில் பெரிய போர் விமானம் தரையிறங்க முடியும். இதனால் இந்தச் செயற்கைத் தீ்வு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த்ததாக உள்ளது.
தென் சீனக் கடலின் முக்கியத்துவத்திற்கு இரு பெரும் காரணங்கள் உள்ளன. முதலாவது கடற்போக்கு வரத்து முக்கியத்துவம். இரண்டாவது எரிபொருள் மற்றும் கனிம வள இருப்பு. உலகக்கடற்போக்கு வரத்தில் 30 விழுக்காடு தென் சீனக் கடலினூடாகச் செல்கின்றது. தென் சீனக்கடலில் 213 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. எரிவாயு 900 ரில்லியன் கன அடி இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான கனிம வளங்களும் கடலுணவு வளங்களும் உண்டு. 1974இலும் 1988இலும் சீனாவும் வியட்னாமும் ஸ்பிரட்லிதீவுகளுக்காக மோதிக் கொண்டன. பிலிப்பைன்ஸ் வியட்னாமுடனும் மலேசியாவுடனும் மோதக் கூடிய நிலைமைகளும் ஏற்பட்டிருந்தன.
சீனாவின் இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பல் உருவாக்கியதும், ஆபிரிக்காவில் ஒரு கடற்படைத் தளம் அமைத்ததும், ஆறு குண்டு வீச்சு விமானங்களை பசுபிக் பிராந்தியத்தில் பறக்க விட்டமையும் சீனா தனது பிராந்திய ஆதிக்கத்தில் அதிக கவனம் செலுத்துகின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

Monday, 4 January 2016
2016: வரலாறு படைக்குமா பதினாறு?
2016-ம் ஆண்டு உலகப் பொருளாதாரத்திற்கு சவால் மிக்க ஆண்டாக அமையும். பன்னாட்டு நாணய நிதியம் 2016-ம் ஆண்டு 3.5 விழுக்காடு வளரும் என எதிர்பார்க்கின்றது. இது 2008-ம் ஆண்டுக்கு முன்னரான பத்தாண்டுகால சராசரி வளர்ச்சியான 4.5விழுக்காடுடன் ஒப்பிடுகையில் குறைவானதே. ஐக்கிய அமெரிக்காவினதும் பிரித்தானியாவினதும் பொருளாதாரங்க்ள் உள் நாட்டுக் கொள்வனவால் தாக்குப் பிடிக்கின்றன. ஆனாலும் அவற்றின் வளர்ச்சிகள் 2016இல் போதுமானதாக இருக்காது. ஐரோப்பிய ஒன்றியம் தனது பொருளாதாரத்தை நிலை நிறுத்த தொடர்ந்தும் பல ஊக்குவிப்பு நடவடிக்கைகளைச் செய்ய வேண்டியிருக்கும். ஐரோப்பாவினதும் வட அமெரிக்காவினதும் பொருளாதாரங்களுக்கு ஏற்றுமதித் துறையில் இருந்து தூண்டுதல்கள் போதிய அளவு கிடைக்காத அளவிற்கு வளர்முக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி போதியதாக இருக்காது. எரிபொருள் உற்பத்தி நாடுகளுக்கான ஏற்றுமதிகளும் வீழ்ச்சியடையும். எரிபொருள் உற்பத்தி நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தில் தங்கியிருக்கும் பொருளாதாரங்களும் 2016-ம் ஆண்டு பாதிக்கப்படும். உலக நாடுகளிடையே ஏற்றுமதிக்கான போட்டிகள் தீவிரமடையும். நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தமது நாணயங்களின் பெறுமதியைக் குறைக்க முயலும். உள் நாட்டு வேலைவாய்ப்புக்களை வளர்க்க சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, பிரேசில், இரசியா ஆகிய நாடுகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடும். உலகெங்கும் பகுதி நேர வேலை செய்பவர்களின் தொகை அதிகரிக்கும். அரசியல் கட்சிகள் மக்களிடம் தங்கள் செல்வாக்கை உயர்த்துவதற்காகக் கடைப்பிடிக்கும் பரப்பியற் கொள்கைகள் உலகெங்கும் முனைப்புப் பெறும்.
ஐக்கிய அமெரிக்காவின் வட்டியும் முதற் குட்டியும்
அமெரிக்க மைய வங்கி 2016-ம் ஆண்டு நான்கு தடவைகள் தனது வட்டி விழுக்காட்டை உயர்த்தும் என Goldman Sachs Group Inc இன் பொருளியல் நிபுணர்கள் எதிர்வு கூறுகின்றார்கள். உலக விலைவாசி உயர்வு அந்த அளவிற்கு அதிகமாக இருக்கும் என்கின்றனர் அவர்கள். ஆனால் HSBC. 2015இறுதியில் சீனப் பொருளாதாரம் தொடர்பான சாதகமற்ற புள்ளி விபரங்களும் எரிபொருள் விலை தொடர்ந்து சரிவதும் HSBC Holdings Plc இன் பொருளியல் நிபுணர்களின் வாதத்திற்கு வலுச் சேர்த்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் 2016 நவம்பரில் தெரிவு செய்யப் படுவாரா?
சீனா அடங்காது அடக்கி வாசிக்கும்
தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் சீனா 2016-ம் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கான நகர்வுகளைச் செய்யும். எந்த வித விட்டுக்கொடுப்புக்களையும் அது செய்யாது. ஆனால் ஒரு போர் உருவாகுவதை அது எப்போதும் தவிர்த்துக் கொண்டே இருக்கும். கிழக்குச் சீனக் கடலில் புதிதாகத் தீவுகள் எதையும் சீனா உருவாக்காது என எதிர்பார்க்கலாம். ஆனால் ஏற்கனவே உருவாக்கிய தீவுகளில் தனது கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும். ஏற்றுமதியிலும் முதலீட்டில்லும் தங்கி இருக்கும் சீனப் பொருளாதாரத்தை உள் நாட்டுக் கொள்வனவை நோக்கி நகர்த்தும் சீனாவின் முயற்ச்சி 2016இல் தீவிரப்படுத்தப்படும். சீனா ஆட்சியாளர்கள் பொருளாதாரத்தின் மீதான தமது கட்டுப்பாடுகளை மட்டுப்படுத்தப் பட்ட அளவில் மட்டுமே தளர்த்துவார்கள். சந்தைப் பொருளாதாரமாகச் சீனப் பொருளாதாரத்தை மாற்றும் முயற்ச்சி மந்த கதியிலேயே நடக்கும். ஆனாலும் பொதுவுடமைக் கட்சியினர் நாட்டின் மீதான தமது கட்டுப்பாட்டைத் தளர்த்த மாட்டார்கள். சீனா தனது நாணயத்தின் பெறுமதியை 2016இலும் தேய்மானம் அடைய அனுமதிக்கும்.
நேட்டோ விரிவாக்கம்
2016-ம் ஆண்டு மொண்டிநிக்ரோ நேட்டோவில் இணைக்கப்படலாம். 1500தரைப்படையினரும், 350கடற்படையினரும், 230 விமானப் படையினரும் உள்ள சின்னஞ்சிறிய நாடு நேட்டோவில் இணைவது நேட்டோவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான படைத்துறைச் சமநிலையைப் பெரிதும் பாதிக்காவிட்டாலும் இரசிய அதிபர் புட்டீனை ஆத்திரப்படவைக்கும் ஒரு நிகழ்வாக 2016இல் அமையப் போகின்றது. அடுத்த நேட்டோ உச்சி மாநாடு போலாந்துத் தலைநகர் வார்சோவில் ஜூலை மாதம் 8-ம் 9-ம் திகதிகளில் நடக்கவிருக்கின்றது. உக்ரேனில் இரசியா செய்த தலையீட்டைத் தொடர்ந்து சுவீடன், சுவிற்சலாந்து, பின்லாந்து, ஒஸ்ரியா ஆகிய நாடுகளில் இரசியாவிடமிருந்து பாதுகாப்பதற்கு நேட்டோவில் இணையவேண்டும் என்ற கருத்து வலுவடைகின்றது. ஆனாலும் ஒரு வல்லரசுப் போட்டிக்குள் தாம் சிக்கிக் கொள்ளக் கூடாது என இரசியாவிற்கு அண்மையாக இருக்கும் இந்த நாடுகள் கருதுகின்றன். சேர்பியா நாடு நேட்டோவில் இணைவதற்குத் தயக்கம் காட்டுகின்றது.
வளர்முக நாடுகள்
வளர்முக நாடுகளைப் பொறுத்தவரை ஒரு புறம் அதிகரிக்கும் அமெரிக்க டொலரின் பெறுமதி இறக்குமதிக்குக் கொடுக்க வேண்டிய விலையை அதிகரித்துக் கொண்டிருக்க மறுபுறம் குறையும் சீன நாணயப் பெறுமதி ஏற்றுமதியில் நெருக்கடியை கொடுக்கும். பிரேசில், துருக்கி, நைஜீரியா ஆகிய நாடுகளில் பொருளாதார நெருக்கடிகள் அதிகரிக்கும். மத்திய அமெரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் பொருளாதாரப் பிரச்சனைகள் மோசமடைந்து அரசியற் குழப்பங்களாக மாறும்.
எரிபொருள் உற்பத்தி நாடுகள்
2016-ம் ஆண்டு எரிபொருள் உற்பத்தி நாடுகளுக்கு மிகவும் சோதனை மிகுந்த ஆண்டாக அமையும். மேற்காசியாவில் உள்ள எரிபொருள் உற்பத்தி நாடுகள் தமது அந்நியச் செலவாணிக் கையிருப்பு கரைந்து போவதைக் கண்ணீர் மல்கப் பார்க்க வேண்டிய நிலை உருவாகும். இரசியா, வெனிசுவேலா போன்ற நாடுகள் பல நெருக்கடிகளைச் சந்திக்கும். அமெரிக்காவில் பல எரிபொருள் உற்பத்தி நிறுவனங்கள் நிதி நெருக்கடியால் மூடப்படும். சவுதி அரேபியா போன்ற செல்வந்த நாடுகள் தமது தேசிய வருமானத்தை வேறு முனைப்படுத்த முயற்ச்சி செய்யும்.
ஐரோப்பிய ஒன்றியம்
அகதிகள் வருகையும் அரச செலவில் சிக்கன நடவடிக்கையும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அரசியற் பிரச்சனைகளைத் தீவிரப்படுத்தும். விளடிமீர் புட்டீனின் இரசிய விரிவாக்கக் கொள்கை பாதுகாப்புப் பிரச்சனையை மோசமாக்கும். சீனாவிற்கான ஏற்றுமதி வீழ்ச்சியும் வளரமுடியாமல் தவிக்கும் வளர்முக நாடுகளின் பொருளாதாரமும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பொருளாதார நெருக்கடியையும் மோசமாக்கும். அவ்வப்போது சிறு தீவிரவாதத் தாக்குதல்கள் சில நாடுகளில் நடக்கும். உள்நாட்டுப் பாதுகாப்பு பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும். பொருளாதார ரீதியில் இத்தாலியும் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சேர்க்கப் படவேண்டிய ஒரு நாடாக 2016இல் உருவாகும்.
பிரித்தானியா
பிரித்தானியாவின் அரசியலில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இருப்பதா என்பது தொடர்பான விவாதம் சூடு பிடிக்கும். ஸ்கொட்லாந்து, வேல்ஸ் ஆகிய பிராந்தியப் பாராளமன்றங்களுக்கான தேர்தல் 2016இல் நடைபெறும். வீழ்ச்சியடையும் எரிபொருள் விலை ஸ்கொட்லாந்தின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு கிடைக்கும் ஆதரவைக் குறைக்கும். பிரித்தானிய அரசியலில் பொறிஸ் ஜோன்ஸனின் செல்வாக்கு அதிகரிக்கும். இலண்டன் மாநகர பிதாவிற்கான தேர்தலும் 2016இல் நடக்க விருக்கின்றது. 2016-ம் ஆண்டு வில்லியம் ஷேக்ஸ்பியரின் 400வது நினைவு ஆண்டாகும்.
கலக்கிய ஐ எஸ் கலங்கும் அசாத் நிலைப்பார்
2015-ம் ஆண்டில் உலகை கலக்கிய ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எஸ் என்றும் ஐ எஸ் ஐ எல் என்றும் அழைக்கப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு 2016இல் பல முனை எதிர்ப்புக்களால் கலக்கமடையவிருக்கின்றது. 2015-ம் ஆண்டின் இறுதியிலேயே ஐ எஸ் அமைப்பிற்க்கு பல பிரச்சனைகள் ஆரம்பித்துவிட்டன. அதன் நிதி மூலங்கள் பல அழிக்கப்படலாம். அதன் ஆதிக்க நிலப்பரப்பு சுருக்கப்படலாம். பல தலைவர்களை ஆளில்லாப் போர் விமானங்கள் வேட்டையாடலாம். துருக்கியும் ஐக்கிய அமெரிக்காவும் ஐ எஸ் அமைப்பிற்கு எதிராக நெருக்கமாக இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். 2016-ம் ஆண்டிலும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தை அசைக்க முடியாது.
இணையவெளிப் படைக்கலப் போட்டி
2016இல் பல நாடுகளிடையே இணையவெளிப் போர் முறைமை தொடர்பாகப் போட்டிகள் அதிகரிக்கும். ஒரு நாட்டின் கணனித் தொகுதிகளை ஊடுருவி அவற்றைச் செயலிழக்கச் செய்வது இணையவெளிப் போர் எனப்படும். இணையவெளியில் ஊடுருவித் தாக்குதல்களுக்கும் அப்படிப்பட்ட தாக்குதல்களுக்கும் எதிரான செலவுகளை பல நாடுகள் 2016இல் அதிகரிக்கும்.
இரசியா
இரசியா தனது உலக ஆதிக்கத்தை மீள் நிலை நிறுத்தும் முயற்ச்சியை 2016இலும் தொடரும். ஆனால் மேலும் பல பொருளாதாரப் பின்னடைவுகளை இரசியா 2016இல் சந்திக்க வேண்டிவரும். இது பல உள்நாட்டுக் குழப்பங்களை இரசியாவில் தோற்றுவிக்கும். வேலை நிறுத்தங்கள் பல நடக்கலாம். அவற்றிற்கு எதிராக புட்டீன் பல அடக்குமுறைகளை அவிழ்த்துவிட நிர்ப்பந்திக்கப்படுவார். இது தற்போது உச்சத்தில் இருக்கும் அவரது செல்வாக்கைப் பாதிக்கும். உக்ரேனில் இரசியா சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்து ஒரு உடன்பாட்டுக்கு வரும்.
இந்தியா நகரும்
உலக நாடுகள் பலவும் தமது பொருளாதாரங்களை வளர்ச்சிப் பாதையில் நகர்த்த முடியாமல் தவிக்கும் போது இந்தியா தனது பொருளாதாரத்தை வளரச்சிப் பாதையில் நகர்த்தும். அதை ஓடச் செய்வதற்கு ஊழல் ஒழிப்பும் சிவப்பு நாடா அறுப்பும் செய்வது இந்தியாவில் இலகுவான காரியங்களல்ல.
போக்கை மாற்றும் அமெரிக்கா
மற்ற நாட்டு விவகாரங்களிலும் பிராந்தியப் பிரச்சனைகளிலும் தனது மூக்கை அவசரப்பட்டு மூக்கை நுழைக்கும் போக்கை 2016இல் மாற்றிக் கொள்ளும். மாறாக அதனது நட்பு ஆட்சியாளர்கள் தாமாகப் பிராந்தியப் பிரச்சனையை கையாளத் தூண்டுதலும் உதவிகளும் செய்யும். இதன் மூலம் தனது பாதுகாப்புச் செலவீனக் குறைப்பைச் செய்து பொருளாதாரத்தை மேம்படுத்தும்.
வல்லாதிக்கப் போட்டி
அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் சீனாவையும் இரசியாவையும் வேறு வேறு விதமாகக் கையாளும். சீனாவிற்கு பொருளாதார விட்டுக் கொடுப்புக்களைச் செய்து பிராந்திய ஆதிக்க ரீதியில் நெருக்கடிகளைக் கொடுக்கும். ஆனால் இரசியாவிற்குப் பிராந்திய ரீதியில் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்து பொருளாதார ரீதியில் பல நெருக்கடிகளைக் கொடுக்கும். சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் அதன் பொருளாதாரச் சீர்திருத்தமும் மேற்கு நாடுகளின் பொருளாதாரத்திற்கு அவசியமானவையாக இருக்கும். இரசியாவைப் பொருளாதார ரீதியில் சின்னா பின்னப் படுத்தி விட்டால் பின்னர் அதன் பிராந்திய ஆதிக்கத்தை இலகுவாகக் கட்டுப்படுத்தலாம்
.
2016-ம் ஆண்டு வரலாற்று படைக்கக் கூடிய அளவிற்கு தகராறுகளைத் தீர்க்காது..

Thursday, 31 December 2015
2015இல் உலகம் ஒரு மீள் பார்வை
தொடரும் பொருளாதாரப் பிரச்சனை, சிரியா, ஈராக், லிபியா ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் போர், காசா இரத்தக் களரி, அடங்க மறுக்கும் பலஸ்த்தீனம், ஆதிக்க வெறி கொண்ட இஸ்ரேல், உக்ரேனில் வல்லரசுகளின் முறுகல் நிலை, தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக்கடலிலும் மோதல் நிலை, தொடரும் படைக்கலன்கள் பெருக்கும் போட்டி ஆகியவற்றுடன் 2015-ம் ஆண்டு ஆரம்பமானது. இப் பிரச்சனைகள் யாவும் தீர்க்கப்படாமல் மோசாமாகிக் கொண்டே போகின்றது. உலகப் பொருளாதாரம் தொடர்ந்தும் தீவிர கவனிப்புப் பிரிவிலேயே இருக்கின்றது.
புட்டீனின் ஆண்டு
2015-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சீன அதிபர் ஜி ஜின்பிங், ஜேர்மனிய அதிபர் அஞ்சேலா மெர்கெல் ஆகியோரின் பெயர்கள் உலகச் செய்திகளில் அதிகம் அடிபட்டாலும் கதாநாயகனாகவும் வில்லனாகவும் அதிகம் பார்க்கப் பட்டவர் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன்தான். உள்நாட்டில் எதிர்க்க ஆளில்லாத விளடிமீர் புட்டீனின் செல்வாக்கு பல பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் உச்சத்தில் இருக்கின்றது. நான்கு ஆண்டுகளுக்கு மேல் தொடரும் சிரியப் பிரச்சனையில் அதிபர் அல் அசாத்தின் படைகள் ஆட்டம் காணும் நிலையில் புட்டீன் அதிரடியாக இரசியப் படைகளை அங்கு களமிறக்கி நிலைமையை தலைகீழாக்கினார். இரசியாவின் செய்மதிகளில் பத்துக்கு மேற்பட்டவை தற்போது சிரியாவைக் குறிவைத்துச் செயற்படுகின்றன. செய்மதிகளின் உதவியுடன் துல்லியமாகத் தாக்கும் வழிகாட்டல் குண்டுகள் சகிதம் எப்படி புதிய போர் முறைகளைக் கையாள்வது என்பதில் இரசியப் படைகள் நேரடிப் பயிற்ச்சியில் சிரியாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இரசியாவின் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமையும் சிரியாவில் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எல்லாம் உலக அரங்கில் இரசியா இழந்த நிலையை மீளப் பெறுவதற்கே என்கின்றார் புட்டீன்.
படைத்துறைப் போட்டி ஆண்டு
2008-ம் ஆண்டில் இருந்து உலகின் முன்னணி நாடுகள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த போதிலும் அவை பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்களை உற்பத்தி செய்வதை நிறுத்தவில்லை. ஐக்கிய அமெரிக்காவின் விமானம் தாங்கிகளிற்குச் சவால் விடக் கூடியவகையில் சீனா தனது நீர் மூழ்கிக் கப்பல்களை மேம்படுதியது. பதிலாக அமெரிக்கா நீர் மூழ்கிகளை வேட்டையாடக் கூடிய விமானங்களையும் உழங்கு வானூர்திகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. சீனா ஒலியி்லும் பார்க்க பன்மடங்கு வேகத்தில் பாயும் ஏவுகணைகளை உருவாக்க அவற்றை அழிக்கக்கூடிய லேசர் படைக்கலன்களை உருவாக்குகின்றது.
எரிபொருளின் ஆண்டு
உலகப் பொருளாதாரத்தில் மட்டுமல்ல உலகெங்கும் புவிசார் அரசியலிலும் 2015-ம் ஆண்டில் பெரும் மாற்றத்தை எரிபொருள் விலையே ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியா உலக எரிபொருள் வீழ்ச்சியை இரு முனைக் கத்தியாகப் பயன்படுத்துகின்றது. ஒரு முனையால் அது பல எரிபொருள் உற்பத்தி நிலையங்களை முக்கியமாக ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளின் ஷெல் எரியாவு உற்பத்தி நிலையங்களை மூட வைக்கப் பார்க்கின்றது. மறுமுனையால் சியா முஸ்லிம்களுடன் கை கோர்த்த இரசியாவைப் பழிவாங்கப் பார்க்கின்றது. இரசியாவுடன் ஒப்பிடுகையில் சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்திச் செலவு மிகவும் குறைந்ததாகும். இதனால் சவுதி அரேபியா தனது எரிபொருள் உற்பத்தியைக் குறைக்க மறுக்கின்றது. சவுதி அரேபியாவிடம் இருக்கும் 750பில்லியன் டொலர் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு அதை இன்னும் சில ஆண்டுகள் அதை எரிபொருள் விலை வீழ்ச்சியில் இருந்து பாதுகாக்கும். இரசிய அரசு தனது பாதீட்டை மசகு எண்ணெய் விலை நூறு டொலர்கள் என்ற எதிர் பார்ப்புடன் 2014இல் திட்டமிட்டது. 2015இல் அது ஐம்பது டொலர்களாகக் குறைக்கப் பட்ட வேளையில் மசகு எண்ணெய் விலை நாற்பதிலும் குறைந்தது. குறைந்த எரிபொருள் விலை உலகப் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டவில்லை. மாறாக எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் பொருளாதாரத்தைப் பாதித்துக் கொண்டிருக்கின்றது. அவற்றுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றது.
குடிவரவுப் பிரச்சனையின் ஆண்டு - சிறுவன் அயிலன் குர்தி
2015-ம் ஆண்டில் பல நாடுகளில் குடிவரவுப் பிரச்சனை மோசமாக இருந்தது. ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தும் சிக்கன நடவடிக்கைகள் 2015-ம் ஆண்டு ஒரு குழப்பத்தை உருவாக்கி அதை சின்னா பின்னப் படுத்தும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அரசியல் தஞ்சம் கோரி சிரியாவில் இருந்து வருபவர்களை அனுமதிப்பது தொடர்பான ஒரு பொதுவான குடிவரகுக் கொள்கையை வகுப்பதால் தற்போது அதிக பிளவை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இப்போது ஏற்படுத்தியுள்ளது. 40இலட்சம் சிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். . 1800 பேர் சிரியாவை விட்டு வெளியேறும் முயற்ச்சியில் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அவர்களின் அவலம் துருக்கிக் கடலோரம் ஒதுங்கிய இரண்டு வயதுச் சிறுவன் அயிலன் மூலம் உலகின் பார்வைக்கு உட்படுத்தப் பட்டது. மேற்காசியாவில் நடக்கும் உள்நாட்டுக் குழப்பங்களின் மூலம் 19-நூற்றாண்டில் ஏற்படுத்தப் பட்ட ஐரோப்பிய அரசுகளின் குடியேற்ற ஆட்சிகளேயாகும். அவர்கள் உருவாக்கிய பிரச்சனை தஞ்சம் கோருவோர் என்றும் தீவிரவாதத் தாக்குதல்கள் செய்வோர் என்றும் அவர்களை நோக்கி 2015-ம் ஆண்டு சென்றன. 2015-ம் ஆண்டு பிரான்ஸில் இரு தடவை தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்தன. டென்மார்க்கிலும் ஒரு தாக்குதல் பெப்ரவரி மாதம் நடந்தது.
ஐ எஸ் அமைப்பின் ஆண்டு
பெய்ரூ லெபனானிலும் பிரான்ஸிலும் குண்டுத் தாக்குதல்கள், எகிப்தில் இரசிய விமானம் குண்டு வைத்துத் தகர்ப்பு, டென்மார்கிலும், கலிபோர்ணியாவிலும் துப்பாகிச் சூட்டுத் தாக்குதல், எகிப்தில் இரசிய விமானத்தைக் குண்டு வைத்துத் தகர்த்தமை என பல செய்திகள் மூலம் உலக அரங்கில் அதிகம் பேசப்பட்ட அமைப்பு ஐ எஸ் அமைப்பே. நைஜீரிவில் செயற்படும் பொக்கோ கரம் அமைப்பும் சோமாலியாவில் செயற்படும் அல் ஷபாப் அமைப்பும் அல் கெய்தாவிடம் இருந்து விலகி ஐ எஸ் அமைப்பினருடன் தமது உறவுகளை அதிகரித்துக் கொண்டன. அமெரிக்கா 19 மாதங்களாகவும் இரசியா 3 மாதங்களாகவும் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக நடத்தும் விமானத் தாக்குதல்கள் அவர்களை இன்னும் அடக்கவில்லை.
சீனா பொருளாதாரத்தின் ஆண்டு
2015இல் சீனா பல பொருளாதாரப் பிரச்சனைகளைகளை எதிர் கொண்டது. அதன் வளர்ச்சி வேகம் குறைந்தது. அதன் பங்கு சந்தையும் நாணய மதிப்பும் வீழ்ச்சி கண்டன. இரண்டையும் சீனா சமாளித்துக் கொண்டது. சீன நாணயம் பன்னாட்டு நாணய நிதியத்தின் Special Drawing Rights இன் பெறுமதியைத் தீர்மானிக்கும் நாணயங்களில் ஒன்றாக 2016-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இணைத்துக் கொள்ள ஒத்துக் கொள்ளப் பட்டது.
கோடுகள் அழிக்கப் பட்ட ஆண்டு
முதலாம் உலகப் போரின் பின்னர் இனி ஒரு இசுலாமியப் பேரரசு உருவாகக் கூடாது என்ற நோக்கத்துடன் பிரான்ஸும் ஐக்கிய இராச்சியமும் ஒன்றிணைந்து மத்திய கிழக்கில் சிரியா, ஈராக், லிபியா, லெபனான் போன்ற நாடுகளின் எல்லைகளை வகுத்துக் கொண்டன. Sykes-Picot எல்லைகள் எனப்படும் கோடுகளை ஏற்கனவே 2014-ம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் எனப்படும் இசுலாமிய அரசு என்னும் அமைப்பும் குர்திஷ் மக்களின் பெஷ்மேர்கா அமைப்பும் அழித்து விட்டன. இப்போது சிரியாவின் மூன்றில் இரண்டு பகுதியையும் ஈராக்கின் மூன்றில் ஒரு பகுதியையும் இணைத்து ஐ எஸ் அமைப்பு ஒரு நாட்டை உருவாக்கியுள்ளது. நூறாண்டுகளாகப் போராடிவரும் குர்திஷ் மக்கள் ஈராக்கிலும் சிரியாவிலும் தமக்கென ஒரு கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை வைத்துள்ளார்கள்.
இந்தியா பயன்படுத்தத் தவறிய ஆண்டு
உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை,மூன்றாவது பெரிய பொருளாதாரம், உலகிலேயே வேகமாக வளரப் போகும் பொருளாதாரம், உலகிலேயே அதிக அளவு மத்திய தர வர்க்கம், உலகிலேயே அதிக அளவு படைக்கலன் கொள்வனவு, 2020-ம் ஆண்டு உலகிலேயே மிக இளமையான சராசரி மக்கள் தொகைக்கட்டமைப்பு ஆகியன உலக அரங்கில் இந்தியாவின் கவர்ச்சிகரமான அம்சங்களாகும். இந்தியாவிற்கு ஜப்பானியத் தலைமை அமைச்சர் சினே அபே, சீன அதிபர் ஜீ சின்பிங் ஆகியோர் மேற்கொண்ட பயணங்களைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் இந்தியா சென்றார். மற்ற இருவர்களின் பயணத்துடன் ஒப்பிடுகையில் ஒபாமாவின் பயணம் அதிக முக்கியத்துவம் பெற்றதாகும். இந்தியாவின் குடியரசு தின விழாவில் ஒபாமாவும் பங்கேற்றது மிக முக்கியமானது என உலகெங்கும் உள்ள ஊடகங்கள் தெரிவித்தன. ஒபாமாவின் இந்தியப் பயணம் இரு நாட்டுகளிடையான உறவில் ஒரு திருப்பு முனை என்றனர் அரசியல் விமர்சகர்கள். உலகின் பல வளர்ச்சியடைந்த நாடுகளும் சீனாவும் மக்கள் தொகையில் இளையோர் குறைவாகவும் முதியோர் அதிகமாக இருக்கின்றது. ஆனால் இந்தியாவில் இளையோர் தொகை அதிகமாக இருக்கின்றது. இந்தியாவில் உள்ள இளையோர் தொகையைச் சரியான முறையில் பயன்படுதப் படவில்லை. இந்தியத் தொழிலாளர்களில் 5 விழுக்காட்டினர் மட்டுமே முறையான தொழிற்பயிற்ச்சி பெற்றவர்களாக இருக்கின்றார்கள்..
ஆட்சி மாற்ற ஆண்டு
இலங்கையிலும் பர்மாவிலும் ஆட்சிமாற்றங்களைப் புவிசார் அரசியல் காரணிகளும் பிராந்திய ஆதிக்கப் போட்டிகளும் தீர்மானித்தன. ஆட்சிகள் மாறின ஆனால் காட்சிகள் மாறவில்லை. துருக்கியில் தேர்தல் ஏற்கனவே இருந்த ஆட்சியை உறுதி செய்தது. வெனிசுவேலாவிலும் ஒரு தேர்தல் நடந்தது. ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பாராளமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்தன. நைஜீரியாவில் தீவிரவாதத்தில் இருந்து மக்களைப் பாதுக்க வேண்டி மக்கள் வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுதினர்.
பலஸ்த்தீனியர்கள் போராட்ட முறையை மாற்றிய ஆண்டு
பலஸ்த்தீனிய மக்கள் தமது போராட்டத்தை கத்திக் குத்து, துப்பாக்கிச் சூடு, கார்களாள் யூதர்களை மோதுதல் என தமது போராட்டத்தை மாற்றிக் கொண்டனர். அதேவேளை பலஸ்த்தீனிய அதிகார சபை பன்னாட்டு நீதிமன்றத்திலும் இணைந்து கொண்டது.
volkswagen மகிழூர்த்தி உற்பத்தி நிறுவனத்தின் களவு அம்பலமான ஆண்டு. தமிழ்நாட்டில் பெரும் வெள்ளம் ஏற்படுத்திய ஆண்டு. நேப்பாளம் தன்னை ஒரு இந்துக் குடியரசு அல்ல எனப் பிரகடனப் படுதிய ஆண்டு. உலக நாடுகள் சூழல் பாதுகாப்புத் தொடர்பாக ஓர் உடன்பாட்டிற்கு வந்த ஆண்டு.
சீனாவும் தாய்வானும் ஈர் அரசுகள் ஒரு நாடு என உணர்ந்து கொண்ட ஆண்டு. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இலங்கைக்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா ஜெனிவா மனித உரிமைக்கழகத்தில் கடைசித் தீர்மானம் கொண்டு வந்த ஆண்டு என்பதை நாம் மறக்கக் கூடாது.

Wednesday, 30 December 2015
இந்தியா பரீட்சித்த ஏவுகணையும் ஏவுகணை எதிர்ப்பு முறைமையும்.
இந்தியா இஸ்ரேலுடன் இணைந்து தயாரித்த தொலைதூர ஏவுகணையை 29/12/2015 செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக அரபுக்கடலில் பரீட்சித்துள்ளது. 1.4பில்லியன் டொலர்கள் செலவில் செய்யப்பட்ட திட்டத்தில் உருவான இந்த ஏவுகணைக்கு ஹீப்ரு மொழியில் மின்னல் என்னும் பொருள்பட Barak எனப் பெயரிடப்பட்டுள்ளது. நிலத்தில் இருந்து விண்ணிற்கு ஏவக்கூடிய SAM வகையைச் சேர்ந்த இந்த ஏவுகணைகளிற்கு கடலில் இருந்தும் ஏவும் வகையிலும் இன்னொரு வடிவமும் கொடுக்கப் பட்டுள்ளது.
INS Kolkata என்னும் இந்தியக் கடற்படைக்கப்பலில் இருந்து ஏவிப் பரிசோதிக்கப் பட்ட Barak-8 ஏவுகணைகள் வான்வளியாகவும் கடல் மேற்பரப்பில் இருந்து கடலுக்குள் இருந்தும் வரும் எதிரி ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கிய அழிக்கக் கூடியவை. சீனா மற்றும் பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளிடமுள்ள கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளிற்கு சவால் விடக் கூடிய வகையில் Barak-8 ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எதிரியின் போர்விமானங்கள், ஆளில்லாப் போர் விமானங்கள், உழங்கு வானுர்திகளையும் மட்டுமல்ல ஒலியிலும் வேகமாகப் பாயக் கூடிய ஏவுகணைகளையும் இடைமறித்து Barak-8 ஏவுகணைகள் தாக்கி அழிக்கக் கூடியவை. இவை ஏற்கனவே இரண்டு தடவைகள் இஸ்ரேலியக் கடற்படைக் கப்பல்களில் இருந்து சோதனை செய்யப்பட்டவையாகும். இந்தியக் கப்பலில் இப்போது முதற்தடவையாக சோதிக்கப்பட்டுள்ளன. முதலில் 32 Barak-8 ஏவுகணைகள் INS Kolkataவில் இணைக்கப் படும். பின்னர் எல்லா இந்திய கடற்படைக் கப்பல்களிலும் இவை இணைக்கப்படும்.
இஸ்ரேலும் இந்தியாவுக் இணைந்து உருவாக்கும் விமான எதிர்ப்பு முறைமையில் ஒரு பகுதியாகவும் Barak-8 ஏவுகணைகள் செயற்படும். ஏவுகணை எதிர்ப்பு முறைமையில் digital radar, command and control, vertical launchers and missiles carrying an advanced seeker ஆகியவை இருக்கும். இந்தியா போன்ற பெரு நிலப்பரப்பைக் கொண்ட நாட்டை ஏவுகணை எதிர்ப்பு முற்றைமை மூலம் பாதுகாக்க பெரும் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

சீனா
தனது உலக ஆதிக்கத்தை அதிகரிக்கக் கூடியவகையில் தனது படைவலுவை அதிகரித்துக் கொண்டு போகையில்
அதற்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் இந்தியாவும் தனது படைவலுவை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது.
உலகச் சந்தையில் அதிக அளவு படைக்கலன்களைக் கொள்வனவு செய்யும் நாடாக இருக்கும் இந்தியா
அடுத்த பத்து ஆண்டுகளில் 250பில்லியன் டொலர்களைச் தனது படைத்துறைக்குச் செலவு செய்யவிருக்கின்றது.
Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...