INS Kolkata என்னும் இந்தியக் கடற்படைக்கப்பலில் இருந்து ஏவிப் பரிசோதிக்கப் பட்ட Barak-8 ஏவுகணைகள் வான்வளியாகவும் கடல் மேற்பரப்பில் இருந்து கடலுக்குள் இருந்தும் வரும் எதிரி ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கிய அழிக்கக் கூடியவை. சீனா மற்றும் பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளிடமுள்ள கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளிற்கு சவால் விடக் கூடிய வகையில் Barak-8 ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எதிரியின் போர்விமானங்கள், ஆளில்லாப் போர் விமானங்கள், உழங்கு வானுர்திகளையும் மட்டுமல்ல ஒலியிலும் வேகமாகப் பாயக் கூடிய ஏவுகணைகளையும் இடைமறித்து Barak-8 ஏவுகணைகள் தாக்கி அழிக்கக் கூடியவை. இவை ஏற்கனவே இரண்டு தடவைகள் இஸ்ரேலியக் கடற்படைக் கப்பல்களில் இருந்து சோதனை செய்யப்பட்டவையாகும். இந்தியக் கப்பலில் இப்போது முதற்தடவையாக சோதிக்கப்பட்டுள்ளன. முதலில் 32 Barak-8 ஏவுகணைகள் INS Kolkataவில் இணைக்கப் படும். பின்னர் எல்லா இந்திய கடற்படைக் கப்பல்களிலும் இவை இணைக்கப்படும்.
இஸ்ரேலும் இந்தியாவுக் இணைந்து உருவாக்கும் விமான எதிர்ப்பு முறைமையில் ஒரு பகுதியாகவும் Barak-8 ஏவுகணைகள் செயற்படும். ஏவுகணை எதிர்ப்பு முறைமையில் digital radar, command and control, vertical launchers and missiles carrying an advanced seeker ஆகியவை இருக்கும். இந்தியா போன்ற பெரு நிலப்பரப்பைக் கொண்ட நாட்டை ஏவுகணை எதிர்ப்பு முற்றைமை மூலம் பாதுகாக்க பெரும் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
சீனா
தனது உலக ஆதிக்கத்தை அதிகரிக்கக் கூடியவகையில் தனது படைவலுவை அதிகரித்துக் கொண்டு போகையில்
அதற்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் இந்தியாவும் தனது படைவலுவை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது.
உலகச் சந்தையில் அதிக அளவு படைக்கலன்களைக் கொள்வனவு செய்யும் நாடாக இருக்கும் இந்தியா
அடுத்த பத்து ஆண்டுகளில் 250பில்லியன் டொலர்களைச் தனது படைத்துறைக்குச் செலவு செய்யவிருக்கின்றது.
No comments:
Post a Comment