Wednesday, 26 January 2011

பான் கீ மூனின் ஆலோசனைக்குழு இலங்கை செல்லாது!!! ஆனால் செல்லத் தேவையில்லை!!!!


இலங்கைப் போர் குற்றம் தொடர்பான ஆலோசனைக் குழுவுடன் பான் கீ மூன்


இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக ஒரு பன்னாட்டு மட்ட விசாரணை தேவை என சர்வதேச மன்னிப்புச் சபை, பன்னாட்டு நெருக்கடிக் குழு, ஐநா மனித உரிமைக் கழகம் ஆகியன தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இது தொடர்பான சாட்சியங்களையும் அவை முன்வைத்தன. இதை தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஐநா மனித உரிமைக் கழக ஆணையாளர் செல்வி நவநீதம் பிள்ளை, ஐநாவின் அரசியல் விவகார உதவிச் செயலாளர் லின் பஸ்கோ போன்றோரின் தொடர்ச்சியான வற்புறுத்தலைச் சமாளிக்க முடியாமல் ஐநா பொதுச் செயலர் பான் கீ மூன் அவர்கள் வேண்டா வெறுப்பாக ஒரு ஆலோசனைக் குழுவை அமைத்தார். இந்தக் குழு இலங்கைப் போர் குற்றம் தொடர்பாக விசாரணை செய்ய முடியாது. அது ஒரு எழுத்து மூலமான அறிக்கை சமர்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஆலோசனைக் குழு கொழும்பு அதிகார மையத்தை அதிர்ச்சியடையச் செய்தது.

விமல் வீரவன்சவின் வீராப்பு
ஐநா ஆலோசனைச் சபையைக் கலைக்காவிடில் கொழும்பில் உள்ள ஐநா பணிமனையை ஆக்கிரமித்து அங்குள்ளோரை பணயக் கைதிகாளப் வைத்திருப்போம் என்று அரசாங்கதின் ஒரு அமைச்சரான விமல் வீரவன்ச பகிரங்க அறிக்கையை விட்டார்.

ஐநாவின் பொய்நா
விமல் வீரவன்சவின் அறிக்கை தொடர்பாக ஊடகவியலாளர்கள் பான் கீமுனின் உதவியாளர்களிடம் வினவியபோது:
  • அவர் வெளியிட்ட தகவல்களை பத்திரிகைகள் பிழையாக பிரசுரித்திருக்கலாம்.
  • அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்.
  • இலங்கை ஒரு காந்தீய வழி ஒத்துழையாமையை செய்யலாம் அதற்க்காக இலங்கையைப் பாராட்ட வேண்டும்
போன்ற தவறான கருத்துக்களை அவர்கள் முன்வைத்து இலங்கையின் அரச பயங்கரவாதச் செயலை நியாயப்படுத்த முயன்றனர்.

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஐநா மனித உரிமைக் கழக ஆணையாளர் செல்வி நவநீதம் பிள்ளை இப்போது இலங்கை மனித உரிமை மீறல்கள் பற்றி மறந்து விட்டார் போல் தெரிகிறது.

கடந்த சில வாரங்களாக ஐநா ஆலோசனைச் சபையை இலங்கை சென்று உண்மைகளைக் கண்டறியுமா என்ற கேள்வி பலமாக அடிபட்டது. இலங்கை திரைமறைவில் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு பகிரங்கமாக வரலாம் என்று அறிவித்தது. ஆனால் ஐநா ஆலோசனைச் சபையை எந்த விசாரணையையும் மேற் கொள்ள முடியாது என்றும் வேண்டுமானால் இலங்கை அரசு அமைத்த நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கலாம் என்று தெரிவித்தது.

நேற்று ஐநா செயலதிபர் பான் கீ மூனின் பேச்சாளர் Inner City Press இற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய தகவலில்:
  • Regarding your questions about the possible travel of the advisory panel, we have the following to say:
  • Discussions are ongoing. The Panel wants to engage with Sri Lankan actors relevant to the question of accountability. A visit would be useful but is not essential for the Panel to provide advice to the Secretary-General. என்று தெரிவித்துள்ளார்.
பயனுள்ளது தேவையற்றது
ஐநா ஆலோசனைச் சபை இலங்கை செல்வது பற்றி இப்போதும் பேச்சு வார்த்தை நடக்கிறதாம். ஐநா ஆலோசனைச் சபை வகைசொல்லல் என்ற பிரச்சனைபற்றி இலங்கையின் நடவடிக்கையாளர்களை ஈடுபடுத்த விரும்புகிறதாம். ஐநா செயலதிபருக்கு ஆலோசனை வழங்க இலங்கைக்கு செல்வது பயனுள்ளதாம் ஆனால் தேவையற்றதாம்.
பயனுள்ளவை எல்லாம் தேவையானவையே என்பதை ஐநா அதிகாரிகள் ஏன் அறிந்திருக்கவில்லை?

ஐநா ஆலோசனை சபை ஆரம்பித்ததில் இருந்து இலங்கை அதைக் கடுமையாக விமர்சித்து வந்தது. அவர்கள் இலங்கைக்கு வருவதை இலங்கை ஆட்சியாளர்கள் விரும்பவே இல்லை. அதைப் பகிரங்கமாக அறிவித்து ஐநா ஆலோசனை சபை இலங்கை வரக்கூடாது என்று சொன்னால் இலங்கை பற்றி மனித உரிமை அமைப்புக்கள் கடுமையாக விமர்சிக்கும். இதைத் தடுக்க ஐநா அதிகாரிகளும் இலங்கையும் இணைந்து ஆடும் நாடகமா இது?


இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக போர் நடந்த இடத்தைப் பார்வையிடாமலும் பாதிக்கப் பட்டவர்களை நேரில் சந்திக்காமலும் ஆலோசனை சொல்லப் போகிறார்கள்.

தேறாத ஐநா
அண்மைக்காலங்களில் ஐநா ஒரு தேறாத நிறுவனமாக மாறிக் கொண்டிருக்கிறது.
  • 1994-ல் நடைபெற்ற ருவாண்டா இனப்படுகொலையை தடுத்து நிறுத்தத் தவறியது.
  • ஸ்ரெப்ரெனிகா படுகொலையைத் தடுக்கத் தவறியது
  • சூடான் இனப்படுகொலையைத் தடுக்கத் தவறியது
  • இலங்கையில் ஒரு நாளில் மட்டும் 25000 கொல்லப்பட்ட போது கைகட்டி நின்றது.


ஆலோசனைச் சபையின் அறிக்கையில் இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கப் படுமா?????

Tuesday, 25 January 2011

நகைச்சுவை: டெல்லி மந்திர சபையில் மின்குமிழ்(bulb) மாற்றம்.


இந்திய மத்திய அரசின் மந்திரசபை அங்கு ஒரு மின்குமிழ் (bulb) பழுதடைந்துவிட்டது. அதை மாற்ற எத்தனை பேர் தேவைப்படுவார்கள்? என்ன அமளிதுமளி நடக்கும்.

மந்திர சபையில் உள்ள பலருக்கு மின்குமிழ் மாற்றத் தெரியாது.

ஒரு மந்திரி சொன்னார் மின்குமிழ் மாற்றத் தேவையில்லை என்று.
ஒரு மந்திரி சொன்னார்
மின்குமிழை மாற்றுபவர் தேசத் துரோகி என்று.
ஒரு மந்திரி சொன்னார்
மின்குமிழ் பழுதடைந்ததிற்கு பாக்கிஸ்த்தான் காரணம் என்று.
ஒரு மந்திரி சொன்னார் மின்குமிழ் பழுதடைந்ததிற்கு காவிப் பயங்கர வாதிகள்தான் காரணம் என்று.
ஒரு மந்திரி சொன்னார் மின்குமிழ் பழுதடைந்ததிற்கு சீனாதான் காரணம் என்று.ஒரு மந்திரி சொன்னார் மின்குமிழ் பழுதடைந்ததிற்கு நக்சலைட்கள் காரணம் என்று.ஒரு மந்திரி சொன்னார் மின்குமிழ் பழுதடைந்ததிற்கு இசுலாமியத் தீவிரவாதிகள் காரண்ம என்றுஒரு மந்திரி சொன்னார் மின்குமிழ் பழுதடைந்ததிற்கு விடுதலைப்புலிகளின் ஊருடுவல் காரணம் என்று.ஒரு மந்திரி சொன்னார் நாட்டையே இருட்டில் தானே வைத்திருக்கிறோம் இது என்ன பெரிய வேலை என்று.
ஒரு மந்திரி சொன்னார் மீண்டும் ஒளி வர 1.72இலட்சம் கோடிக்கு கேள்விப் பத்திரங்கள் கோரப்படவேண்டும் என்று.

பிரதம மந்திரி மட்டும் தொலை பேசியில்
மின்குமிழ் பழுதடைந்தால் என்ன செய்ய வேண்டும் என்று அமெரிக்காவின் பெண்டகனுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தார்.
சென்னையில் கலைஞர் கருணாநிதி மின்னொளி அற்ற நாட்டில் பொன்னொளி ஏற்றிய எம் கூட்டணி ஆட்சி என்று முரசொலியில் கவிதை எழுதினார்.

ஆய்வு: குறுந்தகவல்கள்(Text messages) பெண்களை அதிகம் கவருகிறதாம்.


சிவப்பு ரோசாப்பூ, பரிசுப் பொருள்கள், சுவையான உணவகத்தில் சாப்பாடு போன்றவற்றை விட நல்ல கைப்பேசி அல்லது சமூக வலைத்தளங்களூடாக அனுப்பும் குறுந்தகவல்கள் பெண்களை அதிகம் கவர்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆய்வுசெய்யப்பட்ட பெண்களில் 80% மானோர் பாரம்பரிய காதல் தெரிவிக்கும் முறையான சிவப்பு ரோசாப்பூ, பரிசுப் பொருள்கள், சுவையான உணவகத்தில் சாப்பாடு ஆகியவற்றிலும் பார்க்க குறுந்தகவல்கள் அவர்களை ஆண்களிடம் ஈர்ப்படையச் செய்கின்றனவாம்.

மனோதத்துவ நிபுணர் கலாநிதி பெலிஸா வ்ரனிச் குறுந்தகவல்கள் ஒரு நீண்டகாலமாக ஒன்றாக இருந்ததைப் போன்ற ஒரு போலியான உணர்வை ஏற்படுத்துகிறதாம். இந்தக் கவர்ச்சி பெண்களை படுக்கை வரைக்கும் இட்டுச் செல்லுமாம். நேரில் தெரிவிக்கும் கருத்துக்களிலும் பார்க்க குறுந்தகவல்களால் தெரிவிக்கப்படுபவை அதிக கவர்ச்சியையும் உணர்ச்சியையும் தூண்டுமாம்.

இது மட்டுமல்ல ஆண் பெண் உறவுகளை முறிப்பதிலும் குறுந்தகவல்கள் முன்னணி வகிக்கின்றன. 30% ஆண்கள் தங்கள் காதலிகளுக்கு குறுந்தகவல்கள் மூலமாக காதலை முறிக்கும் எண்ணத்தை தெரிவிக்கின்றனராம்.

Sunday, 23 January 2011

அதிகரிக்கும் விவாகரத்துக்களுக்கு Facebookபோன்ற சமூகவலைத்தளங்கள் மேல் குற்றச் சாட்டு.



பிரித்தானியாவின் முன்னணி விவாகரத்து சட்டவியலாளர் ஒருவர் தான் கடந்த ஒன்பது மாதங்களாக கையாண்ட சகல விவாகரத்துக்களும் சமூக வலைத்தளங்கள் காரணமாக அமைந்திருந்தது என்று தெரிவித்துள்ளார்.

திருமணமானவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பிறருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு விரசமான உரையாடல் செய்வதமை விவாகரத்துக்களுக்கு காரணமாக சட்டத்தின் முன் வைக்கப்படுகின்றனவாம்.

Second Life, Illicit Encounters, Friends Reunited போன்ற சமூக வலைத்தளங்கள் கணவன் அல்லது மனைவிக்கு துரோகம் செய்யத் தூண்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


Hart Scales & Hodges Solicitors இன் எமா பட்டேல் தான் கடந்த ஒன்பது மாதங்களில் கையாண்ட 30 விவாகரத்துக்களுக்கு Facebook காரணம் என்று சொல்கிறார்.

தமது கணவன் அல்லது மனைவி சமூக வலைத்தளத்தில் மற்றவர்களுடன் தகவல் பரிமாற்றம் அரட்டை அடித்தலை கடவுச்சொற்களைத் திருடி உளவு பார்த்து விடுகின்றனர். இது மண முறிவில் முடிவடைகிறது. இவை விவாகரத்துக்களுக்கு சாட்சியமாகவும் முன்வைக்கப்படுகின்றன.


ஒரு உண்மைச் சம்பவங்கள்
அவர்கள் நல்ல அழகிய நல்ல பொருத்தாமான நல்ல ஒற்றுமையான இளம் தம்பதியினர். கணவனுக்கு அவனுடன் வேலைசெய்யும் திருமணமாகாத ஒரு இளம் அழகி சரச வார்த்தைகளில் Facebookஇல் தகவல்கள் அனுப்புவதுண்டு. கணவனும் பதில் அனுப்புவதுண்டு. கணவனின் கடவுச்சொல்லைப்பெற்ற மனைவி இந்த தகவல் பரிமாற்றத்தை அறிந்து கொண்டாள். விளைவு மண முறிவு.

இன்னொரு 36வயது மூன்று பிள்ளைகளின் தாய். அவள் எந்த தகாத உறவிலும் ஈடுபடவில்லை. செய்தது வெறும் தகவல் பரிமாற்றங்கள்தான். கணவன் இதை அறிந்து மணமுறிவு செய்து விட்டான்.

பிரித்தானியாவின் முன்னள் பிரதம மந்திரியின் மைத்துனி தனது Facebookஇல் திருமணமானவள் என்பதை தனியாள் என்று மாற்றியாதால் பெரும் சிரமத்துக்குள்ளானார்.

Saturday, 22 January 2011

காணொளி: மஹிந்தவின் அமெரிக்கப் பயணத்திற்கு எதிராக தமிழர்கள்


22-01-2011 சனிக்கிழமை மஹிந்த ராஜ்பக்சவின் அமெரிக்கப் பயணத்திற்கு எதிராகவும் அவரை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சந்திக்கக் கூடாது என்றும் அவரை அமெரிக்கா போர் குற்றத்திற்காக கைது செய்ய வேண்டும் என்று கோரியும் பிரித்தானியா வாழ் தமிழர்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தை இலண்டனில் உள்ள அமெரிக்கத் தூதுவரகத்தின் முன் நடாத்தினர்.






பொதுவாக இலண்டனில் ஒரு ஆர்ப்பாட்டம் என்றால் கால நிலைகளையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவர். ஊர்வலம் என்றால் இலட்சக் கணக்கில் கூடுவர். மஹிந்த ராஜபக்சவின் பிரித்தானியப் பயணத்தின் போது மிக மோசமான கால நிலையையும் பொருட்படுத்தாமல் பலர் கூடி சாதனை படைத்தனர். ஆனால் அமெரிக்கத் தூதுவரகத்தின் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் குறைவானவர்களே கலந்து கொண்டனர். சனிக்கிழமை விடுமுறை நாள், கால நிலையும் மோசமில்லை, இருந்தும் ஏன் ஆயிரக் கணக்கில் மக்கள் கூடவில்லை என்று பலரும் வியப்புக்குள்ளாகி உள்ளனர். குறுகிய கால எல்லைக்குள் ஒழுங்கு செய்யப் பட்டது என்று சொல்லப்பட்டாலும் வழமையில் குறுந்தகவல் மூலம் செய்திகள் பரப்பப்படும். இம்முறை எந்தக் குறுந்தகவல்களும் ஏன் வரவில்லை என்ற கேள்வி உண்டு. ஒரு மின்னஞ்சல் மட்டும் பரவியது. தமிழ் இளையோர் அமைப்பு இதை ஒழுங்கு செய்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் முகப்புத்தகத்தினூடாக செய்தி பரப்பப்படவில்லை! பிரித்தானிய தமிழர் பேரவையில் இருந்து சிலர் வந்திருந்தனர். இதில் இருந்து பிரித்தானிய தமிழர் பேரவை விலகி இருந்ததா?

Friday, 21 January 2011

மூளைக்குப் பயிற்ச்சி முக்கியம்



உடலுக்குப் பயிற்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவு மூளைக்கும் பயிற்ச்சி முக்கியம். எமது மூளை வயது போகப் போக சிறிதாகலாம். மூளை பத்து ஆண்டுகளில் 2% சிறியதாகிறது. இதை 60 வயதில் தான் நாம் உணர்கிறோம். நல்ல பயிற்ச்சி மூலம் எமது மூளைத் திறனை அதிகரிக்கலாம். உடலில் ஏற்படும் தேய்மானங்கள் போலவே மூளையிலும் ஏற்படும். எமது மூளைக்கு நாம் கொடுக்கும் பயிற்ச்சி எமது மூளையின் புலனுணர்வு இருப்பை அதிகரிக்கிறது. புலனுணர்வு இருப்பு (Congnitive Reserve) என்பது எமது மூளையின் முக்கிய அம்சம். மூளையில் அதிக நரம்பணு இருப்பு மூளையில் ஏற்படும் பாதிப்புகளை ஈடு செய்கிறது. எமது மூளையை அதிகம் பாவிக்க பாவிக்க அதன் பலமும் அதிகரிக்கும்.

மூளைக்குக் கொடுக்கக் கூடிய பயிற்ச்சிகள்.

விரைவாக கதைக்கவும்
விரைவாகக் கதைத்தல் மூளைக்கு நல்ல பயிற்ச்சி. இது உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

நீண்ட சொற்கள் பலவற்றை மன்னம் செய்யவும்.
பல சொற்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளப் பயிற்ச்சி எடுத்தல் நல்லது. நீண்ட சொற்கள் அதிக பயன் தரும்.

கைமாற்றிச் செய்யுங்கள்
நீங்கள் வலது கைகளால் செய்யும் வேலைகளை இடது கைகளாலும் இடது கைளால் செய்யும் வேலைகளை வலது கைகளாலும் அடிக்கடி செய்யுங்கள். கணனி மௌஸ், தொலைக்காட்சி ரிமோட் தொலை பேசி போன்றவற்றை கைமாற்றி இயக்கிப் பழகுங்கள்.


புதிய இடங்களுக்கு பயணம் செய்யுங்கள்

எமது முன்னோர்கள் பல இடங்களுக்கும் அடிக்கடி மாறியாதால் தான் அவர்கள் மூளை வளர்ச்சி பெற்றதாம்.

வழமைகளை அடிக்கடி மாற்றுங்கள்

தினசரி நடவடிக்கைகளை மாற்றுங்கள். வேலைக்கு போகும் வழிகளை அடிக்கடி மாற்றுங்கள். வழமையாகச் செல்லும் கடைகளை விட்டு வேறு கடைகளுக்கு செல்லுங்கள்.

கண்களை மூடிக் கொண்டு செய்யுங்கள்
ஆடை மாற்றுதல் போன்ற சாதாரண வேலைகளை கண்களை மூடிக் கொண்டு செய்யுங்கள்.

உங்களுடன் நீங்களே போட்டி போடுங்கள்
முப்பது செக்கண்களில் எத்தனை மிருகங்களின் பெயர்களை உங்களால் சொல்ல முடியும் என்று பாருங்கள். இன்று மிருகங்கள் என்றால் நாளை மரங்கள். இப்படி பலவற்றை முயற்ச்சி செய்யுங்கள்.

விளையாட்டுக்கள் நல்ல பயன் தரும்
குறுக்கெழுத்து சுடோக்கு போன்றவற்றை அடிக்கடி செய்யுங்கள்

இரு வேலைகளை ஒரேயடியாகச் செய்யுங்கள்

இசையைக் கேட்டபடி சாப்பாடு அல்லது ஒரு மலரை முகர்ந்து பாருங்கள்.

மன அழுத்தம் தரக்கூடியவற்றை தவிருங்கள்
மன அழுத்தம் உங்கள் மூளையை சிறிதாக்குகிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நிறையத் தண்ணீர் குடியுங்கள்
மற்ற அவயங்களைவிட மூளை அதிக நீர் கொண்டுள்ளது. அதிக நீர் குடிப்பது மூளையை சிறப்பாகச் செயற்பட உதவுகிறது.

இறுதியாக மூளைக்கு இரத்தம் போகக் கூடிய உடற்பயிற்ச்சிகள் செய்யுங்கள். சிரசாசனம் அர்த்த சிரசாசனம் உன்னதமானது

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...