
22-01-2011 சனிக்கிழமை மஹிந்த ராஜ்பக்சவின் அமெரிக்கப் பயணத்திற்கு எதிராகவும் அவரை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சந்திக்கக் கூடாது என்றும் அவரை அமெரிக்கா போர் குற்றத்திற்காக கைது செய்ய வேண்டும் என்று கோரியும் பிரித்தானியா வாழ் தமிழர்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தை இலண்டனில் உள்ள அமெரிக்கத் தூதுவரகத்தின் முன் நடாத்தினர்.



பொதுவாக இலண்டனில் ஒரு ஆர்ப்பாட்டம் என்றால் கால நிலைகளையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவர். ஊர்வலம் என்றால் இலட்சக் கணக்கில் கூடுவர். மஹிந்த ராஜபக்சவின் பிரித்தானியப் பயணத்தின் போது மிக மோசமான கால நிலையையும் பொருட்படுத்தாமல் பலர் கூடி சாதனை படைத்தனர். ஆனால் அமெரிக்கத் தூதுவரகத்தின் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் குறைவானவர்களே கலந்து கொண்டனர். சனிக்கிழமை விடுமுறை நாள், கால நிலையும் மோசமில்லை, இருந்தும் ஏன் ஆயிரக் கணக்கில் மக்கள் கூடவில்லை என்று பலரும் வியப்புக்குள்ளாகி உள்ளனர். குறுகிய கால எல்லைக்குள் ஒழுங்கு செய்யப் பட்டது என்று சொல்லப்பட்டாலும் வழமையில் குறுந்தகவல் மூலம் செய்திகள் பரப்பப்படும். இம்முறை எந்தக் குறுந்தகவல்களும் ஏன் வரவில்லை என்ற கேள்வி உண்டு. ஒரு மின்னஞ்சல் மட்டும் பரவியது. தமிழ் இளையோர் அமைப்பு இதை ஒழுங்கு செய்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் முகப்புத்தகத்தினூடாக செய்தி பரப்பப்படவில்லை! பிரித்தானிய தமிழர் பேரவையில் இருந்து சிலர் வந்திருந்தனர். இதில் இருந்து பிரித்தானிய தமிழர் பேரவை விலகி இருந்ததா?
2 comments:
மஹிந்தவை பிரித்தானியாவில் இருந்து விரட்டியதுடன் மக்கள் களைத்துவிட்டார்களா? பிரித்தானிய தமிழர் பேரவைக்கும் தமிழ இளையோர் அமைப்புக்கும் இடையில் ஏதாவது முறுகலா என்பது நியாயமான சந்தேகம்.
விடை மிக,மிக சுலபமானது!மகிந்தர் அப்போது வந்தது பிரித்தானியாவுக்கு!இப்போது சென்றிருப்பது அமெரிக்காவுக்கு!(1)இப்போதும் அமெரிக்காவைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்று எண்ணியிருக்கலாம்(.2)அமெரிக்க விஜயத்துக்கு இங்கிலாந்தில் ஆர்ப்பாட்டம் செய்வது பயன் தராது என்று (என்னைப்போல்)எண்ணியிருக்கலாம்.
Post a Comment