Sunday, 23 January 2011

அதிகரிக்கும் விவாகரத்துக்களுக்கு Facebookபோன்ற சமூகவலைத்தளங்கள் மேல் குற்றச் சாட்டு.



பிரித்தானியாவின் முன்னணி விவாகரத்து சட்டவியலாளர் ஒருவர் தான் கடந்த ஒன்பது மாதங்களாக கையாண்ட சகல விவாகரத்துக்களும் சமூக வலைத்தளங்கள் காரணமாக அமைந்திருந்தது என்று தெரிவித்துள்ளார்.

திருமணமானவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பிறருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு விரசமான உரையாடல் செய்வதமை விவாகரத்துக்களுக்கு காரணமாக சட்டத்தின் முன் வைக்கப்படுகின்றனவாம்.

Second Life, Illicit Encounters, Friends Reunited போன்ற சமூக வலைத்தளங்கள் கணவன் அல்லது மனைவிக்கு துரோகம் செய்யத் தூண்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


Hart Scales & Hodges Solicitors இன் எமா பட்டேல் தான் கடந்த ஒன்பது மாதங்களில் கையாண்ட 30 விவாகரத்துக்களுக்கு Facebook காரணம் என்று சொல்கிறார்.

தமது கணவன் அல்லது மனைவி சமூக வலைத்தளத்தில் மற்றவர்களுடன் தகவல் பரிமாற்றம் அரட்டை அடித்தலை கடவுச்சொற்களைத் திருடி உளவு பார்த்து விடுகின்றனர். இது மண முறிவில் முடிவடைகிறது. இவை விவாகரத்துக்களுக்கு சாட்சியமாகவும் முன்வைக்கப்படுகின்றன.


ஒரு உண்மைச் சம்பவங்கள்
அவர்கள் நல்ல அழகிய நல்ல பொருத்தாமான நல்ல ஒற்றுமையான இளம் தம்பதியினர். கணவனுக்கு அவனுடன் வேலைசெய்யும் திருமணமாகாத ஒரு இளம் அழகி சரச வார்த்தைகளில் Facebookஇல் தகவல்கள் அனுப்புவதுண்டு. கணவனும் பதில் அனுப்புவதுண்டு. கணவனின் கடவுச்சொல்லைப்பெற்ற மனைவி இந்த தகவல் பரிமாற்றத்தை அறிந்து கொண்டாள். விளைவு மண முறிவு.

இன்னொரு 36வயது மூன்று பிள்ளைகளின் தாய். அவள் எந்த தகாத உறவிலும் ஈடுபடவில்லை. செய்தது வெறும் தகவல் பரிமாற்றங்கள்தான். கணவன் இதை அறிந்து மணமுறிவு செய்து விட்டான்.

பிரித்தானியாவின் முன்னள் பிரதம மந்திரியின் மைத்துனி தனது Facebookஇல் திருமணமானவள் என்பதை தனியாள் என்று மாற்றியாதால் பெரும் சிரமத்துக்குள்ளானார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...