
உடலுக்குப் பயிற்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவு மூளைக்கும் பயிற்ச்சி முக்கியம். எமது மூளை வயது போகப் போக சிறிதாகலாம். மூளை பத்து ஆண்டுகளில் 2% சிறியதாகிறது. இதை 60 வயதில் தான் நாம் உணர்கிறோம். நல்ல பயிற்ச்சி மூலம் எமது மூளைத் திறனை அதிகரிக்கலாம். உடலில் ஏற்படும் தேய்மானங்கள் போலவே மூளையிலும் ஏற்படும். எமது மூளைக்கு நாம் கொடுக்கும் பயிற்ச்சி எமது மூளையின் புலனுணர்வு இருப்பை அதிகரிக்கிறது. புலனுணர்வு இருப்பு (Congnitive Reserve) என்பது எமது மூளையின் முக்கிய அம்சம். மூளையில் அதிக நரம்பணு இருப்பு மூளையில் ஏற்படும் பாதிப்புகளை ஈடு செய்கிறது. எமது மூளையை அதிகம் பாவிக்க பாவிக்க அதன் பலமும் அதிகரிக்கும்.

மூளைக்குக் கொடுக்கக் கூடிய பயிற்ச்சிகள்.
விரைவாக கதைக்கவும்
விரைவாகக் கதைத்தல் மூளைக்கு நல்ல பயிற்ச்சி. இது உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
நீண்ட சொற்கள் பலவற்றை மன்னம் செய்யவும்.
பல சொற்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளப் பயிற்ச்சி எடுத்தல் நல்லது. நீண்ட சொற்கள் அதிக பயன் தரும்.
கைமாற்றிச் செய்யுங்கள்
நீங்கள் வலது கைகளால் செய்யும் வேலைகளை இடது கைகளாலும் இடது கைளால் செய்யும் வேலைகளை வலது கைகளாலும் அடிக்கடி செய்யுங்கள். கணனி மௌஸ், தொலைக்காட்சி ரிமோட் தொலை பேசி போன்றவற்றை கைமாற்றி இயக்கிப் பழகுங்கள்.
புதிய இடங்களுக்கு பயணம் செய்யுங்கள்
எமது முன்னோர்கள் பல இடங்களுக்கும் அடிக்கடி மாறியாதால் தான் அவர்கள் மூளை வளர்ச்சி பெற்றதாம்.
வழமைகளை அடிக்கடி மாற்றுங்கள்
தினசரி நடவடிக்கைகளை மாற்றுங்கள். வேலைக்கு போகும் வழிகளை அடிக்கடி மாற்றுங்கள். வழமையாகச் செல்லும் கடைகளை விட்டு வேறு கடைகளுக்கு செல்லுங்கள்.
கண்களை மூடிக் கொண்டு செய்யுங்கள்
ஆடை மாற்றுதல் போன்ற சாதாரண வேலைகளை கண்களை மூடிக் கொண்டு செய்யுங்கள்.
உங்களுடன் நீங்களே போட்டி போடுங்கள்
முப்பது செக்கண்களில் எத்தனை மிருகங்களின் பெயர்களை உங்களால் சொல்ல முடியும் என்று பாருங்கள். இன்று மிருகங்கள் என்றால் நாளை மரங்கள். இப்படி பலவற்றை முயற்ச்சி செய்யுங்கள்.

விளையாட்டுக்கள் நல்ல பயன் தரும்
குறுக்கெழுத்து சுடோக்கு போன்றவற்றை அடிக்கடி செய்யுங்கள்
இரு வேலைகளை ஒரேயடியாகச் செய்யுங்கள்
இசையைக் கேட்டபடி சாப்பாடு அல்லது ஒரு மலரை முகர்ந்து பாருங்கள்.

மன அழுத்தம் தரக்கூடியவற்றை தவிருங்கள்
மன அழுத்தம் உங்கள் மூளையை சிறிதாக்குகிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நிறையத் தண்ணீர் குடியுங்கள்
மற்ற அவயங்களைவிட மூளை அதிக நீர் கொண்டுள்ளது. அதிக நீர் குடிப்பது மூளையை சிறப்பாகச் செயற்பட உதவுகிறது.

இறுதியாக மூளைக்கு இரத்தம் போகக் கூடிய உடற்பயிற்ச்சிகள் செய்யுங்கள். சிரசாசனம் அர்த்த சிரசாசனம் உன்னதமானது
1 comment:
சதுரங்கம்(செஸ்) சுடோக்கு, குறுக்கொழுத்து போன்ற விளையாட்டுக்கள் மூளைக்கு நல்ல பயிற்ச்சியாக அமையும். சில கணனி விளையாட்டுக்கள் பாதகமாகவும் அமையலாம்.
Post a Comment