நாடுகளிடையான இணையவெளிப்( cyber warfare)போரில் சீனா மற்ற நாடுகளிலும் பார்க்க முன்னேறிவிட்டது என்ற செய்தி பரவலாக அடிபடும் சூழலில் அமெரிக்கா தனது இணையவெளிப் படைபலத்தை மேம் படுத்தும் செயலில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் நிபுணர்களையும் ஹொலிவூட்டில் அசைப்படம்(animation) உருவாக்கும் நிபுணர்களையும் இணைத்து ஒரு இணையவெளிப்படையை அமெரிக்கா உருவாக்கவுள்ளது.
அண்மைக்காலத்தில் சீனா பல அமெரிக்க படைத்துறை இரகசியங்களைத் திருடியது என்ற குற்றச்சாட்டு செய்திகளாக வந்தன. இதுபற்றி இந்த இணைஇபில் அறியலாம்:
அமெரிக்க இணையவெளியில் தொழில்நுட்ப இரகசியங்களைத் திருடுவதன் மூலம் அமெரிக்காவிற்கு ஆண்டொன்றிற்கு 300 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இணையவெளி ஊடுருவல்களில் எழுபது விழுக்காடுகள் சீனாவில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன என்கிறது அமெரிக்கா. ஒஸ்ரேலியாவின் உளவுத் துறையின் கட்டிடம் தொடர்பான தகவல்கள் சீனாவால் திருடப்பட்டன எனப்படுகிறது.
ஒரு தனிப்பட்டவரில் இருந்து ஒரு நாட்டுப்படைத்துறை உடபட பலதரப்பட்டவர்களாலும் ஒரு நாட்டின் பாதுகாப்புத் துறையினதோ அல்லது உள்கட்டமைப்பையோ அத்தியாவசிய வழங்கு துறையையோ அவற்றின் கணனிகளை ஊடுருவதின் (hacking) மூலம் செயலிழக்கச் செய்யலாம். அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் மேம்பட்ட திட்ட ஆய்விற்கான முகவரகம் (Defense Advanced Research Projects Agency) (DARPA) இணையவெளிப்போரை பெரிய அளவின் அமெரிக்காவிற்கு சாதகமாக மாற்றும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது. இதன் இயக்குனராக ஆரத்தி பிரபாகர் செயற்படுகிறார்.
அமெரிக்கா தனது புதிய இணையவெளிப்படைத் திட்டத்திற்கு Plan X எனப் பெயரிட்டுள்ளது. இதன் படி இணையவெளிப் போர் செயற்பாடுகள் ஓர் ஐபோனில் Angry Bird விளையாடுவதுபோல இலகுவாக இருக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. சின முன்மாதிரிகள் Google Glass-esque wearable computers போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் படைபலத்தை ஆய்வு செய்த சீன நிபுணர்கள் அது செய்மதித் தொலைத் தொடர்பாடலிலும் கணனிகளிலும் பெரிதும் தங்கியிருப்பதை அறிந்து கொண்டனர். தரையில் இருந்து செலுத்தும் ஏவுகணைகள் மூலம் செய்மதிகளைத் தாக்கி அழிக்கும் முறைமைய ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சீனா வெற்றிகரமாகப் பரீட்சித்துப் பார்த்தது. சீனா பின்னர் அமெரிக்காவின் பல இணையத் தொகுதிகளை வெற்றீகரமாக ஊடுருவியது. பல தொழில்நுட்பத் தகவல்களையும் சீனா பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
சீனா, இரசியா, வட கொரியா ஆகிய நாடுகள் இணையவெளிப்போரில் முன்னேறியதைத் தொடர்ந்து அமெரிக்கா இணையவெளிப் போருக்கான தனது நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தது. ஆனால் அமெரிக்க அதிகாரிகள் தாம் இணையவெளியை படைத்துறை மயப்படுத்தவில்லை. தமது நாட்டைப் பாதுகாக்கக் கூடியவகையில் தமது இணையவெளித் தாக்குதல் திறனை அதிகரிப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அமெரிக்கா காத்திருக்கும் கணனிக் கிருமிகளை (Sleeper cell viruses) பல நாட்டு கணனித் தொகுதிகளில் புகுத்தி வைத்திருப்பதாகவும் அந்த நாடுகளுடன் போர் நடக்கும் போது அவை செயற்படுத்தப் பட்டு அந்த நாட்டின் கணனித் தொகுதிகளை செயலிழக்கச் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
2016-ம் ஆண்டு அமெரிக்கா நூறு குழுக்களை இணைய வெளிப்போரில் ஈடுபடுத்தும் எனச் சொல்லப்படுகிறது. இவை மூன்று பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று தேசத்தைப் பாதுகாப்பது, இரண்டாவது மற்ற நாடுகள் மீது தாக்குதல் நடாத்துவது, மூன்றாவது நாட்டில் முக்கிய வழங்கல்களைச் செய்யும் உட்கட்டமைப்புக்களைப் பாதுகாப்பது.
இணையத் தொழிநுட்பம் வேகமாக மாறிக் கொண்டிருப்பதால் இதில் வல்லரசு நாடுகளிடை பெரும் போட்டியை இனிவரும் காலங்களில் எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment