Wednesday, 29 May 2013

அமெரிக்கப் படைத்துறை இரகசியங்களைக் கொள்ளையடித்தது சீனா!

அமெரிக்காவின் மிக உச்ச படைத்துறை இரகசியங்களை சீனா இணைய வெளியூடாக திருடியுள்ளது( cyber-theft). இது அமெரிக்காவிற்குப் பெரும் பின்னடைவையும் சீனாவிற்கு பெரும் முன்னேற்றத்தையும் கொடுக்க வல்லதாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

திருடுவது மலிவானது
அமெரிக்கா தாயாரிக்கும் புதிய படைத்துறை உபகரணங்கள் ஆராய்ச்சிக்களுக்காகப் பெரும் செலவு செய்து  உருவாக்கப்படுகின்றன. அவை மிகவும் புதியரக தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும். சீனா இத்துறையில் பல ஆண்டுகள் பின் தங்கிய நிலையில் இருக்கின்றது. இந்த இடைவெளியை அமெரிக்கத் தொழில்நுட்பங்களைத் திருடுவதன் மூலம் விரைவில் நிரப்ப சீனாவால் முடியும். சீனாவிடம் "இணையவெளி நீலப் படைப்பிரிவு" என்ற பெயரில் இணையவெளி நிபுணர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவு உண்டு. அமெரிக்கவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் லொக்கீட் நிறுவனத்தின் கணனிகள் தொடர் ஊடுருவல் முயற்ச்சிகளுக்கு உள்ளாகி வருகிறது. முழுக்க முழுக்க கூகிளின் இணையத் தளம் போல் போலியான ஒரு இணையத்தளத்தை சீனாவில் உருவாக்கி அதில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் உண்மை என நம்பி உள் நுழைந்து தமது மின்னஞ்சல்களின் கடவுச்சொற்களை பதிந்தனர். இதனால் பல இரகசியங்கள் திருடப்பட்டன. இணையவெளிப் போர்முனையில் சீனா முன்னணியில் இருக்கிறது என்று ஐக்கிய அமெரிக்கா அஞ்சுகிறது. இதனால்  அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தனது இணையவெளிப் போர் முறைமைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது.

பெஞ்சமின் பிஷப் ஊழல்
பெஞமின் பிஷப் அமெரிக்காவின் பசுபிக் பிராந்தியத்தில் எதிரிகளைக் கையாளும் முறைமை தொடர்பான ஒப்பந்த வேலைகளைச் செய்தவர். 59வயதான பெஞமின் பிஷப் 2011இல் அமெரிக்காவில் உள்ள ஹவாயில் நடந்த ஒரு பாதுகாப்புத்துறை தொடர்பான மாநாட்டில் 27வயதான சீன மாணவியைச் சந்தித்தார். அன்றிலிருந்து அவர்கள் இருவரும் காதலர்களானார்கள். சீன மாணவியின் பெயர் இதுவரை வெளிவிடப்படவில்லை பெஞமின் பிஷப் எதிராக நடக்கும் வழக்கில் அவர் நபர் - 1 எனவே குறிப்பிடப்பட்டுள்ளார். சீன மாணவி மாணவ அனுமதிப்பத்திரத்தில் அமெரிக்காவில் வசித்தவர். பெஞ்சமின் பிஷப் அமெரிக்க பசுபிக் கட்டளையகத்தில்  lieutenant colonel in the U.S. Army Reserve ஆகப் பணிபுரிந்தவர். பெஞ்சமின் பிஷப்பின் வீட்டைச் சோதனையிட்ட போது அமெரிக்கப் படைத்துறையின் பல இரகசிய தகவல்களடங்கிய பத்திரங்களை கண்டெடுத்தனர்.

உச்ச பாதுகாப்புத் தகவல்கள்
அண்மையில் அமெரிக்க கணனிகளை ஊடுருவி சீனா அமெரிக்காவின் 25இற்கு மேற்பட்ட படைத்துறைப் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை திருடியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இது எப்போது நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் புதுத்தர Patriot missile system, அமெரிக்கக் கடற்படையின் Aegis ballistic missile defense systems,  F/A-18 போர் விமானம், the V-22 Osprey என்னும் விமானம் தாங்கிக் கப்பல்களில் இலகுவாக தரையிறங்கும் விமானங்கள், the Black Hawk helicopter and the F-35 இணைத் தாக்குதல் போர் விமானங்கள் போன்ற அமெரிக்காவின் முக்கிய படைக்கலன்கள் தொடர்பான இரகசியங்கள் திருடப்பட்டுள்ளன. சீனா இந்தக் குற்றச் சாட்டுக்களை ஆதாரமற்றவை என மறுத்துள்ளது.

திருடப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுபவை:






Black Hawk helicopter



No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...