S-300 இரசியாவால் 1982-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னர் அதில் பல மாற்றங்களும் மேம்படுத்துதலும் செய்யப்பட்டன. வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கென வித்தியாசமான S-300PMU-1 உருவாக்கப்பட்டது. இது மூன்றாவது தலைமுறை ஏவுகணை முறைமையாகும். இது தாழப்பறக்கும் விமானங்களையும் சீர்வேக ஏவுகணைகளையும் (cruise missiles) கண்டறியவும், செல்லும் வழியறிவும், தாக்கி அழிக்கவும் வல்லன. இது பல எண்ணிக்கையான தாழப்பறக்கும் விமானங்களையும் சீர்வேக ஏவுகணைகளையும் இனம் கண்டு அழிக்க வல்லன. இது அமெரிக்காவின் patriot missilesகளை ஒத்தன. அமெரிக்காவின் patriot missiles பல போர் முனைகளில் வெற்றீகரமாகப் பரீட்சிக்கப்பட்டன. ஆனால் இரசியாவின் S-300PMU-1 இன்னும் போர் முனையில் பரீட்சிக்கப்படவில்லை. ஏவுகணை எதிர்ப்பு முறைமை மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டவை: 1. கதுவி(Radar) எனப்படும் உணரிகள், 2. கட்டளை நிலையம், 3. ஏவுகணைகள். 1. கதுவி(Radar) எதிரியின் விமானங்களையோ அல்லது ஏவுகணைகளையோ இனம் கண்டு அவற்றின் வேகம் பாதை ஆகியவற்றை கணக்கிட்டு கட்டளை நிலையத்திற்கு அத்தகவல்களை அனுப்பும். கட்டளை நிலையத்தில் இருந்து ஏவுகணைகளுக்கு தகவல் அனுப்பப்பட்டு அவை ஏவப்பட்டு எதிரி விமானங்களையோ அல்லது ஏவுகணைகளையோ தாக்கப்படும். கதுவி(Radar)கள் ஒரு கனரக வாகனத்தில் இருக்கும், கட்டளைப் பணியகம் ஒரு கனரக வாகனத்தில் இருக்கும், ஏவுகணைகள் வேறு ஒரு வாகனத்தில் இருக்கும். இந்த கனரக வாகனங்கள் எந்த நிலத்திலும் எந்தக் கால நிலையிலும் சிரமமின்றி நகர வல்லன.
அமெரிக்காவின் patriot missiles:
படத்தில் சொடுக்கினால் பெரிதாகத் தெரியும். |
S-300PMU-1 missiles இரசியாவிடமிருந்து தனக்கு வந்துவிட்டதாக சிரிய அதிபர் பஷார் அல் அசாத் தெரிவிக்கிறார். ஆனால் அது உண்மையல்ல என இஸ்ரேலிய அமெரிக்க உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. S-300PMU-1 missiles முழுமையாக சிரியாவில் செயற்படத் தொடங்கினால் இஸ்ரேலிய விமானங்கள் இஸ்ரேலில் கூடப் பறக்க முடியாத நிலை ஏற்படலாம். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹூ S-300PMU-1 missilesஇஸ்ரேலை ஒரு விமானப்பறப்பற்ற பிரதேசமாக மாற்றிவுடும் எனவே இஸ்ரேல் அது செயற்படாமல் இருக்க ஆவன செய்யும் எனச் சூழுரைத்துள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிரியாவில் லிபியாவில் ஏற்படுத்தியதுபோல ஒரு விமானப்பறப்பற்ற பிரதேசத்தை உருவாக்குவதற்கான சாத்தியங்கள் பற்றி ஆராய பெண்டகனுக்கு உத்தரவிட்டுள்ளார். இதைக் கருத்தில் கொண்டே இரசியா S-300PMU-1 missiles சிரியாவிற்கு அனுப்பியுள்ளதாகக் கருதப்ப்டுகிறது. ஈரானுக்கும் இரசியா செய்ய இருந்த S-300PMU-1 missiles விற்பனை அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் ஆட்சேபத்தினால் நிறுத்தப்பட்டது. ஆனால் சிரியாவிற்கான விற்பனையில் இது நடக்க வில்லை. அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சி நிலைப்பது தொடர்பாக இரசியாவின் உறுதியான நிலைப்பாட்டை இது காட்டுகிறது.
S-300PMU-1 missilesசிரியாவிற்கு வந்தாலும் அவை பொருத்தப்பட்டு முழுமையாக்கப் பட சில வாரங்கள் எடுக்கும். அவற்றை இயக்கும் பயிற்ச்சியை சிரியப் படையினர் பெறச் சில மாதங்கள் எடுக்கும். அதற்கு முன்னர் இஸ்ரேலிய விமானங்கள் சிரியாவில் பெரும் தாக்குதல் நடாத்தி இரசியாவில் இருந்து வந்த S-300PMU-1 missilesகளை முற்றாக அழிக்கலாம்.
No comments:
Post a Comment