ஆண்களினதும் பெண்களினதும் DNA களின் செயற்பாட்டுப் போக்குகளை வைத்து ஆய்வு செய்த பிரபல ஒஸ்ரேலிய விஞ்ஞானியான பேராசிரியர் கிரேவ்ஸ் உலகில் ஆண் இனம் அழியப் போகிறது என்கிறார்.
The inherent fragility of the male sex chromosome, the Y sex chromosome, means that men are sliding towards extinction. இயல்பாகவே ஆண்களின் குரோமொசொம்மின் அழியக்கூடியதன்மை அவர்கள் அழிவை நோக்கிச் சரிகிறார்கள் என்கிறார் கன்பெரா பல்கைலைக்கழகப் பெண் விஞ்ஞானியான பேராசிரியர் கிரேவ்ஸ்.
பெண்களின் x குரோமொசொம்மில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆரோக்கியமான ஜீன்கள் இருக்கின்றன. பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்களின் Y குரோமோசோமிலும் இப்படி ஆயிரம் ஆரோக்கியமான ஜீன்கள் இருந்தனவாம். ஆனால் இப்போது அவை நூறாகக் குறைந்துவிட்டன. இவற்றில் SRY geneகள் தான் ஒரு கரு ஆணா பெண்ணா என்பதைத் தீர்மானிப்பவை.
பெண்களின் x குரோசோம்கள் ஒன்றுடன் ஒன்று நட்பானவை ஒன்றில் உள்ள குறைபாடுகளை அவை தாமாகவே திருத்திக்கொள்ளும். ஆனால் ஆண்களின் Y குரோமொசோம்கள் அப்படியல்ல. தங்களின் பழுதுகளை அவை திருத்திக் கொள்வதில்லை. இதானால் பழுதடைந்து அழியக்கூடியவை. இதனால் அவற்றின் அழிவை நோக்கிய சரிவு தடுக்க முடியாதவை.
ஆனால் ஆண்கள் மகிழ்ச்சியடையக்கூடிய செய்தி என்ன வென்றால் ஆணினம் அழிவதற்கு இன்னும் ஐம்பது இலட்சம் ஆண்டுகள் எடுக்கும்.
ஆனால் University College London இன் பேராசிரியர் Chris Mason இதை வேறுவிதமாகப்பார்க்கிறார். Y குரோமொச்சொம் முற்றாக அழியாமல் வேறுவிதமாகக் கூர்ப்படைந்து வேறு ஒரு விதமான உயிரினம் உருவாகும் என்கிறார் அவர். (அந்தப் புதிய உயிரினம் புடவைக் கடையில் கோபம் கொள்ளாமல் பொறுமையாக இருந்து வாங்கியவற்றிற்கு எல்லாம் பணம் செலுத்துமோ?)
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment