Friday, 5 April 2013

கவிதை: ஏதும் அறியாமல் சிந்தையில் பிணைந்தோம்





 விழியின் மொழிகள்
செய்த சத்தியப் பிரமாணங்கள்
கண்ணீரில் எழுதிய கவிதையானது

கனவின் மேடையில்
மாற்றிய மண மாலைகள்
காற்றில் வரைந்த ஓவியமானது

நினவுக் கட்டிலில்
இணைந்த உடலாசைகள்
கலைந்த மேகங்களானது



 இல்லாவிடில் பெரும் பிரச்சனையாய் இருப்பதால்
எங்கு தொட்டால் என்னாகும் என்ற அறிவு தேவைப்படுவதால்
அருகிருந்தால் சுகமாய் இருப்பதால்
ரிமொட் கொன்ரூலும் பெண்ணினமே

அற்றை யாண்டில்
சாறு கொள் பூமியில்
கழுவுறு கலிங்கம் பூண்டு
எந்தையும் நுந்தையும்
ஏதும் அறியாமல்
சிந்தையில் பிணைந்தோம்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...