சூழ் சதியங்கே வலிமையாகிட வலிமையாகிட - தமிழர்
போரணியதில் மௌனமாகிட விலகி ஒதுங்கிட
பேரழிவு அங்கே அரங்கேறிட பலவும் அழிந்திட
இடர்கள் பெருகிட மானுடர்களோடு மானுடமும் பலியானது
தீர்க்கவெனவந்தவர் அங்கே எமைத் தீர்துக்கட்டினர் - அதைக் கேட்க
ஒன்றாய் இணைவோம் ஓரணி நடப்போம்
மௌனிக்கப்பட்டது படைக்கலன்கள் மட்டுமே
மௌனித்திடுமோ தமிழ் மறவர்தம் மனச்சாட்சி
போரலை ஓயலாம் வேங்கைகள் பதுங்கலாம் - தன்மானப்
பேரலை என்றும் ஒயாது தமிழர் தலை சாயாது - என்றிட
ஒன்றாய் இணைவோம் ஓரணி நடப்போம்
பீனிக்ஸ் பறவையும் சொல்லட்டும் சொல்லட்டும்
தமிழனைப்போல் நானும் மீண்டெழுவேன் மீண்டெழுவேன் என
நீரலையும் ஆங்கே ஆர்ப்பரிக்கட்டும் ஆர்ப்பரிக்கட்டும்
தமிழரனைப்போல் நான் விழ விழ ஓயாமல் எழுவேன் என - அதற்கு
ஓன்றாய் இணைவோம் ஓரணி நடப்போம்
தாயகத் தமிழரின் போரகப் பரணியை
கருத்தில் எடுப்போம் கைகளைத் தொடுப்போம்
தடைகளை உடைப்போம் சரித்திரம் படைப்போம் - அதற்கு
ஒன்றாய் இணைவோம் ஓரணி நடப்போம்
தாரணி போற்றும் சீரணி இலண்டனில்
ஓன்றாய் இணைவோம் ஓரணி நடப்போம்
பேரணியாய் திரள்வோம் ஊரணியாய் எழுவோம்
பன்னாட்டாரின் மனக்கதைவைத் தட்டுவோம் தகர்ப்போம் - அதற்கு
ஒன்றாய் இணைவோம் ஓரணி நடப்போம்
ஒவ்வோரு நாடும் எம் நிலையறிந்திட
ஒவ்வொரு நாடும் எம்முடன் இணைந்திட
நீதியை உரைப்போம் நியாயத்தை நிலைநிறுத்துவோம்
ஈழவிடுதலையின் அடுத்த படியை இலண்டனில் கடப்போம்- அதற்கு
ஒன்றாய் இணைவோம் ஓரணி நடப்போம்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment