ஒரு மருந்துக் கடையில் ஒரு அழகிய பெண் தனக்கு நஞ்சு வேண்டும் என்றாள். அதற்கு மருந்தாளர் நஞ்சு ஏன் வாங்குகிறாய் எனக் கேட்டார். என் கணவனைக் கொல்வதற்கு என்றாள். ஆணினவாதியான அந்த மருந்தாளர் மிகுந்த ஆத்திரப்பட்டு. காவற்துறையை அழைத்து உன்னைக் கைது செய்யப்போகிறேன் என உரத்த குரலில் சத்தமிட்டு மிரட்டினார்.
அந்த அழகி பதட்டப்படாமல் நிதானமாக தனது கைப்பையைத் திறந்து அதற்குள் இருந்த ஒரு புகைப்படத்தை வெளியே எடுத்து அந்த மருந்தாளர் முன் வைத்தாள். அதில் அவளது கணவனும் மருந்தாளரின் மனைவியும் ஒன்றாக ஒரு கட்டிலில் தம்மை மறந்த நிலையில் இருந்தனர். இப்போது அமைதியடைந்த மருந்தாளர் ஓ நீ உரிய மருந்துச் சீட்டு வைத்திருப்பதால் உனக்கு நான் நஞ்சு தருகிறேன் என்றார்.
நான்கு தீபங்கள்
ஒரு ஆலயத்தில் நான்கு தீபங்கள் ஒரு வரிசையில் ஏற்றப்பட்டிருந்தன. ஒரு தீபம் என் பெயர் அமைதி இந்த உலகில் நான் இல்லை எனச்சொல்லிவிட்டு அணைந்து போனது. இரண்டாவது தீபம் நான்தான் சமாதானம் இந்த உலகில் நான் இல்லை என்று சொல்லிவிட்டு அணைந்தது. மூன்றாவது தீபம் என்பெயர் அன்பு நான் இந்த உலகில் இல்லை எனச் சொல்லிவிட்டு அணைந்து போனது. நான்காவது தீபம் நான்தான் நம்பிக்கை நான் அணைந்தால் எல்லாமே போய்விடும் நான் இருக்கும் வரை மற்ற மூன்று தீபங்களையும் என்னால் மீண்டும் ஏற்ற முடியும் என்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment