Sunday, 9 December 2012

திருமாவளவன் எந்த உலகத்தில் இருக்கிறார்?

"ஈழத்தில் மீண்டும் சிங்கள இனவெறி ஆட்டம்! இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!" இப்படிவிடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தோழர் திருமாவளவன் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார். அது மட்டுமல்ல தோழர் அவர்கள் அண்மையில் பிரித்தானியாவிற்கு சென்ற போது "ஈழத் தமிழர்களுக்கு இந்தியா பல கொடுமைகளைச் செய்துள்ளது. ஆனால் இந்தியாவை ஈழத் தமிழர்கள் வெறுக்கக் கூடாது." என்றும் போதித்துள்ளார்.

இந்தியா ஈழத் தமிழர்களுக்கு அள்ளி வைப்பதும் கொள்ளி வைப்பதும் இன்று நேற்று நடப்பதல்ல. நீண்ட காலமாகத் தொடர்கிறது. இதுபற்றிய விபரத்தைக்காண இந்த இணைப்பில் சொடுக்கவும்: என்று முடியும் இந்த இந்தியத் துரோகம்?

இந்திய மைய அரசின்மீது தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கே வெறுப்பு அதிகரித்துக் கொண்டு போகும் வேளையில், இந்திய மைய அரசு பல முனைகளில் தனது தமிழின விரோத செயற்பாடுகளை அரங்கேற்றும் வேளையில் தோழர் திருமாவளவன் ஈழத் தமிழர்கள் இந்தியாவை வெறுக்கக் கூடாது என்கிறார். இந்தியா தமிழர்களுக்குச் சாதகமாக ஏதாவது ஒன்றைச் செய்தால் அதை வைத்து நாம் இந்தியாவை வெறுப்பதை நிறுத்தலாம்.

 இந்தியாவின் இராசதந்திர விபச்சாரம்
2012இல் மார்ச்சில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழக் கூட்டத்தில் ஐக்கிய அமெரிக்காவின் பலத்த வற்புறுத்தல்களின் பின்னர் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து. அதும் சும்மா ஆதரிக்கவில்லை. தீர்மானத்தின் கடுமைப் போக்கை குறைத்த பின்னரே ஆதரித்தது. 2012 நவம்பர் முதலாம் திகதி மனித உரிமைக் கழகத்தில் நடந்த இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான இலங்கை பற்றிய மீளாய்வுக் கூட்டத்தில் இந்தியா உரையாற்றும் போது அரசியலமைப்பிற்கான 13வது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும், வடக்கு மாகாணத்திற்கான தேர்தல் நடாத்தப்படவேண்டும், வடக்குக் கிழக்கில் படைகளை அகற்றுதல், உயர்பாதுகாப்பு வலயங்களைக் குறைத்தல், காணிப்பிரச்சனை தீர்த்தல், மனித உரிமை மீறல்கள் தொடர்பான நம்பகரமான விசாரணை, மீளிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுதல் போன்ற பரிந்துரைகளைச் செய்ததார். நவம்பர் 5-ம் திகதி சமர்ப்பித்த இறுதி அறிக்கையில் தனது பரிந்துரைகளை நீக்கிவிட்டது. இது ஜெனிவா மனித உரிமைக் கழகத்தில் இருந்தவர்களை உலுக்கிவிட்டது. அங்கிருந்த பலரும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும்  இடையில் ஏதோ ஒரு இரகசிய உடன்பாடு ஏற்பட்டிருக்க வேண்டும் என்றே நம்புகின்றனர். கொழும்பில் உள்ள சிங்கள ஆய்வாளர்களையும் இது ஆச்சரியப்படுத்தியது. அமெரிக்கா சுவிஸ்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சில நாடுகள் முன்னுக்குப் பின்னர் முரணாக நடந்து கொள்கின்றன என்று இந்தியாவை மறைமுகமாகச் சாடினர்.

ஆட்சி மாறினாலும் கொள்கை மாறாது.
இப்படி இருக்கும் போது தோழர் திருமாவளவன் எம்மை இந்தியாவை விரும்பச் சொல்கிறார். முன்பு சிலர் காங்கிரசு ஆட்சி போனபின்னர் இந்தியா ஈழத் தமிழர்களுக்குச் சாதமாக நடக்கும் என்றனர். ஆனால் சுஸ்மா சுவராஜும் மஹிந்த ராஜபக்சவும் இரகசியப் பேச்சு வார்த்தை நடாத்தியமையும் மஹிந்த இந்தியாவிற்கு அழைக்கப்பட்டு பௌத்த மநாட்டை தொடக்கி வைக்க பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்தமையும் அந்த நம்பிக்கையைத் தகர்த்து விட்டது.  இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அதன் வெள்யுறவுக் கொள்கை பாதுகாப்புக் கொள்கை போன்றவற்றிம் மாற்றம் ஏற்படாது என்பதை தோழர் திருமாவளவன் உடபடப் பலர் புரிந்து கொள்ள வேண்டும்.

நவம்பர் 27-ம் திகதி மாவிரர் நாளை ஒட்டி இலங்கையில் நடந்தவை பற்றி தோழர் திருமாவளவன் இப்படிக் கூறுகிறார்:
  • ராஜபக்சவின் போர்க் குற்றங்கள் ஒவ்வொரு நாளும் அம்பலப்பட்டுவரும் நிலையில், சர்வதேச நாடுகளின் அழுத்தம் அதிகரித்துவரும் சூழலில் மீண்டும் இனவெறி நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டிருப்பது எதற்கும் கட்டுப்படாத அதன் போக்கையே காட்டுகிறது.ஏற்கனவே போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லையென ஐ.நா. உள் அறிக்கை ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில் மேலும் மேலும் தமிழர்கள் வேட்டையாடப்படுவதை வேடிக்கை பார்க்கக் கூடாது.எனவே, இந்திய அரசு உடனடியாக இலங்கை அரசை எச்சரிக்க வேண்டுமெனவும், பொய்க்குற்றச்சாட்டுகளின்பேரில் கைது செய்யப்படிருக்கும் மாணவர்களையும் தமிழ் மக்களையும் விடுவிக்க வலியுறுத்த வேண்டும் என்றும் இந்தியப் பேரரசை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.
இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு செய்யும் எல்லா அடக்கு முறைகளும் இந்தியாவின் ஆலோசனையுடனும் ஆசிகளுடனும்தான் நடந்து வருகிறது என்பதை இந்தியப் பாராளமன்ற உறுப்பினரான தோழர் திருமாவளவன் அறியமால் இருப்பது வேதனைக்குரியது. உங்கல் சொர்க்கத் தங்கம் சோனியாவின் போரைத்தான் தான் நடத்தி முடித்ததாக நீங்கள் சந்தித்து விருந்துண்ட ராஜபக்சே மாத்தையா சொன்னார். ஆனால் போர் நடந்த போது இந்தியாவின் போர இலங்கை நடாத்தியது என்பதை தோழர் உணர்ந்திருக்கவில்லை. ஒரு ஆங்கில ஊடகம் யாழ் பல்கலைக் கழகத்தின் நடந்த கைதுகளுக்கும் தாக்குதல்களுக்கும் பின்னணியில் இந்திய உளவுத் துறையின் கைகள் சம்பந்தப்பட்டிருப்பதை அம்பலப்படுத்தியமையை தோழர் அறியாமல் இருப்பது ஏன்? குற்றவாளியை நீதிபதியாக்க தோழர் முயல்கிறாரா? இந்தியாவின் தமிழின விரோதப் போக்கை இந்த உலகில் இருக்கும் எல்லோரும் அறிவர். தோழர் திருமாவளவன் இந்த உலகில் இல்லையா?

தோழர் திருமாவளவன் பற்றிய முன்னைய பதிவு: திருமாவளவனும் திசை மாறிவிட்டாரா?

3 comments:

Anonymous said...

பாவம் தோழர் திருமா! அவர் சோனியாவுடன் சேர்ந்து தனது மக்களுக்கு ஏதாவது செய்யட்டும் என்று விட்டுவிடுங்கள். ஈழத் தமிழர்களை பொறுத்தவரை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கையாலாகாதவர்களே. அவர்கள் ஆரியர்களின் அடிமைகளாகத்தான் இருக்கிறார்கள். அவர்களால் ஈழத் தமிழர்களுக்காக ஒரு துரும்பைத் தன்னும் தூக்கிப் போட முடியாது.

Anonymous said...

தங்கள் அரசியல் பிழைப்பிற்காக ஈழத்தின் கண்ணீரை விற்றுண்ணும் ஏமாற்றுக்காரர்கள். இவர்கள் கூக்குரல் தமிழகத்தின் கரையைக் கூட தாண்டாது. அரசியல் வியாபாரிகள்.

Tamil Advertisements said...

அரசியல் வியாதிகள்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...