Tuesday, 11 December 2012

சீன விமானப்படையின் வலிமை


சீனா தனது மக்கள் தொகைப் பெருக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றிக்கு ஏற்ப தனது ஆதிக்க நிலப்பரப்பை அகலமாக்க நினைப்பது இயற்கையானதே. ஆதிக்க நிலப்பரப்பை அகலமாக்குவதற்கு சீனா மூன்று முனைகளில் முயல்கிறது, தென் சீனக் கடல், கிழக்குச் சீனக் கடல், இந்தியாவுடனான எல்லையில் இருக்கும் அருணாச்சலப் பிரதேசம். சீனாவின் சர்ச்சைக்குரிய இந்த நோக்கத்திற்கு அதன் படை வலிமை முக்கியம். தரைப்படையைப் பொறுத்தவரை சீனா எண்ணிக்கை அளவில் உலகிலேயே அதிக அளவான படையினரைக் கொண்டுள்ளது. சீனா தனது கடற்படையையும் விமானப் படையையும் விரிவு படுத்துவதிலும் புதிய தொழில்நுட்ப மயப் படுத்துவதிலுக் அதிக கவனம் செலுத்துகிறது.

பெரும் விமானப்படை ஒத்திகை
சீன மக்கள் விடுதலைப் படையின் விமானப் படை - China’s People’s Liberation Army Air Force (PLAAF) அண்மைக்காலங்களாக பல முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை சீனா நவம்பர் மாத இறுதியில் நடாத்திய விமானப்படை ஒத்திகை எடுத்துக் காட்டியுள்ளது. பதின்நான்கு பல்வேறுபட்ட விமானப் படையணிகளில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட விமானிகள் சீன விமானப்படையின் போர் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர். சீன விமானப்படை வரலாற்றில் இது ஒரு பெரிய ஒத்திகையாகும். இது பதினொரு நாட்கள் நீடித்தது.


30-11-2012இல் சீனா அரங்கேற்றிய விமானப்படை ஒத்திகை பல படைத்துறை ஆய்வாளர்கள் சீன விமானப்படையின் வல்லமையை குறைத்து மதிப்பிட்டிருந்தனர் என்று நிரூபித்துள்ளது.  தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் தனது அயல் நாடுகளுடன் சீன கடுமையாக முரண்பட்டிருக்கும் வேளையில் சீனா செய்த விமானப் படை ஒத்திகை முக்கியத்துவம் பெறுகிறது.

J - 10

சீனாவின் J-10 விமானங்கள்
J-10 விமானங்கள் வாலில்லாத delta-அசையா இறக்கை-காற்றசைவுத் தொழில் நுட்பத்தின் படி இயங்குபவை. கிடையான அசைவுக்கட்டுப்பாட்டுடையவை. இதன் அசை அதன் மூக்கின் அசைவைக் கொண்டு கட்டுப்படுத்தப்படுகிறது.
The J-10 adopts a “tailless delta-canard” aerodynamic layout, which was originally developed for the cancelled J-9 fighter. The aircraft has the horizontal control surfaces moved forward to become a canard in front of the wing. When the aircraft pitches up, instead of forcing the tail down decreasing overall lift, the canard lifts the nose, increasing the overall lift. Because the canard is picking up the fresh air stream instead of the wake behind the main wing, the aircraft can achieve better control authority with a smaller-size control surface, thus resulting in less drag and less weight.
J-10 இன் விமானி உயர்த்தப்பட்ட இருக்கையில் இருந்து விமானத்தைச் செலுத்துவதால் விமானியால் எல்லாத்திசைகளிலும் பார்க்க முடியும். J-10 விமானங்களில் ஒருவர் மட்டும் இருக்கக் கூடியவை இருவர் இருக்கக் கூடியவை என இரு வகை உண்டு. இரட்டைக் குழல்கள் கொண்ட J-10 விமானங்கள் 50.5kg 23mm குண்டுகளை வீசக் கூடியவை. ஒரு நிமிடத்திற்கு 3000முதல் 3400 குண்டுகளை சுடமுடியும். விமானத்தில் பதினொரு இடங்களில் குண்டுகள் வைக்கப்பட்டிருக்கும். J-10 விமானங்கள் குறுகிய தூரத்திற்கும் மத்திய தூரத்திற்கும் ஏவுகணைகளை விண்ணில் இருந்து விண்ணிற்கு ஏவும் திறனுடையவை. எல்லாவகையான கால நிலைகளிலும் செயற்படும் திறன் J-10 விமானங்களிற்கு உண்டு.  J-10 உள்ளூரில் தயாரிக்கபப்ட்ட WP-15 turbojet engine ஆல் இயங்குகின்றன.



J - 11

சீனாவின் J-11 விமானங்கள்
J-11 விமானங்கள் இரசியாவிடமிருந்து வாங்கிய Sukhoi Su-27விமானங்களைப் பிரதி செய்து உருவாக்கப்பட்டவை. பனிப்போர் முடிவடைந்த பின்னர் இரசியாவிடமிருந்தும் உக்ரேயினிடமிருந்தும் பல படைக்கலன்களையும் தொழில்நுட்பங்களையும் சீனா வாங்கியது. பின்னர் J11ஐ மேம்படுத்தி J-11Bரக விமாங்களை சீனா உருவாக்கியது. இதில் உள்ள முக்கிய அம்சங்கள்:
     An indigenous multifunctional pulse-Doppler fire-control radar reportedly capable of tracking 6~8 targets and engaging 4 of them simultaneously;
    An indigenous digital flight-control system;
    A Chinese copy of the Russian OEPS-27 electro-optic search and tracking system;
    A strapdown INS/GPS navigation system;
    A ‘glass’ cockpit featuring four colour multifunctional displays (MFD) and a wide-angle holographic head-up display (HUD);


இரசியாவிடமிருந்து Su-35 விமானங்களை வாங்குகிறது
சீனா இரசியாவிடமிருந்து Su-35 விமானங்களை 1.5பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறது. The Su-35 is a radically modernized version of the Su-27 aircraft to significantly enhance its combat effectiveness against aerial, ground and sea tagets. For better agility and takeoff/landing performance, the aircraft is provided with a canard. In terms of its aerodynamic configuration, the Su-35 is an unstable triplane (wing + horizontal tail + canard). The Su-35 chassis has been reinforced because of the increased takeoff and landing weight of the aircraft. The required stability and controllability characteristics are assured through a quadruple-redundant digual-a.nalog remote control system. The Su-35 is equipped with a newly developed wing featuring an increased relative thickness. The main Handing gear struts are modified and the nose leg is replaced with ai reinforced two-wheel strut. The aircraft is equipped with an inflightt refueling system.

சீனாவின் J-20 stealth fighter
ராடார்களுக்கு தென்படாத stealth fighter விமானங்கள் உலகில் மூன்று நாடுகளில் மட்டுமே இருக்கின்றன. சீனாவு அந்த மூன்று நாடுகளில் ஒன்றாக 2010இல் இணைந்து கொண்டது. ஆப்கானிஸ்த்தானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு அமெரிக்க stealth fighter விமானத்தை சீனா விலைக்கு வாங்கி stealth தொழில்நுட்பத்தைப் பெற்றுக் கொண்டது.



எண்ணிக்கையைக் குறைத்து தரத்தைக் கூட்டிய சீனா
சீனா கடந்த சில ஆண்டுகளில் தனது போர் விமானங்களில் எண்ணிக்கையை 3400இல் இருந்து 2600ஆகக் குறைத்துக் கொண்டது. பல முன்னணி நாடுகளும் தமது சிக்கன நடவடிக்கையாக தமது விமானங்களின் எண்ணிக்கையைக் குறைத்து தரத்திலும் தொழில் நுட்பத்திலும் மேம்பட்ட விமானங்களில் அதிக கவனம் செலுத்தின.

சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்
முன்னாள் சோவியத் யூனியனின் வரியாக் என்னும் விமானம் தாங்கிக் கப்பலை சீனா உக்ரேயினடம் இருந்து வாங்கி திருத்த வேலைகள் செய்து புதுப்பித்து ஷி லாங் எனப் பெயரிட்டுள்ளது.  ஜப்பானும் இந்தியாவும் மூன்று விமானம் தாங்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளன. அவற்றிற்கு ஈடு கொடுக்கும் வகையில் சீனாவும் தனது விமானம் தாங்கிக் கப்பல்களை நான்காக அதிகரிக்கவுள்ளது.
போர் முனை அனுபவம் என்று பார்க்கும் போது சீன விமானப் படை கடந்த ஐம்பது ஆண்டுகளாக எந்த ஒரு போரிலும் ஈடுபட்ட அனுபவம் சீன விமானப்படைக்கு இல்லை.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...