உங்களுக்கு தெரியாதது எதாவது இருந்தால் கூகிளிற்குப் போங்கள்.
உங்களுக்கு தெரிந்தது ஏதாவது இருந்தால் Facebookஇல் status update செய்யுங்கள்.
திருமணம் என்பது ஒரு வித்தியாசமான உறவு முறை. அதில் ஒருவர் எப்போதும் அடங்காதவர். மற்றவர் கணவர்.
விட்டுக்கொடுக்கும் கணவன்: தனது திமிரிலும் பார்க்க தனது பாதுகாப்பில் அதிக அக்கறை உள்ளவன்.
உலகிலேயே சிறந்த கணவன்: பக்கத்து வீட்டுக்காரியின் கணவன்.
விட்டுக் கொடுப்பது தான் வாழ்க்கை. சேலைக் கடையில் அவளை அவள் பாட்டுக்கு விட வேண்டும். பின்னர் பில்லுக்கு பணம் கொடுக்க வேண்டும்.
நூலிற்கு முகம் கொடுத்து அறிவை வளர்ப்பது அந்தக் காலம்.
முகநூலிற்குள் போய் அறிவை கெடுப்பது இந்தக்காலம்.
குற்றவாளிகளை இந்திய அரசு ஏன் தண்டிக்கிறது?
தனக்கு போட்டியாக இருப்பவர்களை அது விரும்புவதில்லை.
உனது படுக்கை அறையை ஏன் கல்லூரி வகுப்பறை போல் அமைத்திருக்கிறாய்?
அப்படி மாற்றிய பின்புதான் இலகுவாக தூக்கம் வருகிறது.
Facebook is the second most popular word that starts with ‘F’ and ends with ‘K’
நீ தூங்கும் போது நீ உளறினால் அது parasomnia எனப்படும். நீ தூங்கும் போது இன்னொருவர் உள்றினால் அது விரிவுரை எனப்படும்.
மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் Facebookஇல் இருந்தால் status update எப்படி இருக்கும்:
பெட்டை நாய்: எனது ஆறாவது மகன் தன் தந்தை யார் என்று கேட்கிறான். என்ன சொல்வதென்று தெரியவில்லை.
கரப்பான் பூச்சி: நான் தான் வீட்டில் பெரியவன். எல்லாரையும் வீட்டில் மிரட்டும் வீட்டுக்காரனின் மனைவி என்னைக் கண்டதும் மிரள்கிறாள்.
நுளம்பு: ஒரு தெரியாத்தனமாக சிவப்பு விளக்குப் பகுதியில் போய் இரத்தம் குடித்துவிட்டேன் இப்போது நான் HIV +.
ஆடு: 21-12-2012 என்ன ஈத் பண்டிகையா?
யானை: அம்மாவிற்க்கு கிரக தோச நிவர்த்திக்கு கஜ பூசை செய்யச் சொன்ன சோதிடன் மட்டும் என் துதிக்கையில் அகப்பட்டான் என்றால்.....
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment