ஆப்கானிஸ்த்தான் எல்லையில் உள்ள பாக்கிஸ்தானிய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத பிரதேசத்தில் ஐக்கிய் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடாத்திய தாக்குதலில் அல் கெய்தாவின் தளபதிகளில் ஒருவரான அபு ஜெய்த் அல் குவைத்தி 06/12/2012 வியாழக்கிழமை கொல்லப்பட்டுள்ளார்.
46 வயது மத குருவான அல் கெய்தாவின் தளபதிகளில் ஒருவரான அபு ஜெய்த் அல் குவைத்தி ஷேக் காலித் அப்துல் ரஹ்மான் அல் ஹுசேயின் என்னும் பெயராலும் அழைக்கப்படுபவர். இவருடன் இவரது மனைவியும் கொல்லப்பட்டதாக அறியப்படுகிறது. அல் குவைத்தி தற்போதுள்ள அல் கெய்தாவின் இரண்டாம் நிலைத் தலைவர் என அறியப்படுகிறது. இவர் வீரச்சாவு அடைந்தார் என அல் கெய்தாவும் உறுதி செய்துள்ளது. வட வாரிஸ்த்தானில் உள்ள மிர் அலி நகரில் உள்ள இவரது வீட்டை அமெரிக்க ஆளில்லா விமானத்தில் இருந்து வீசப்பட்ட குண்டுகள் தரை மட்டமாக்கியபோது அல் குவைத்தியும் அவரது மனைவியும் கொல்லப்பட்டனர். அவரது மகள் காய மடைந்துள்ளார்.
அல் குவைத்தை வெற்றிகரமாக கொலை செய்ததன் மூலம் அமெரிக்கா தனது தொழில்நுட்ப மேன்மையையும் உளவுத் திறமையையும் நிரூபித்துள்ளது என்று கருதப்படுகிறது. ஒசாமா பின் லாடனின் படு கொலையின் பின்னர் பல அல் கெய்தாப் போராளித் தலைவர்களை ஆப்-பாக் எல்லையிலும் சூடானிலும் அமெரிக்கா கொன்றுள்ளது.
குவைத்தில் பிறந்த மத குரு அல் குவைத்தி சிறந்த பேச்சாளராவார். ரம்ழான் பாடங்கள் என்னும் அவரது உரையடங்கிய காணொளிப்பதிவு அல் கெய்தா போராளிகள் மத்தியில் பிரபலமானது. குவைத் அரசின் மதத் துறையில் பணிபுரிந்த அல் குவைத்தி தன்னை ஒரு புனிதப் போராளியாக அல் கெய்தாவில் இணைத்துக் கொண்டார்.
2012-ம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் அபு யாஹியா அல் லிபி (Abu Yahya al-Libi) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அல் குவைத்தி இரண்டாம் நிலத் தலைவர் பதவியை ஏற்றிருந்தார்.
அண்மைக் காலங்களாக அமெரிக்கா தனது தீவிரவாதிகளுக்கான போரில் ஆளில்லா
விமனங்களைப் பாவித்து வருகிறது. ஆரம்பத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும்
வேவு நடவடிக்கைகளிலும் பாவிக்கப்பட்ட வேவு விமானங்கள் இப்போது மேலும்
நவீன மயப்படுத்தப்பட்டு தாக்குதல்களுக்கும் பயன்படுத்தப் படுகின்றன.
ஆப்க்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானின் வட பகுதியிலும் 2006-ம் ஆண்டிலிருந்து
அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளைக்
கொன்றுள்ளன. பாக்கிஸ்த்தானில் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்களால் பல
அப்பாவி மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். பாக்கிஸ்த்தான் அமெரிக்காவிடம்
பலதடவை திரை மறைவில் இந்த ஆளில்லாப் போர் விமானங்களின் பாவனையை
நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது. பாக்கிஸ்தானிடமும் பல ஆளில்லாப்
போர் விமானங்கள் இருக்கின்றன. இப்போதுள்ள அதன் இரு ஆளில்லாப் போர்
விமானங்கள் அணிகளை பாக்கிஸ்த்தான் ஆறு அணிகளாக உயர்த்த எண்ணியுள்ளது என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்காவின் உளவுத் துறையான சிஐஏ பல நாடுகளில் ஆளில்லா விமானத் தளங்களை அமைத்து பல சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இச் செயற்பாடுகள் அமெரிக்க சட்ட வரம்பிற்கு உட்படாதது. அதனால் இவை பல மனித உரிமை மீறல்களைப் புரிகிறது. அல் கெய்தா இயகக்த்திற்கு அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பலத்த இழப்புக்களை
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment