
இலங்கைப் போரில் நடந்த சகல வரம்பு மீறல்கள் தடை செய்யப்பட்ட ஆயுதப் பாவனைகள் இறுதிப் போரில் காயப்பட்ட மக்கள் உயிருடன் புதைக்கப் பட்டமை தொடர்பான ஒளிப்பதிவுகளை அமெரிக்கா செய்மதி மூலம் பதிவு செய்து வைத்துள்ளது அது தருணம் வரும் போது அவற்றைப் பவிக்கும் என்று ஏற்கனவே இங்கு பதியப்பட்டுள்ளது அதை காண இங்கு சொடுக்கவும்
இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பான அமெரிக்க அரசாங்க அறிக்கை தயாரிக்கப் பட்டுவிட்டது. அவ்வறிக்கையை அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப் படுமுன் இலங்கையில் இருந்து ஒரு உயர்மட்டக் குழு அமெரிக்கா சென்று அமெரிக்க நடவடிக்கைக்கு எதிராக களமிறங்கி விட்டது. இதனால் அறிக்கை அமெரிக்கக் காங்கிரசிற்கு சமர்பிப்பது இடை நிறுத்தப் பட்டுள்ளது.
போரில் இலங்கைக்கு உதவிய இந்தியா, சீனா, பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளுக்கு இலங்கையில் உரிய பாகங்கள் வழங்கப் பட்டுவிட்டன. சீனாவிற்கு அம்பாந்தோட்டை, நுரைச் சோலை போனறவையும் இந்தியாவிற்கு திருகோணமலை, மன்னார், காங்கேசந்துறை போன்றவையும் பாக்கிஸ்த்தனிற்கு திரைமறைவிலும் அவரவர்களுக்கு உரிய அவிர்ப் பாகங்கள் வழங்கப் பட்டுவிட்டன. இப்போது அமெரிக்காவின் பங்கு எங்கே?
மாபலி என்ற மன்னன் பெரிய யாகத்தைச் செய்தான் தான் விரும்பியவற்றை அடைய. அங்கு தானம் கேட்டு வந்தவர்க்கெல்லாம் அவரவர்களுக்கு உரியபடி அவிர்ப்பாகங்களை வழங்கினான். அவன் யாகத்தை அழிக்க திருமால் திருவுளம்(?) கொண்டாராம். அதற்காக வாமன அவதாரம் எடுத்தார்.
வாமன அவதாரம் எடுத்த நாராயணன் மகாபலி மன்னனிடம் மூன்றடி மண் தானம் கேட்க, குள்ளமான உருவத்துடன் வந்திருப்பது பகவான் என்று அறியாத மகாபலி மன்னன், “மூன்றடி மண் தானே… தாராளமாக எடுத்துக்கொள் என்று சொல்ல…” பகவான் விஷ்வ ரூபம் எடுத்து ஒரு அடியால் பூமியையும் பாதாள லோகத்தையும் மறு அடியால் ஆகாயத்தையும் அளந்து மூன்றாவது அடி எங்கே வைக்க என்று கேட்க, திகைத்த மகாபலி மன்னன் “என் தலையில் வைக்கவும்…” என்றானாம். அவன் தலைவிதி அப்படி. நாராயணன் அவன் தலையில் கால் வைத்து அழுத்தி அவனைக் கொன்றாராம்.
இதுபோலத்தான் இப்போது அமெரிக்கா தனது பங்காக போர்குற்றங்களைச் சாட்டாக வைத்து இலங்கையைத் தனது பிடிக்குள் கொண்டுவரப் போகிறது. அது மற்றப் பங்காளர்களுக்கு பேரிடியாக அமையப் போகிறது.
No comments:
Post a Comment