Saturday, 30 July 2011

பிக்-அப்(எடுத்துவா)கவிதைகள் - 2

அழகு ஒரு மணல் என்றால்
என் சொல்வேன்
நீ மரீனா கடற்கரையடி

முடிவிலா அலையியக்கம்
வேண்டி நிற்கிறேன்
உன்னோடு

பதினைந்து பில்லியன் உடுக்களை
உன் இரு கண்களில்
எப்படி அடக்கினாய்

நீ இருக்கும்வரை
எவருக்கும் தேவைப்படாது
வயகாரா

உன் பெற்றோர்கள்வல்லரசு நாடுகளா
ஏன் இந்தப் பேரழிவு விளைவிக்கும்
ஆயுதத்தை உருவாக்கினர்.

எங்கு கற்பேன்
கூடு விட்டு கூடு பாயும் வித்தையை
உன் இதயத்துள் புக

1 comment:

பனித்துளி சங்கர் said...

கவிதை வாசிக்கும்போதே ஒரு கிளுகிளுப்பா இருக்கு . கலக்குங்க

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...