Friday 29 July 2011

ராஜபக்சேக்களுக்கு ஆப்பு வைப்பது யார்?


  • சனல்-4 தொலைக்காட்சி ராஜபக்சேக்கள் செய்த போர் குற்றத்தை ஒரு தொடர் நாடகம் போல் ஒளிபரப்பி வருகிறது. பிரித்தானியாவிற்குள் மட்டும் சேவை புரியும் ஒரு தொலைக்காட்சி ஒரு பன்னாட்டு விவகாரத்தில் மிகச்சிறந்த பணியாற்றுகிறது. வெறும் நிகழ்ச்சியாக ஒளிபரப்புவதுடன் நிற்காமல் பன்னாட்டு அமைப்புக்கள் முன்னிலையில் போர்க்குற்றம் நடந்ததை வலியுறுத்துகிறது. அதன் சேவைக்கு தலை வணங்குவோமாக.
  • இலங்கைக்கான அமெரிக்க உதவிகளை நிறுத்தக் கோரு முன்மொழிவு அமெரிக்க மூதவை முன் வைக்கப்பட்டது.
  • இந்திய மகளிர் அமைப்பு இலங்கையில் தமிழ்ப்பெண்களுக்கு அட்டூழியங்கள் நடக்கும் போது மௌனமாக இருந்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போது இலங்கை மனித உரிமைகளுக்கு இந்தியா காரணம் என்று குரல் கொடுக்கிறது. மலையகத்தில் பெண் தொழிலாளர்களுக்கு இழைக்கும் கொடுமைகளைப் பற்றி இவர்கள் என்றாவது கவலைப்பட்டார்களா?
  • அமெரிக்க அரசச் செயலர் ஹிலரி கிளிண்டன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைபற்றி பேச்சு வார்த்தை நடத்தினார்.
  • பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் லியோம் பொக்ஸ் இலங்கை சென்றார். அவரது பயணத்திற்கு எதிராக பிரித்தானியா வாழ் தமிழர்கள் எதிர்ப்புக் காட்டவில்லை. சென்ற ஆண்டு அவர் செல்ல முயன்ற போது அது தமிழர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
  • அமெரிக்க பிரதி அரசச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்து உரையாடினார்.
  • பரம வைரிகளாக இருந்த தமிழ்நாட்டுத் தமிழின உணர்வாளர்கள் ஜெயலலிதாவை தேர்தலில் வெற்றி பெற வைத்தனர்.
  • இந்திய பாரதிய ஜனதா கட்சியின் நிதின் கட்காரி பிரித்தானியத் தமிழர் பேரவையினரை இலண்டனில் சந்தித்தார்.
  • மலேசியாவில் ஈழத் தமிழர்களுக்கு உதவும் அறக்கட்டளை அமைப்பு பெரும் தொகைப் பணம் சேகரித்தது.(20-07-2011)
  • இந்திய கர்நாடக மநிலத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக மாநாடு.

மொட்டைகளுடன் முழங்கால்கள் இணைகின்றன.
இந்த நிகழ்வுகள் மொட்டைகளும் முழங்கால்களும் போல்தான் இருக்கின்றன. என்றாலும் இவை யாவற்றிக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக எம்மால் ஊகிக்க முடியும். அந்தத் தொடர்பாளர் யார் என்பதை ஊகிப்பது சிரமம் அல்ல உறுதிப்படுத்துவது சிரமம். அந்தத் தொடர்பாளர் இலங்கை ஆட்சியாளர்களுக்கு ஒரு ஆப்பு வைக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுகிறார் என்றும் உறுதியாகச் சொல்ல முடியும். இலங்கை ஆட்சியாளர்களுக்கு ஆப்பு வைக்கும் பட்சத்தில் அவர்களின் ஆபத்பாந்தவனாக இரட்சிக்க வருபவர்கள் இந்தியாவும் சீனாவுமே.  அதனால் மேலுள்ள சில நிகழ்வுகள் இந்தியாவின் இரட்சிப்புக்கு எதிரான நடவடிக்கைக்களே என்று பார்க்கும் போது மொட்டைகள் முழங்கால்களுடன் நன்கு இணைகின்றன. இலங்கை ஆட்சியாளர்கள் எதிராக ஆப்பு வைப்பவர்கள் இலங்கையில் ஓர் ஆட்சி முறைமையை விரும்புகிறார்களா அல்லது ஆட்சியாளர்களை மாற்ற முயல்கிறார்களா? தமிழர்களுக்குத் தேவை ஆட்சி முறைமை மாற்றமே.

இது தொடர்பாக மேலு ஒரு பதிவைக் காண இங்கு சொடுக்கவும்:

இலங்கையில் அமெரிக்காவின் அவிற் பாகம்

1 comment:

Unknown said...

Hats off for channel4

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...