Tuesday, 26 July 2011

கதறிய "பிரேதம்" தலை தெறிக்க ஓடிய காவலாளிகள்.

தென் ஆபிரிக்காவின் கேப் ரவுனின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள ஒரு சிறு ஊரில் பிரேத அறையில் காவலுக்கு இருந்த இரு காவலாளிகள் ஒரு "பிரேதம்" இங்கு குளிருது என்னை இதற்குள் இருந்து எடுங்கள் என்ற குரல் கேட்டுத் தலை தெறிக்க ஓடினர். பின்னர் ஊர்மக்கள் உதவியுடன் பிரேத அறைக்கு மீண்டும் வந்து அவசர சிகிச்சை வண்டியை அழைத்து மருத்துவ மனைக்கு கொண்டு சென்றபோது அந்த "பிரேதம்" உயிருடன் இருப்பதை அறிந்து கொண்டனர்.

அந்த 50 வயதானவர் இறந்துவிட்டார் என நம்பிய அவரது குடும்பத்தினர் தனியார் அமரர் சேவையை அணுகி அவரது உடலை இறுதிக் கிரியைகள் வரை ஒரு பிரேத அறையில் வைக்க ஏற்பாடு செய்தனர். ஆனால் அவர் இறக்கவில்லை. அவரது உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஒருவர் இறந்துவிட்டார் என்பதை தீர்மானிக்கும் சட்ட பூர்வ உரிமை மருத்துவர்களுக்கும் காவல்துறைக்கும் தான் உண்டு என்றனர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...