Tuesday 17 May 2011

சொர்க்கம் என்பது வெறும் கட்டுக் கதை என்கிறார் பிரபல விஞ்ஞானி Stephen Hawking


பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி Stephen Hawking சொர்க்கம் இறப்பின் பின் வாழ்வு என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நாம் இறக்கும் போது எமது மூளை கணனி ஒன்று நிறுத்தப் படுவது போல நிறுத்தப்படுகிறது என்கிறார் அவர்: "I regard the brain as a computer which will stop working when its components fail," he told the British newspaper. "There is no heaven or afterlife for broken-down computers."

சென்ற ஆண்டு பிரபஞ்சம் கடவுளால் படைக்கப்படவில்லை என்று சொல்லி பல மதவாதிகளை ஆத்திரப்படுதியவர் Stephen Hawking.

Motor Neurone Disease என்னும் நோயால் ப்ல வருடங்களாகப் பாதிக்கப்பட்டு சாவின் நிழலில் தான் வாழுவதாகக் குறிப்பிடுகிறார் Stephen Hawking. தான் இப்போது இறக்கவிரும்பவில்லையாம் இன்னும்பல தான் செய்ய இருக்கிறாராம் Brief History of Time என்ற அதிக பிரதிகள் விற்பனையான நூலை எழுதிய இந்த விஞ்ஞானி.

சொர்க்கம் என்பது இருட்டுக்குப் பயந்தவர்களினிதும் இறப்பிற்குப் பயந்தவர்களினதும் கட்டுக்கதை என்கிறார் Stephen Hawking. கடவுளை நம்புவது இருட்டுக்கான பயத்தையும் இறப்பிற்கான பயத்தையும் நீக்குகிறது என்கிறார் இந்த கேம்பிரிட்ஜ் பேராசிரியர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...