
கலாநிதி டேவிட் கரியர் என்னும் விஞ்ஞானி பெண்கள் உயரமான ஆண்களை விரும்புவதற்கான காரணத்தை ஆய்வு செய்து கண்டறிந்துள்ளார். அவர் இந்த உயரமான ஆண்களிடம் பெண்களுக்கு உள்ள ஈர்ப்பு நெடுங்காலமாக இருந்து வருகிறது என்கிறார். உயரமான ஆண்கள் தங்களையும் தங்கள் பிள்ளைகளையும் எதிரிகளிடமிருந்தும் ஆபத்தில் இருந்தும் பாதுகாக்க வ்ல்லவர்கள் என்று பெண்கள் தொன்று தொட்டே நம்பி வந்துள்ளனர். மனித இனம் கூர்ப்படைய ஆரம்பித்ததில் இருந்தே இந்த ஈர்ப்பு தொடங்கிவிட்டதாம். உயரமான ஆண்கள் தங்கள் நீண்ட கைகளால் எதிரிகளை பலமாகத் தாக்கக்கூடியவர்கள் என்று பெண்கள் நம்புகின்றனர் என்கிறார் கலாநிதி டேவிட் கரியர் என்னும் விஞ்ஞானி. இதன் காரணமாக பெண்கள் உயரமான ஆண்களை விரும்புகிறார்கள். இந்த விருப்பம் அவர்கள் மரபணுக்களின் பதிந்துள்ளது.
விஞ்ஞானி டேவிட் கரியர் ஆண்கள் நடுத்தரமான உயரமுள்ள அல்லது குள்ளமான பெண்களையே விரும்புகிறார்கள் என்கிறார்.
No comments:
Post a Comment