Saturday 21 May 2011

ஐ-போன் - 5 வருகிறது


ஐ-போன்கள் ஒரு சிறந்த கருவி என்பதிலும் பார்க்க அது சிறந்த விளையாட்டுப் பொருள் என்று சொல்வொரும் உண்டு. கருவியோ விளையாட்டுப் பொருளோ விற்பனையில் பெரும் சாதனை படைத்து வருகின்றன ஐ-போன்கள்.

ஆப்பிளின் அடுத்த ஐ-போன் எப்படி இருக்கும் என்பது பற்றிய தகவல்களை அறியப்பலர் ஆவலாக உள்ளனர். அதுபற்றிய செய்திகள் இப்போது கசியத் தொடங்கிவிட்டன:
  • அடுத்த ஐ-போன் iPhone 4S எனப் பெயரிடப்படும்.
  • இப்போது உள்ள ஐ-போன்களிலும் பார்க்க தடித்ததாகவும் விரைவாகச் செயற்படக்கூடியதாகவும் இருக்கும்.
  • சில அழகுபடுத்தல் வேலை இருக்கும்.
  • அதில் A5 dual-processorஉம் HSPA+ support உம் இருக்கும் ஆனால் LTE இருக்காது.
  • NFC chipஇருக்காது அதாவது Near-field technology. Near-field technologyஇன்னும் பிரபலமாகும்வரை ஐ-போன் காத்திருக்குமாம்.
  • திரை பெரிதாகும்.
  • 8MP ஒளிப்பதிவுத்திறன் கொண்டிருக்கும்.
ஐ-போனிற்கு பிறகு வந்த சம்சங் கைப்பேசிகளில் அடொப் ஃபிளாஸ் பிளேயர் செயற்படக்கூடியதாக உள்ளன. புதிய iPhone 4S இல் அடொப் ஃபிளாஸ் பிளேயர் செயற்படக்கூடியதாக இருக்குமா என்று தெரியவில்லை.

2011 நவம்பரில் iPhone 4S வெளிவரலாம். நத்தார் அதிரடியாக இருக்கும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...