Sunday, 15 May 2011

தமிழ்நாட்டை என்று தமிழன் ஆள்வான்?


துள்ளிக் குதிக்க இங்கு ஒன்றுமில்லை
தோற்கடிக்கப்படவேண்டியவன்
தோற்கடிக்கப்பட்டான் இங்கே
வெல்லக் கூடாதவள் - இங்கு
வென்றுவிட்டாள்.
தமிழர்களின் வெற்றியல்ல
பார்ப்பனக் கும்பலின் வெற்றியிது
சோ என்னும் சொறிநாயின்
ஆலோசனைப்படி நடக்கும் ஆட்சி
தமிழ்நாட்டை என்று தமிழன் ஆள்வான்?

எம்மினம் அழிக்கப்பட்டபோது
உண்ணாவிரத நாடகமாடியவன் தோற்றான்
தமிழன் செத்துத்தான் ஆகவேண்டும் என்றவள்
வெற்றிக்கனி பறித்து நிற்கிறாள்
ராஜபக்ச தமிழரை கொல்லவில்லை
புலிகளைத்தான் கொல்கின்றான்
ஆதரவு நாம் கொடுப்போம் என்ற
பார்ப்பனக் கும்பலின் கை ஓங்குதல் தகுமோ?
தமிழ்நாட்டை என்று தமிழன் ஆள்வான்?

உழைக்க வேண்டிய நேரத்தில்
கட்சிக்காக உழைத்தாய்
ஒதுக்க வேண்டியவர்களை
ஒதுக்க வேண்டிய நேரத்த்ல்
ஒதுக்கி வைத்தாய்
கொள்ளை அடிக்க வேண்டிய நேரத்தில்
அடித்தாய் கொள்ளை கொள்ளையாக
சொத்துச் சேர்க்க வேண்டிய நேரத்தில்
குடும்பத்திற்கு சொத்து சேர்த்தாய்
திருந்த வேண்டிய நேரத்தில்
திருந்தவில்லை
ஒதுங்க வேண்டிய நேரத்தில்
ஒதுங்கவுமில்லை
உதைக்க வேண்டிய நேரத்தில்
உதைத்தனர் மக்கள்

நரியூருக்கஞ்சி கரடியூர் சேர்ந்தோம்
கொதிக்கும் பானையில் இருந்து
குதித்தோம் துள்ளி
தவறி விழுந்தோம்
சுடு நெருப்பில்
தமிழ்நாட்டை என்றுதான்
தமிழன் ஆள்வான்?

2 comments:

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் said...

சனி, 14 மே, 2011
ஆட்சி மாற்றம்
தமிழக தேர்தல் பெரிய மாற்றத்தை உருவாக்கி இருந்தாலும்,மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்பது உறுதியில்லை.தி,மு,க,--அ,தி,மு,க -என்ற இரு கட்சிகளும் ஒரே குட்டையில ஊறிய மட்டைகள்தான்,என்பது அனைவரும் அறிந்ததுதான்.இரண்டு கட்சிகளும் மாறி மாறி வந்துகொண்டுதான் இருக்கும்,இரு கட்சிகளும் கொள்ளை அடிப்பதில் வல்லமை படைத்தவர்கள்.
இந்த இரு கட்சிகளும் கருத்துவேறு பாட்டினால்,சுய நலத்திற்க்காக பிரிந்த கட்சிகளாகும்,இரு கட்சிகளும் மக்களை பேச்சால் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.நம்முடைய பேச்சை மக்கள் நம்பி ஏமாறுபவர்கள் என்பது இரு கட்சிகளுக்கும் தெரியும்.இலவசம் என்ற பெயரில் மக்களுக்கு கூலியை கொடுத்து ஆட்சிக்கு வரும் நிலை ஏற்பட்டுவிட்டது,
மக்களுடைய உழைப்பை உறிஞ்சும் ரத்தவெறி பிடித்தவர்கள் இவர்களை விட்டால் நமக்கும் கதியில்லை என்ற நிலை தமிழகத்தில் ஏற்ப்பட்டுவிட்டது.
தன்னலம் கருதாத தமிழகத்தின் முதல் முதல்வர் ஓமந்துறார்,ராஜாஜி,காமராசர்,பக்தவச்சலம்,சுந்தரவடிவேல்.சுபரமனியன்.போன்ற தலைவர்கள் இந்த த்மிழ் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்து வந்தார்கள்.மக்கள் நலனில் மிகுந்த அக்கறைக் கொண்டு மக்களை அனைத்து வகையிலும் முன்னேற்றம் அடைய வைத்தார்கள்,அந்த துய்மையனவர்களை,பகுத்தறிவு என்ற பேரால் மக்களை பேச்சின் மூலமாகவும் திரைப்படத்தின் மூலமாகவும்.மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்தவர்களாகும்.
இவர்கள் வந்ததிலிருந்து மக்கள் ஒழுக்கம் குறைந்துவர்களாக மாறிவிட்டார்கள்.
ஆட்சிக்கு வருபவர்கள் முதலில் தனிமனித ஒழுக்கம் தேவை,அவர்களே ஒழுக்கம் இல்லை என்றால் மக்களை எப்படி காப்பாற்றுவார்கள்.பணம் ஒன்றே குறிக்கோளாக இருக்கிறார்களே தவிர மக்கள் நலனில் அக்கறை என்பது யாருக்கும் இல்லை.
மக்கள் ஒழுக்கமுள்ள நேர்மையுள்ள,சுயநலமில்லாத விபரம் தெரிந்த நல்லவர்களை தேடி கண்டு பிடித்து ஆட்சியில் அமரவைக்கும் காலம் எப்பொழுது வருமோ அப்பொழுதுதான் நம் நாடும் நாட்டுமக்களும் நலமுடன் வாழ முடியும் .அதுவரையில் நாடு உருபடியாகாது மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ முடியாது.வள்ளலார் எப்படிப்பட்டவர்கள் ஆட்சியில் அமரவேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிரார்கள்

கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக
அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க ---தெருனயந்த
நல்லோர் நினைத்த நலம் பெருக நன்று நினைத்
எல்லோரும் வாழ்க இசைந்து .

அச்சம் தவிர்த்தே அருளில் செலுத்துகின்ற
விச்சை அரசே விளங்கிடுக -- நச்சரவ
மாத்திக் கொடிய உயிர் அத்தனையும் போய்ஒழிக
நீதிக் கோடி விளங்க நீண்டு .

என்கிறார் வள்ளலார் மக்களை வழி நடத்தும் ஆட்சியாளர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறார் .

இனிமேலாவது நல்லவர்களை ஆட்சி பீடத்தில் அமர்த்த முயற்ச்சி செய்யுங்கள்.
கொல்லா நெறியே குவலயம் ஓங்குக
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

Anonymous said...

அம்மையாரின் கடந்த கால அரசியலை திரும்பிப்பார்ப்பின் இவரது உண்மைத் தோற்றம் தெரிந்து விடும். நாம் முள்ளிவாய்கால் அழிவிற்கு கருநாய் நிதியை மட்டும் குறைசொல்லிக் கொண்டிருக்க முடியாது. எதிர்க்கட்சியாய் கோட்டையில் அமர்நதிருந்த அம்மையாரையும் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்கவேண்டும். ஆனால் இவர் பேசியது சொன்வைகள் எல்லாம் மறந்து விட்டு சிலர் ஏதோ அம்மையார் வந்துவிட்டார் ஈழத்தமிழர் துயரேல்லாம் துடைத்து விடுவார் என்ற ரீதியில் நம்பிக்கையை வளாந்த தம் ஏமாறுவது போதாதென்று பயங்கரவாத அரசுக்களால் அநாதைகளாக்கபட்ட அவல வாழ்வு வாழும் ஈழத்தமிழரையும் மறுபடியும் நம்பவைதது கழுத்தறுக்கப் பார்க்கின்றார்கள். இவர்கள் அரசியல் வாதிகள். தமது சுயநலத்திற்கா வாழ்பவர்கள். அதிலும் இந்த அம்மையார் நேரத்திற்கு ஒரு கதை கூறுபவர். இன்று வெற்றியின் களிப்பில் ஈழத்தமிழரின் துன்பங்களில் பங்கெடுப்பது போனற ஒரு மாய தோற்றத்தை உருவாக்குகின்றார். அவரது வெற்றி கனியை பறிப்பதற்கு ஈழத்தமிழனின் இரத்தம் சதை உயிர் கூட உதவியிருக்கின்றது என்பதனால். நாளை மத்தியுடன் ஏதாவது தில்லு முள்ளில் சமரசம் வைக்க வேண்டிய நிலை வரும் போது இவருக்கு ஈழத்தமிழனின் நினைவே மறந்து போயிருக்கும். தமிழகத்திற்கு அவர் இல்லாவிட்டால் இவர், இவர் இல்லாவிடின் அவர் என்ற அவல நிலை. ஈழத்தமிழருக்கு....! முள்ளிவாய்காலுடன் நம்ப நடந்து கழுத்தறுத்த இந்த அரசியல் அநாகரிகங்களை மறந்து விட்டோம். இனியும் இவர்கள் செய்வார்கள் என்பதனை நம்பமாட்டோம். எம் அவலவாழ்வின் பால் கொண்ட கரிசனையால் தமிக உறவுகள் இவருக்கு வாக்களித்திருக்கலாம் அவர்களும் ஏமாந்து நாமும் ஏமாறப் போவது நிச்சயம். கருநாய்நிதியின் தோல்வி அவலவாழ்வு வாழும் ஈழத்தமிழருக்கு சிறிது மகிழ்ச்சி. எனினும் அதற்காக ஜெயாவின் வெற்றியினால் நாம் மகிழ்கின்றோம் என்று யாராவது எண்ணினால் அது பேதமையே.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...