
வங்கி அட்டைகள் அல்லது கடன் அட்டைகள் மூலம் பணம் செலுத்துவதற்குப் பதிலாக இனி நீங்கள் உங்கள் புத்திசாலிக் கைப்பேசிகள்(Smartphone) மூலம் பணம் செலுத்த முடியும். வங்கிகளும் கைப்பேசி நிறுவனங்களும் இணைந்து இந்த முறையை விரைவில் அறிமுகம் செய்யவிருக்கின்றன.
கடையில் உள்ள கணனி நீங்கள் செலுத்த வேண்டிய பணத்தொகையை தெரியப்படுத்தும்.
கடையில் உள்ள வாசிப்புக் கருவிக்கு(scanner) அண்மையாக உங்கள் கைப்பேசியை அசைக்க வேண்டும்.
கைப்பேசியில் உள்ள சிப்(chip)உம் உணரியும்(antenna) உரிய சமிக்ஞைகளை அனுப்பும்.
கடையில் உள்ள கணனிகள் உங்கள் கைப்பேசி பணம் செலுத்த வல்லதா என அறிந்து கொள்ளும்.
உங்கள் கைப்பேசி செலுத்தப் படவேண்டிய தொகையை காண்பிக்கும்.
அதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் நீங்கள் அதை உறுதி செய்ய வேண்டும். ( நீங்கள் விரும்பினால் கடவு இலக்கம் நீங்கள் அளித்து உறுதி செய்யலாம்)
நீங்கள் செலுத்தும் பணம் உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து கடையின் வங்கிக் கணக்கிற்கு மாற்றீடு செய்யப்படும். கடன் அட்டையாயின் கடன் அட்டைக் கணக்கிலிருந்து கடையின் வங்கிக் கணக்கிற்கு மாற்றீடு செய்யப்படும்.
பி. கு
யாருக்காவது Smart Phoneஇற்கான தமிழ் வார்த்தை தெரியுமா?
1 comment:
இதுக்கு அர்த்தம் கேட்டுக்கிட்டு?!ஊரில, நல்ல ஸ்மாட்டான ஆம்பிளை யெண்டு "உங்களச்" சொல்லியிருப்பாங்களே?அதுக்கு என்ன அர்த்தம்?அது தான் இது!நீங்கள் போட்டிருக்கிற போன் படம் "நல்ல ஸ்மாட்டா இருக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Post a Comment