
திரைப்படத்தின் இயக்குனரின் மனைவி கதாநாயகி. கதாநாயகின் முன்னாள் காதலன் என்று கருதப்படுபவர் கதாநாயகன். மிக மிக நெருக்கமான படுக்கைக் காட்சி. இயக்குனர் "கட்" சொல்ல முன்னரே கதாநாயகி கோபம் கொண்டு காட்சியிப் பதிவிலிருந்து வெளியேறிவிட்டார். இயக்குனர் சாம் மெண்டிஸ், கதாநாயகி கேற் வின்ஸ்லெற் என்னும் புகழ்பெற்ற டைட்டானிக் திரைப்படத்தின் நாயகி, காதாநாயகன் லியனாடொ டி கப்றியோ என்னும் டைட்டானிக் திரைப்படத்தின் நாயகன். தனது மனைவியும் அவரது முன்னாள் காதலனும் படுக்கையில் சல்லாபிப்பதை கவனமாக பதட்டமின்றிப் பார்த்துக் கொண்டிருந்தார் இயக்குனர். இயக்குனர் தன் மனைவியைப் பிரியப் போவதாகவும் ஒரு செய்தி. கேற் வின்ஸ்லெற் தனது கண்முன் தான் இன்னொருவனுடன் சல்லாபிப்பதை தனது கணவர் பார்த்துக் கொண்டிருப்பதை சகிக்க முடியாமல் கோபப்பட்டாராம். இயக்குனர் எப்படி கட்டிலில் சல்லாபிப்பது போல் நடிப்பது என்று கதாநாயகிக்கு விளக்கம் கொடுப்பதை கதாநாயகியால் பொறுக்க முடியாமல் இருந்ததாம். இத்தனைக்கும் கதாநாயகனாக நடிக்கும் லியனாடோ பலமுறை இது வெறும் நடிப்புத்தான் என்று கூறியதையும் கேற் வின்ஸ்லெற் ஏற்றுக் கொள்ளவில்லை.
கேற் வின்ஸ்லெற் முதலில் முதலில் ஜிம் திரெப்லெடொன் என்பவரை மணந்து அவர்களுக்கு ஒன்பது வயது மாயா என்னும் மகள் இருக்கிறார். பின்னர் இயக்குனர் சாம் மெண்டிஸைத் திருமணம் செய்து ஒரு மகனும் உண்டு. இப்போது சாம் மெண்டிஸும் கேற் வின்ஸ்லெறும் பிரியப் போகிறார்கள்.
கேற் வின்ஸ்லெற் எப்போது திருமணமாகி தம்பதிகளாக வாழ்வதையே விரும்புபவர் என்று லியனாடோ கூறுகிறார். லியனாடோவிற்கு திருமணத்தில் அக்கறையில்லை. அவர் இப்போது ஒரு இஸ்ரேலிய மாதிரி அழகி பார் ரfஏலியுடன் நெருக்கமாக இருக்கிறார். அவரையும் திருமணம் செய்யப் போவதில்லை
3 comments:
அட,எங்கே இருந்து இந்த நியூஸ் எடுத்தீங்க? சுவராஸ்யம்.ஆனா எழுத்துஓஇழை ஓவெர்.கவனிக்கவும்.குறிப்பா கேட் வின்ஸ்லேட் என மாற்றவும்
அது வந்து செந்தில் சார்!வேல் தர்மா ஈழத் தமிழர்!அதனால்" ட்" க்குப் பதிலாக" ற் "போட்டிருக்கிறார்!அம்புட்டுத்தேன்!
ithu rempa mukkiyam
Post a Comment