Thursday, 12 August 2010

பெண்களிலும் பார்க்க ஆண்கள் சிறந்த மேலதிகாரிகள்(Bosses)


மேலதிகாரிகளாக இருக்கும் பெண்களை விட ஆண்கள் மேலானவர்கள் என்று கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது. பெண்களுக்கிடையே எடுத்த கருத்துக் கணிப்பில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் ஆண்களே சிறந்த மேலதிகாரிகள் என்று தெரிவித்துள்ளனர். www.ukjobs.net என்னும் தொழில் வாய்ப்பு இணையத்தளம் நடாத்திய கருத்துக் கணிப்பிலேயே இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பல பெண்கள் தங்களின் மேலதிகாரி பெண் என்பதால் தாங்கள் வேலையில் இருந்து விலகியாதாகக் கூறியுள்ளனர். பெண்களின் மதிநுட்பம் சற்றும் குறைந்ததல்ல என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்களை சிறந்த மேலதிகாரிகளல்ல என்று சொல்பவர்கள் கொடுக்கும் காரணங்கள்:

1. ஆண்கள் நேரடியாகக் கதைப்பார்கள்
2. ஆண்கள் பணிமனை அரசியலில் பங்கெடுப்பது பெண்களோடு ஒப்பிடுகையில் குறைவு.
3. ஆண்கள் இலகுவாக காரணங்களை புரிந்து கொள்வார்கள்.
4. மற்றவர்களை நச்சரிக்க மாட்டார்கள்.
5. தங்கள் மனோநிலையை(mood) அடிக்கடி மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
6. தங்கள் வீட்டுப் பிரச்சனையை பணிமனைக்குக் கொண்டு வரமாட்டார்கள்.
7. ஆண்களுக்கு "அந்த மூன்று நாட்கள்" பிரச்சனை இல்லை.
8. பொதுவான விசயங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஆண்கள் திறமைசாலிகள்.
9. மற்றவர்கள் திறம்பட செயற்பட்டால் ஆண் மேலாதிகாரிகள் தமது பதவிக்கு அச்சுறுத்தல் என்று கருதுவது பெண்களோடு ஒப்பிடுகையில் குறைவு.
10. பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்கள் அதிகம் நியாயப்படி நடந்து கொள்வர்.

மேலும் பெண் மேலதிகாரிகளைப் பற்றிய குற்றச் சாட்டுக்கள்:
  • கூரிய நாக்குடையவர்கள்.
  • போட்டி மனப்பாங்குடையவர்கள்.
  • தங்கள் தோற்றம் பற்றி அதிக அக்கறை காட்டுபவர்கள்.

2 comments:

Mohamed Faaique said...

கவனமப்பா..... ஆன்னதிக்க்எ வாதி என்று கமெண்ட்ஸ் அடிக்க போகிறார்கள். இங்கே உண்மை பேசக் கூடாது. எல்லோரும் எதை சொல்கிறார்களோ அதையே நாமும் சொல்ல வேண்டும்..

என்னது நானு யாரா? said...

நல்ல பகிர்வு நண்பரே! ஆனால் எதிலும் பொதுபடை என்பது கிடையாது. ஆண்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள், பொல்லாதவர்களும் இருக்கிறார்கள். அப்படியே பெண்களிலும். குறைகளை உணர்ந்து திருந்தி செயல்பட்டால் இரு பாலருக்கும் நன்மையே!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...