
மனித குலம் அழிவிலிருந்து தப்புவதற்கு இந்த பூமியிலிருந்து இன்னும் இரு நூறு வருடங்களுக்குள் வெளியேற வேண்டும் என்று பிரபல விஞ்ஞானி ஸ்ரிfஅன் ஹோக்கிங் (Stephen Hawking) தெரிவித்துள்ளார். பூமியிலிருந்து வெளியேறி வேறு சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களில் குடியேற வேண்டுமாம். அடுத்த இரு நூறு வருடங்களுக்குள் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் மனித குலம் அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டது என்ரு அவர் தெரிவித்தார். அதற்கு ஒரு உதாரணமாக 1963-ம் ஆண்டில் ஏற்பட்ட அணு ஆயுத நெருக்கடியைக் குறிப்பிடுகிறார் ஸ்ரிfஅன் ஹோக்கிங் (Stephen Hawking).
மனித குலம் முன்பு எப்போதும் இல்லாத அளவு நெருக்கடி நிறைந்த ஒரு காலகட்டத்தில் உள்ளது என்கிறார் ஸ்ரிfஅன் ஹோக்கிங் (Stephen Hawking). மட்டுப்படுத்தப் பட்ட வளங்களைக் கொண்ட இந்தப் பூமியில் தொழில் நுட்ப வளர்ச்சியானது நல்லவற்றையும் கூடாதவற்றையும் ஏற்படுத்துகிறது என்று அவர் கவலையடைகிறார். ஆனால் எமது மரபியல்பு சுயநோக்கம் கொண்ட்தாக இருக்கிறது என்று மேலும் அவர் தெரிவிக்கிறார்.
மனிதர்கள் ஒளியிலும் பார்க்க வேகமாகப் பிரயாணிக்கும் வல்லமை பெறுவார்கள் என்று ஸ்ரிfஅன் ஹோக்கிங் (Stephen Hawking) நம்புகிறார். இந்த வல்லமை மனிதனுக்கு காலத்தை வெல்லும் வாய்ப்பைக் கொடுக்கும் என்கிறார் அவர்.
எமது அடுத்த தலை முறை வேறு கிரகங்களிற்கு அகதிகளாகப் போக வேண்டிய தலைவிதியா?
இது தொடர்பான காணொளி:
2 comments:
பிரபலமாக எவனாவது புரளியை கிளப்பி விடறது வழக்கமா போச்சு..
உலக புகழ் பெற்ற விஞ்ஞானியை இப்படி கீழ்தரமாக விமர்சிக்கக்கூடாது... அவரின் வரலாற்றை ஒரு முறை படியுங்கள்... உங்கள் கருத்து பிண அரசியல் நடத்தும் இந்திய அரசியல் வாதிகளுக்கே பொருந்தும்.....
Post a Comment