![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_pPhuVwDKzQMGq_SH5xzT2HZ4N-CWrlwSZ1sjEdTp0mDubuuJzqwgJtXMi9plS0E7ahKZnMUyz9tP-kQjqdM5qR0tbByMcUM_0Q8L1AEUIRTuqZ73VPQqzeQg55G4NP_cg4kOpwrbW1lW/s400/ramasamy.bmp)
மலேசியாவில் ஒரு மானத் தமிழன்
மாண்பு மிகு துணை முதல்வன்
பீனாங்கு மாநிலப் புதல்வன்
கற்றுயர்ந்த கண்ணியவான்
பேராசான் இராமசாமி
உலகத் தமிழர் தலைவன்
மானத் தமிழன் அவன்
ஈனத் தமிழனல்லன்
கோடானு கோடியாகச்
சொத்துச் சேர்க்கவில்லை
ஈழத்தவரை வைத்து
அரசியல் செய்யவில்லை
புதல்வர்க்கு பதவி கேட்டுக்
காவடியெடுக்கவில்லை
ஈழத் தமிழர் துயர்கண்டு
கொதித்தெழுகின்றான்
மானத் தமிழன் அவன்
ஈனத் தமிழனல்லன்
போர்குற்றம் கண்டு
பொங்கி எழுகின்றான்
உலக மனச்சாட்சியைத்
தட்டிக் கேட்கின்றான்
தேர்தல் கூச்சலல்ல
வாக்கு வேட்டைக்கல்ல
வாய்ச்சவாடல் செய்யவில்லை
உண்ணா விரத நாடகமாடவில்லை
மானத் தமிழன் அவன்
ஈனத் தமிழனல்லன்
மொழி பேசுவோரை
அழிந்தொழிய விட்டு
மொழிக்கு மாநாடு கூட்டி
உமிழ் நீரும் தமிழ் நீரென
தம்பட்டம் அடிப்போரே
மலேசிய மானத் தமிழனின்
கழி நீருக்குத்தன்னும்
நீர் இணையாவீரோ
1 comment:
வார்த்தைகள் ஒவ்வொன்றும் வலியையும் , உணர்வையும் அழகாய் வெளிப்படுத்தி இருக்கிறது . இதை சார்தவர்களுக்கு இது புரிந்தால் சரிதான் . பகிர்வுக்கு நன்றி . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்
Post a Comment