கள்ளர்களுக்குள் சண்டை வந்தால் களவு வெளிப்படும்.
அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் திகதி நடை பெறவிருக்கும்இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் இப்போது தீவிரமடைகின்றது. ஒருதரப்பு மறுதரப்பின் மீது சேறு வாரி வீசும் போரும் தீவிரமடைகின்றது. இந்தப் போரில் தமிழர்களுக்கு ஒரு நன்மை கிடைக்கவிருக்கின்றது. இலங்கையில் நடந்த இனக் கொலை சம்பந்தமான உண்மைகள் வெளிவரத் தொடங்கி இருக்கிறது. முதல் கட்டமாக சரணடையச் சென்ற விடுதலைப் புலிகளின் அரசியல் துறப் பொறுப்பாளர் நடேசன், சமாதானச் செயலர் புலித் தேவன் போன்றோரை போர்விதிகளுக்கு மாறாக சுட்டுக் கொன்ற உண்மை வெளிவந்துள்ளது.
சரத் பொன்சேக்காவிடம் 21 கேள்விகள் என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை Asian Tribune சஞ்சிகையில் வெளிவந்துள்ளது. அக்கேள்விகளில் பெரும்பாலானவை சரத் பொன்சேக்காவின் மகளின் கணவர் தனுன திலகரட்னவின் அமெரிக்க வாழ்க்கை, அவரது அமெரிக்க விசா போன்றவை சம்பந்தமாக இருக்கிறது. அதில் இலங்கை இராணுவத்திற்கான ஆயுதக் கொள்வனவுகளும் உள்ளடங்கியுள்ளது.
இந்தச் சண்டை போதாது இன்னும் பெரிசாக வேண்டுமே!
இந்தச் சேறுவாரி இறைக்கும் போட்டியில் இன்னும் பல உண்மைகள் எமக்குத் தேவை:
- இலங்கை தமிழனக் கொலையில் இந்தியாவின் நேரடிப் பங்களிப்பு.
- காணமற் போனோர்களிற்கு நடந்த உண்மை.
- வன்னி வதை முகாம்களில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறையும் அதில் வெளிநாட்டுத் தொண்டர் நிறுவனங்களின் சம்பந்தமும்.
- வதை முகாம்களில் ஆரம்பத்தில் மக்களுக்கு மனித எச்சங்கள் கலந்த உணவு வழங்கைப்பட்டமை.
- பாவிக்கப் பட்ட இரசாயன ஆயுதங்கள். அவற்றை வழங்கிய நாடுகள் எவை.
- இலங்கை இனக் கொலைக்கு உதவிய நாடுகளின் பட்டியல்.
- உயிருடன் புதைக்கப் பட்ட மக்கள் சம்பந்தமான தகவல்.
- இனக் கொலையில் தமிழினத் துரோகிகளின் தொடர்பு.
பிரபாகரனின் இறப்புத் தொடர்பான உண்மை வெளிவராது.
சேறு வீசும் போட்டியில் உள்ள இருதரப்பும் விடுதலிப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறப்புச் செய்தியின் பொயத்தன்மையைப் பற்றியோ இலங்கை இராணுவத்தால் காண்பிக்கப் பட்ட சடலம் தொடர்பான மோசடி பற்றியோ வெளிவிடமாட்டாது என்பது உறுதி. அந்த உண்மை வெளிவந்தால் இருதரப்பினதும் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும்.
No comments:
Post a Comment