Wednesday, 27 May 2009

விடுதலைப் புலிகளின் தலைமை - மறைந்துவிட்டதா? மறைந்திருக்கிறதா?


விடுதலைப் புலிகளின் தலைமைக்கு என்ன நடந்தது? என்பது தான் இப்போது பலரும் விடைகாணத்துடிக்கும் கேள்வி. . விடுதலைப் புலிகளின் தலைமைக்கு என்ன நடந்திருக்கலாம் என்ற கேள்விக்கு சில விடைகள் உண்டு:
.
1. இலங்கை அரசின் பதில்: கொல்லப்பட்டுவிட்டனர். பிரபாகரனின் உடல் புதைக்கப் பட்டுவிட்டது.


.
2. நக்கீரனின் பதில்: இறுதிக்கட்டத்தில் வீரம் செறிந்த தாக்குதலை நாடாத்தி விட்டுத் தப்பி ஓடிவிட்டனர்.


.
3. அனிதா பிராதப்பின் ஊகம்: பிரபாகரன் இறப்பதாயின் சாதாரணமாக இறந்திருக்க மாட்டார். அடையாளம் தெரியாத படி தற்கொலை செய்திருக்கலாம்.


.
4. புலிகளின் தீவிர ஆதரவாளர்களின் பதில்: சென்ற ஆண்டிலிருந்தே புலிகள் பின்வாங்கும் போது இராணுவத்திற்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியபடி இருந்தனர். இலங்கையின் சிறப்புப் படையணிகள் பலமிழந்தபின் திருப்பித்தாக்கும் திட்டம் இருந்தது. ஆனால் இலங்கை இராணுவத்தின் இழப்புக்களை இந்தியா தனது படைகளை அனுப்பி புலிகள் ஏற்படுத்திய வெற்றிடங்களை நிரப்பியது. கிளிநொச்சிப் போரின் போது இதை உணர்ந்த புலிகள் இனித் திருப்பித்தாக்குவது சாத்தியமற்றது என்ற முடிவுக்கு வந்தனர். இந்நிலையில் தமது வளங்களை மறைத்து வைத்துவிட்டு தலைமையும் மறைந்து இருக்கிறது.


.
இப்போது பெரிய சந்தேகம் எழுகிறது! பத்மநாதன் அறிக்கை விட்டாரே பிரபாகரன் இறந்து விட்டார் என்று. முதலில் புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பில் இரு பத்மநாதன்கள் இருக்கின்றனர். ஒருவர் குமரன் பத்மநாதன். இவர் புலிகளுக்கான ஆயுதக் கொள்வனவு செய்பவர். மற்றவர் செல்வராசா பத்மநாதன். இவர் புலிகளின் சர்வதேச தொடர்புகளுக்கு பொறுப்பானவர். செல்வராசா பத்மநாதன்தான் புலிகள் இறந்து விட்டதாக அறிக்கை விட்டவர். இவரது அறிக்கையில் பிரபாகரனின் பெயரைக் குறிப்பிடவில்லை. எமது அதி உத்தம தளபதியான ஒப்பிடமுடியாத தலைவர் வீரமரணம் அடைந்தார் என்றுதான் குறிப்பிட்டார்.


.
செ. பத்மநாதன் பிரபாகரனின் பெயர் குறிப்பிடாமல் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று குறிப்பிடுவது ஏன்? இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன என்று பார்த்தால் பல சாத்தியப் பாடுகள் உண்டு.


.
தூய செ. பத்மநாதன்:
1. தப்பிய பிரபாகரனைத் தொடர்ந்து இலங்கை இந்தியப் படைகள் தேடாமல் இருக்க வைப்பதற்காக பத்மநாதன் ஒரு பொய் சொன்னார்.

.
2. பத்மநாதன் சொல்வது உண்மை. பிரபாகரன் இறந்துவிட்டார்.

.3. பத்மநாதனுக்கு வேறு ஒரு நாடு வேண்டுதல் விடுத்து அவர் இப்படிச் சொல்கிறார். அந்த நாடு மேற்கொண்டு புலிகளுக்கு உதவப்போவதாக வாக்குறுதியளித்துள்ளது.

..
துரோகி செ. பத்மநாதன்.
1. பத்மநாதன் இந்திய-இலங்கை உளவுப் படையிடம் விலை போய் விட்டார். அவர்களின் வேண்டுதலின் பேரில் 1. உண்மை சொல்கிறார் 2. பொய் சொல்கிறார்.


.
2. புலிகளின் சர்வதேச கட்டமைப்பில் பிளவு ஏற்பட்டுவிட்டது. அதில் ஒரு பிரிவு. பத்மநாதனின் தலைமையில் இருக்கிறது அது 1. பிரபாகரன் இறந்துவிட்ட உண்மையைச் சொல்கிறது. 2. பிரபாகரன் இறந்தார் எனப் பொய் சொல்கிறது.

.
விடுதலை புலிகளின் சார்பான ஊடகங்கள்.
விடுதலைப் புலிகளின் சார்பானதும் தொடர்புடையதுமான ஊடகங்கள் என்று மூன்று முக்கிய ஊடகங்களைக் குறிப்பிடலாம். 1. தமிழ்நெற் இணையத்தளம், 2. ஐபிசி வானொலி, 3. ஜிரிவி தொலைக்காட்சி. இவற்றில் ஜிரிவி மட்டும் பிரபாகரன் இறந்ததாக அறிவித்தது.
.
மற்றும்படி விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாகச் செயல்பட்டவர்கள் புலிகளின் தலைமையின் இறப்பை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. அஞ்சலிக் கூட்டங்களும் ஒழுங்கு செய்யவில்லை

Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...