Wednesday, 4 November 2009
உடன்பாடும் முரண்பாடும் மோதவிருக்கின்றன
இந்திய மேற்குலக உடன்பாடு
முதலாளித்துவத்தின் வளர்ச்சியடந்த நிலையில் ஏகாதிபத்தியங்கள் உலகைப் பிராந்திய ரீதியில் தமக்குள் பங்கிட்டுக் கொள்ளும் என்பது கம்யூனிசியவாதிகளின் கருத்து. இந்த ரீதியில் இலங்கை இந்தியாவின் வல்லாதிக்கத்துள் வரவேண்டும் என்பது மறைந்த இந்தியப் பிரதமர் இந்திராகந்தியின் விருப்பம். இதற்கு சில மேற்குலக நாடுகள் உடன்பட்டிருந்தன. இந்த அடிப்படையில்தான் வன்னியில் இவ்வாண்டின மேமாதமளவில் நடந்த மனிதப் பேரழிவைத் தவிர்க்க சில மேற்குலக நாடுகள் மேற்கொண்ட முயற்ச்சிகளை இந்தியாவால் தடுக்க முடிந்தது. இந்த அநியாயமான் அக்கிரமத்தை இந்தியா தன்னை விட்டால் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ யாருமில்லை என்று இப்போது தமிழர்களுக்கு தெரிவிக்க முயல்கிறது. ஆனால் மேற்குலக நாடுகள் இலங்கை விவகாரத்தில் தாம் இந்தியாவிற்கு கொடுத்த அதிகாரத்தை இந்தியா சரியாகப் செயற்படுத்தவில்லை. இந்தியாவால் இலங்கையில் சீனா காலூன்றுவதைத் தடுக்க முடியவைல்லை. இந்தியக் கொள்கை வகுப்பாளர்களாக இருக்கும் பார்ப்பனர்களும் அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் இத்தாலியாளும் இந்தியப் பிராந்திய நலன்களைக் கோட்டை விட்டு விட்டனர். கொள்கை வகுப்பாளர்கள் தம் சாதிய ஆதிக்கத்திற்கு விடுதலைப் புலிகள் சவாலாக அமைவர் என்று கருதி அவர்களை அழித்தொழிப்பதில் அதிக முனைப்புக்காட்டினர். இதனால் இந்தியாவின் பிராந்திய நலன்களை அவர்கள் இரண்டாமிடத்திற்கு தள்ளிவிட்டனர். இந்திய அதிகாரத்தை தமது கைக்குள் வைத்திருக்கும் தரப்பினர் இந்திய நலலிலும் பார்க்க தமது குடும்பத்தின் பழிவாங்கும் தன்மையை முன்னிலைப் படுத்தினர். இலங்கையின் இன அழிப்புப் போருக்கு முற்று முழுதான உதவியும் பங்களிப்பும் தமது தென்னிந்திய தேர்தல் களத்தில் பாதக சூழ்நிலை ஏற்படுத்தும் என்பதால் இலங்கையை சீனாவிடமிருந்தும் பாக்கிஸ்த்தானிடமிருந்தும் கணிசமான உதவிபெற அனுமதித்தனர். இலங்கை அதற்கு செய்யும் பிரதி உபகாரம் இந்தியப் பிராந்திய நலனுக்கு உகந்தது அல்ல என்ற உண்மையை இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொள்பவர்களும் உதாசீனம் செய்தனர். இந்திரா காந்தி அம்மையார் தமிழர்களை ஆயுதபாணிகளாக்கி இலங்கையை தனது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு வந்தார். கற்றுக் குட்டி ராஜீவ் காந்தி அந்த ஆயுதங்களை களைய் முற்பட்டு பல தமிழ் ஆயுதக் குழுக்களை நிராயுதபாணிகளாக்கி சகோதர யுத்தத்தை தமிழ் ஆயுதக் குழுக்க்ளுக்குள் ஏற்படுத்தி தமிழர்களின் ஆயுத பலத்தை குறைத்தார். இதனால் இந்திய நிகழ்ச்சி நிரலிற்குள் இலங்கை வராமல் இலங்கையின் நிகழ்ச்சி நிரலுக்க்ள் இந்தியா வந்து விட்டது. இந்த நிலைப்பாடு மேற்குலகமும் இந்தியாவும் செய்த உடன்பாட்டுக்கு பாதகமாக அமைந்தது.
மேற்குலக சீன முரண்பாடு
இலங்கையில் இந்திய உதாசீனத்தால் சீனப் பிடி இறுக்கமடைய மேற்குலகத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான முரண்பாடு இலங்கையிலும் மையம் கொண்டது.
இலகு உலக வர்த்தகத்திற்காக சீனாவுடன் நேரடி மோதலை தவிர்க்க வேண்டிய சூழலில் உள்ள மேற்குலகம் இலங்கைமீது தனது பிடியை எப்படி இறுக்குவது என்று சிந்திக்கவும் செயற்படவும் ஆரம்பித்து விட்டது. மியன்மாரில் விட்ட பிழையை மேற்குலகம் இலங்கையில் விடத் தயாராக இல்லை என்பதை இலங்கையைச் சுற்றி மேற்குலகம் எடுக்கும் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன. சிங்கள பேரின வாதிகள் இலங்கையை இன்னொரு சீனசார்பு மியன்மார் ஆக்குவதை ஆதரிக்கிறார்கள். அவர்களின் பிரதான நோக்கம் இலங்கையின் நீண்டகால வளர்ச்சியிலும் பார்க்க தமிழர்களை அடக்கி ஆள்வதே. அதற்கு ஏற்புடைய நட்பு சீன நட்பே என்று அவர்கள் பெரிதும் நம்புகின்றனர்.
இலங்கையில் இந்தியா பாரிய வெளிநாட்டுக் கொள்கைத் தவறை இழைத்ததாக பல முன்னாள் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பற்றி நன்குணர்ந்தவர்களும் ஒப்புக் கொள்கின்றனர்.
இப்போது இலங்கை இந்தியாவின் ஆதிக்க வரம்பிற்கு உட்பட்ட நாடு அல்ல. இலங்கை இந்தியாவின் நட்பு நாடுபோல் பாசாங்கு செய்து கொண்டு இந்தியாவைத் தனது தேவைகளுக்குப் பாவித்து வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை எதிர்க்க இந்தியா சீனாவுடன் இணந்து எதிர்த்தது. மேற்குலகம் இலங்கைக்கு எதிராக எடுக்க விருக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக சர்வ தேச நாணய நிதியத்தின் கடனுதவி நிறுத்தம் அமையவிருப்பதாக கருதப்படுகிறது சர்வ தேச நாணய நிதியம் இலங்கைக்கு கடனுதவி வழங்காவிடில் இலங்கை சீன உதவியை நாடமல் இருக்க இந்தியா தான் கடனுதவி வழங்குவேன் என்று முன் கூட்டியே அறிவித்து விட்டது
இலங்கைக்கு எதிராக மேற்குலகம் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளை இந்தியா சீனாவுடன் இணைந்து தொடர்ந்தும் எதிர்க்கப் போகிறதா?
இந்திய மேற்குலக உடன்பாட்டுக்கும் சீன மேற்குலக முரண்பாட்டுக்கும் இடையில் ஒரு முறுகல் நிலை இலங்கையில் ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment