Wednesday, 4 November 2009
சரத் பொன்சேக்கா விசாரணையைத் தவிர்த்து கொழும்பு திரும்புகிறாராம்.
சரத் பொன்சேக்கா தனது அமெரிக்கப் பயணத்தை இடை நிறுத்திக் கொண்டு அமெரிக்க உள்ளகப் பாதுகாப்பகத்தின் விசாரணைக்கு முகம் கொடுக்காமல் நாளை இலங்கையில் வந்து இறங்குவார் என்று கொழும்பில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று பராளமன்றத்தில் ஜனதா விமுக்திப் பெரமுனையினர் இலங்கைப் பராளமன்றத்தில் சரத் பொன்சேக்கா நாளை இலங்கை வந்து சேர்வார் என்று தெரிவித்தனர்.
ஜெனரல் சரத் பொன்சேக்க நேற்றே விமானம் ஏறிவிட்டதாகத் தகவல்.
இச்செய்தி தவறானதா அல்லது அண்மையில் இலங்கை இந்திய உயர் மட்டப் பேச்சு வார்த்தைகளின் விளைவா என்று தெரியவில்லை.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரை இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே நேற்று சந்தித்து முக்கிய பேச்சு வார்த்தை நடாத்தினார்.
இச்செய்தி தொடர்பாக அமெரிக்கத் தரப்பிலிருந்து எந்தத் தகவல்களும் இதுவரை வரவில்லை.
சரத் பொன்சேக்காவிற்கு எதிராக எந்த நீதிமன்ற ஆணையோ அல்லது வேறு அதிகார பூர்வ ஆணையோ அமெரிக்காவில் பிறப்பிக்கப் படவில்லை. அமெரிக்க உள்ளகப் பாதுகாப்பகத்தின் அதிகாரி ஒருவர் அவரை நேர்காணல் ஒன்றுக்கு மட்டுமே அழைத்திருந்தார். அதற்கு அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை என்பதால அவர் தப்பிக்க முடிந்தது.
இது இவ்வாறு இருக்க இலங்கைக்குத் திரும்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் இன்று கொழும்பு சென்றவேளை அவர்களை இலங்கைப் புலனாய்வுத் துறையினர் தடுத்து வைத்து நீண்ட நேரம் விசாரித்த பின் விடுவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment