Monday, 2 November 2009

கூகிள் தாக்குகிறது ரொம்-ரொம்மை


கூகிள் நிறுவனத்தின் தாக்குதலுக்கு இப்போது செய்மதி வழிகாட்டற்(Satellite navigators or in short Sat-Nav) கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களான Garmin and TomTom ஆகியன இலக்காகியுள்ளன. இதுவரை காலமும் செய்மதி வழிகாட்டற் (Satellite navigators or in short Sat-Nav) கருவிகள் தயாரிப்பில் நெதர்லாந்து நிறுவனமான TomTom உம் அமெரிக்க நிறுவனமான Garminஉம் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது கூகிள் இந்தத்துறையில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏற்கனவே பல கைத் தொலைபேசிகளில் கூகிளின் செய்மதி வழிகாட்டற்(Satellite navigators or in short Sat-Nav) மென்பொருள்கள் இருக்கின்ற போதிலும் அவை பெருமளவில் இதுவரை எடுபடவில்லை. ஆனால் இப்போது கூகிள் புதிய ரக மென்பொருளை அறிமுகப் படுத்தியுள்ளது. நேரடி செய்மதி மூலமான வழிகாட்டல் படிப்படியான வழிகாட்டல் போன்ற நல்ல பயனுள்ள தகவல்கள் அடங்கிய Android softwareஇன் புது வடிவத்தில் சந்தைக்கு வந்துள்ளது. TomTom தனது கைத்தொலைபேசிகளுக்கான மென்பொருளை $99.99இற்கு விற்கிறது. ஆனல் கூகிள் தனது மென்பொருளை இலவசமாக வழங்குகிறது. Nokia, Apple and Research In Motion, the BlackBerry ஆகிய கைத் தொலைபேசிகள் செய்மதி வழிகாட்டற்(Satellite navigators or in short Sat-Nav) மென்பொருள்களை உள்ளடக்கியுள்ளன.

தற்போது இலவசமாக தனது மென்பொருளின் புதிய வடிவத்தை வெளிவிடும் கூகிள் பின்னர் எப்படி இதன் மூலம் பண்ம சேர்ப்பது என்ற உத்தியை நன்கு அறிந்துள்ளது என்று கூறப்படுகிறது.

கூகிளின் இந்தப் புதிய அறிவிப்பால் Tom Tom பங்கு விலைகள் 20% வீழ்ச்சியையும் Garminஇன் பங்குகள் 17% வீழ்ச்சியையும் அடைந்துள்ளன.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...