
பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சி இலங்கையில் இளைஞர்கள் நிர்வாணமாக்கப் பட்டு கொலை செய்யப் படுவதை அம்பலப் படுத்தியத்து. இச்செய்தி வந்தவுடன்இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அது தொடர்பாக விசாரிக்குமாறு அவசரமாக தனது அதிகாரிகளுக்கும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரகத்திற்கும் ஆணையிட்டார். ஆனால் அந்த விசாரணை தொடர்பாக இதுவரை எந்த அறிக்கையும் இந்தியத் தரப்பிலிருந்து வெளிவரவில்லை. இலங்கியின் இனக்கொலைக்கு இந்தியா ஆற்றிய பங்களிப்பு சம்பந்தமான காணொளிப் பதிவுகள் ஏதாவது உண்டா என்பதை அறியத்தான் இந்தியா விசாரிக்க உத்தரவிட்டதா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.
இலங்கையில் நடந்த போர்க் குற்றம் தொடர்பாக இலங்கையின் பாது காப்புச் செயலாளரும் இலங்கை குடியரசுத் தலைவரின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே அவர்களுக்கு எதிராக அமெரிக்கா இப்போது நடவடிக்கை எடுக்கும் முன்னேற்பாட்டில் இறங்கியுள்ளது. இதற்கு இலங்கையின் படைத் துறைத் தலைவராக இருந்த சரத் பொன்சேகாவை சொந்த விருப்பத்தின் பேரில் நேர்காண அமெரிக்க உள்துறைச் செயலகம் முயல்கிறது. அமெரிக்கா அண்மையில் இலங்கையின் போர்குற்றம் தொடர்பாக ஒரு இடைக் கால அறிக்கையை வெளியிட்டிருந்தது. அது இலங்கைக்கு எதிரான காத்திரமான குற்றப் பத்திரிகை அல்ல என்றாலும் இறுதி அறிக்கையில் என்ன இருக்கும் என்பது பற்றி இலங்கை அரசு அதிர்ந்து போய் உள்ளது. கிடைக்கும் செய்திகளின் படி அமெரிக்கா இலங்கைக்கு எதிராக மெதுவாகக் காய்களை நகர்த்துகிறது.
இப்போது அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா எப்படி உதவப் போகிறது?இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரில் முன்னின்று உதவியது இந்தியா. இலங்கையின் இறுதிப் போர் நடக்கும் வேளை போர்முனையில் அகப்பட்டவர்களைப் பாதுகாக்க பல நாடுகள் முயன்றபோது அதை தடுத்து நிறுத்தியது இந்தியா. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்த போது அதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து தீர்மானத்தை இலங்கையைப் பாராட்டும் தீர்மானமாக மாற்றியது இந்தியா. இலங்கையில் இராணுவப் புரட்சி ஏற்பட்டால் அதை ஒடுக்க இந்தியா தயாராக இருக்கிறது. இலங்கையின் வன்னி வதை முகாம்களுக்கு நற்சான்றிதழ் வழங்கியது இந்தியா. இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி கிடைக்காவிட்டால் அதை ஈடு செய்யத் தயாராக இருக்கிறது இந்தியா. இலங்கையுடனான எதிர்கால உறவு இலங்கை அரசியிலமைப்பின் 13வது திருத்தத்தை அமூலாக்குவதில்த்தான் தங்கி இருக்கிறது என்று அறிவித்து விட்டு இப்போது 13வது திருத்தம் பற்றிய பேச்சையே இந்தியத் தரப்பில் இருந்து எடுப்பதில்லை. இலங்கைக்கு சார்பாக இந்திய உளவு அமைப்பு ப. சிதம்பரம் மு. கருணாநிதி ஆகியோர் ஒரு நாடகத்தை அண்மையில் அரங்கேற்றினர்: இந்தியப் பாராளமன்ற உறுப்பினர்களின் இலங்கைப் பயணம். அதில் ஒருவரை கொன்றிருப்பேன் என்று கூட இலங்கைக் குடியரசுத்தலைவர் சொன்னார். அது பற்றி இந்தியத் தரப்பிலிருந்து எந்த ஆட்சேபனையும் இது வரை வரவில்லை. இப்போது இலங்கை அரசின் போர்குற்றம் சம்பந்தமாக அமெரிக்காவின் காய் நகர்த்தல்களுக்கு எதிராக் இந்தியாவே இலங்கைகு உதவ முடியும். இது தொடர்பாக சீனாவால் எதுவும் செய்ய முடியாது. இலங்கையில் அமெரிக்க சீனப் போட்டி கடுமையாக நிலவுகிறது. இந்தியா தனது "சந்தை" பலத்தைக் கொண்டு அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்க முடியும். அத்துடன் இலங்கை "இந்தியாவின் ஏரியா" என்பதை சில வகைகளில் அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தியா கோத்தபாயவைப் "பிணை" எடுக்குமா? இலங்கைக்கு எதிரான போர்குற்றங்களில் இந்தியாவிற்கும் உதவிசெய்த நாடு என்ற வகையில் பங்குண்டு.
1 comment:
சிங்கள நாய்களுக்கு சேவை செய்வதுதான் ஆரியப் பேய்களின் பணி.
Post a Comment