எண்பதுகளில் இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடுவதாக இருபதிற்கு மேற்பட்ட இயக்கங்கள் செய்ற்பட்டன. அவற்றில் சில தமிழ்த்திரைப் படங்களின் பெயரால் அழைக்கப்பட்டதுண்டு. விடுதலை புலிகள் இயக்கத்தை அலைகள் ஓய்வதில்லை என்ற பெயரால் அழைப்பார்கள். ஒயாமல் இலங்கை இராணுவத்தின்மீது தாக்குதல் நடாத்துவதால் இப்பெயர். புளொட் இயக்கத்தை விடியும் வரை காத்திரு என்று அழைப்பர். இலங்கை இராணுவத்தின் மீது வெறுமனே அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தாக்குதல் நடாத்தாமல் தக்க தருணம் வரும்போது தாக்கவேண்டும் என்று கூறுயதால் இந்தப் பெயர். ரெலொ இயக்கத்தை தூறல் நின்று போச்சு என்று அழைப்பர். சில தாக்குதல்களை இலங்கை இராணுவத்தின் மீது நடாத்திவிட்டு பின்னர் எதுவும் செய்யாததால் இப்பெயர். இவைதவிர தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம், ஈரோஸ், தமிழீழ விடுதலைப் படை போன்றவை இராணுவத்தின் மீது தாக்குதல்கள் நடாத்துவதுண்டு. ஈரோஸ் இலங்கையின் பொருளாதரத்தின் மீது பாதிப்பு ஏற்படுத்துவதில் அதிக அக்கறை காட்டியது. ஆக மொத்தத்தில் இவைஎல்லாம் இலங்கை அரசிற்குப் பாரிய தலையிடியாகவே இருந்தன. இந்த இயக்கங்களால் இலங்கையின் எப்பாகத்திலும் தாக்குதல் நடாத்தமுடியும். விடுதலைப் புலிகள் விக்டர் தலைமையில் அநுராதபுரத்தில் நாடாத்திய தாக்குதல் முழு இலங்கையையும் படு அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்படியான ஒரு சூழ்நிலையில்தான் 13வது அரசியல் திருத்த சட்டம் இலங்கைப் பாராளமன்றில் நிறை வேற்றப் பட்டது.
பார்த்தசாரதியின் திறமையால் இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவிற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் கடப்பாடு உண்டு என்பதை மற்ற நாடுகள் ஏற்றுக் கொள்ளச் செய்யப்பட்டது. பூமாலை நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படைகள் இலங்கையில் அத்து மீறிப் பிரவேசித்ததை எந்த நாடும் கண்டிக்கவில்லை. இந்தியக் கடற்படைகள் இலங்கையை சூழ நிற்க, 30,000 படையினர் பெங்களூரில் எதற்கும் தயாராக நிற்க, இலங்கையின் எப்பகுதியிலும் தமிழ் ஆயுத இயக்கங்கள் தாக்குதல் நடாத்தும் வல்லமை பெற்றிருந்த நிலையில் 13ம் அரசியல் திருத்தம் இலங்கையில் நிறைவேற்றப்பட்டது.
13ம் அரசியல் திருத்தற்கு எதிராக பலத்த எதிர்ப்பு சிங்கள மககள் மத்தியில் எழுந்தது. அவை உழங்கு வானூர்தித் தாக்குதல் மூலம் அடக்கப் பட்டது. இந்த அரசியல் திருத்தம் கிட்டத்தட்ட இந்திய மாநில அரசுக்குரிய அதிகாரங்களை இலங்கையின் மாகாண சபைகளுக்கு வழங்கியது. இந்த அரசியல் சட்டத் திருத்தம் இதுவரை தமிழர்களைப் பொறுத்தவரை அமூல் படுத்தப் படவில்லை. கிழக்கு மாகாணத்தில் தற்போது முதலமைச்சராக இருப்பவருக்கு இதன்படி அதிகாரங்கள் முழுமையாக வழங்கப் படவில்லை.
தீர்வு சாத்தியமா?
13ம் அரசியல் திருத்தம் அதிகாரப் பகிர்வு அல்ல இது ஒரு வகையான அதிகாரப் பரவலாக்கம் தான். மைய அரசு மகாண அரசை எந்நேரமும் கலைக்கலாம். இந்தியாவின் மாநில அரசை ஒரு பாரிய மாநகர சபையாகவே அரசமைப்பு அறிஞர்கள் கூறுகின்றனர். It is a glorified municipality. இப்படிப்பட்ட அதிகாரப் பரவாலாக்கல் மூலம் இனப் பிரச்சனக்குத் தீர்வு காண முடியாது.
அமூலாக்குவது சாத்தியமா?
இந்த 13ம் அரசியல் திருத்தற்கு ஜாதிக ஹெல உறுமய ஜேவிபி ஆகிய அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு இலங்கை இராணுவதின் ஆதரவுண்டு என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்ல இலங்கை இராணுவமும் இலங்கையின் இனப் பிரச்சனை தொடர்பாக ஒரு நிலைப் பாட்டில் இருப்பதாகக் கூறப் படுகிறது. இலங்க அரசாங்கத்தைப் பொறுத்த வரை எந்தவிதமான் உள்ளக அழுத்தங்களும் இதை அமூலாக்குவதற்கு இல்லை. இதற்கான அழுத்தங்களை யார் கொடுப்பார்கள்? இலங்கை மீது எந்த அழுத்தங்களையும் தாம் பிரயோகிக்கப் போவதில்லை என்று இந்திய அதிகாரிகள் கூறிவிட்டனர். அமெரிக்கா இதை அமூல் படுத்தும் படி ஒரு வேண்டு கோளை மட்டும் விடுத்துள்ளது. ஆகவே இரு முக்கிய கேள்விகளுக்கு விடை தேவை:
- 13வது திருத்தம் நிறைவேற்றப் படுமா?
- 13வது திருத்தம் தீர்வாகுமா?
No comments:
Post a Comment