
அண்மையில் நண்பர் ஒருவர் கலைஞர் கருணாநிதி எழுதிய திரை படப் பாடல் என்று சொல்லி ஒரு பாடலை மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார். கலைஞர் ஐயா முப்பது வருடங்களுக்கு முன்னதாகவே ஈழத்தமிழனின் இன்றைய நிலையை கவிதையாக வடித்துவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. அவர் என்ன சாதாரண ஆளா?
இரு பெண்டாட்டிகள் உடனிருக்க
இரு குளிரூட்டிகள் அருகிருக்க
நாலு மணி நேர உண்ணா விரதத்தால்
போரை நிறுத்திய பெருந்தகை.
அவரது மறக்க முடியுமா திரைப் படப் பாடல் இப்படி ஆரம்பிக்கிறது:
காகித ஓடம் கடலலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்
ஈழத்தமிழனுக்கும் இன்று மூழ்குவதைத் தவிர வேறு வழியில்லை!
கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி
தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான்
காலமும் பார்த்து நேரமும் பார்த்து
வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான் ( காகித)
இந்தியா ஈழத்தமிழனுக்கு ஆயுதம் தந்தது பயிற்ச்சி தந்தது. இப்போது சிங்களவனுடன் சேர்ந்து தமிழனை வததைத்து விட்டது.
அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமே இல்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை ( காகித)
ஈழத்தவன் இசுலாமியனாக இருந்தால் இசுலாமியர் வாழும் நாடு உதவியிருக்கும்.
கிறிஸ்தவனாக இருந்த்தால் கிறிஸ்த்தவர்கள் வாழும் நாடு உதவியிருக்கும்.
கத்தோலிக்கனாக இருந்தால் கத்தோலிக்கர்கள் வாழும் நாடு உதவியிருக்கும்.
பௌத்தனாக இருந்தால் பௌத்தர்கள் வாழும் நாடு உதவியிருக்கும்.
பெரும் பாலான ஈழத்தவர்கள் இந்துக்களாக இருந்ததால் எந்த நாடும் உதவவில்லை.
தாயின் மடியும் நிலைத்திடவில்லை
தந்தையின் நிழலும் காத்திடவில்லை
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
அம்மா எங்களை அழைத்திடு தாயே (காகித)
தமிழ்நாட்டைத் தாயென்று நம்பினான் இந்தியாவைத் தந்தை நாடென்று நம்பினான். எதுவும் நிலைக்கவில்லை.
No comments:
Post a Comment