Wednesday 1 July 2009

மனித உரிமைகள் என்றால் என்ன?


மனித உரிமைகள் என்றால் என்ன?
எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளூம் சுதந்திரமும் மனித உரிமைகள் எனப்படும்.

உரிமை என்பது எத்தைகயது?
சுதந்திரமாக மற்றவர்களைப் பாதிக்காத வகையில் செயற்படும் அனுமதி உரிமையாகும். ஒருவருக்குத் தனது கைத்தடியை சுழற்ற உரிமை உண்டு ஆனால் அது மற்றவர்மேல் படாமல் இருக்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு உண்டு.
.
10-12-1948 இல் ஐக்கிய நாடுகள் சபை முதன் முதலில் உல மனித உரிமைகள் பிரகடனத்தை வெளியிட்டது. குடியுரிமை, அரசியல், பொருளாதார சமூக உரிமைகளை அனுபவிக்கும் உரிமை சகலருக்கும் உண்டென்பதி இப் பிரகடனம் வலியுறுத்தியது.
.
இப் பிரகடனத்திலும் இதன் பிறகு வந்த பல மனித உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்களிலும் கையெழுதிட்ட நாடுகள் இவற்றை மதித்து நடக்கும் கடப்பாடுடையன. பல நாடுகள் இதற்கு ஏற்றாப் போல் தமது நாட்டுப் பாராளமன்றத்தில் சட்டங்களை சமர்ப்பித்து நிறைவேற்றி உள்ளன. பல நாடுகளின் மனித உரிமை ஆணையகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப் பட்டுள்ளது. இது தன்னாட்சி உடையது என்று சொல்லப்படுகிறது.
.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகம்.
இக் கழகம் 2005ஆம் ஆண்டு உருவாகக்ப் பட்டது. இது மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக விசாரிக்கும் உரிமை உள்ளது. இது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் உப அமைப்பாகும். இதன் நிலை ஐக்கிய நாடுகளின் பாது காப்புச் சபையிலும் கீழானது. இதன் 47 உறுப்பினர்களையும் பொதுச் சபையின் 191 உறுப்பினர்கள் தெரிவு செய்வர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகளாகும். இது ஜெனீவா நகரில் செயற்படுகிறது. மனித உரிமகள் கழகம் ஒரு நாட்டில் மனித உரிமைகள் மீறப் படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி பாது காப்புச் சபையைக் கோரமுடியும். பாது காப்புச் சபை சில நடவடிக்கைகளை குறிப்பிட்ட நாட்டுக்கு எதிராக எடுக்க முடியும்:
  • நாட்டுக்கு எதிராக பொருளாதரத் தடை, பயணத்தடை விதித்தல்.
  • சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் வழக்குத் தாககுதல் செய்தல்.
இக்கழகத்தின் செயற்ப்பாட்டை அண்மையில் நாம் பார்த்தோம். இலங்கை அரசு மீது மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணையினை நடத்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித மனித உரிமைகள் ஆலோசனை சபை (United Nation Human Rights Council, UNHRC) முயன்று அது முடியாமல் போயுள்ளது. இலங்கை அரசிற்கு ஆதரவாக 29 நாடுகள் வாக்களித்து விசாரனையினை மேற்கொள்ளாது தடுத்துள்ளன.

ஜரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மணி ஆகிய நாடுகளின் படையினர் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட தாக்குதல்களில் அப்பாவி மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கீட்டின் பிரகாரம் கடந்த ஆண்டு மட்டும் 2000 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இவ் வருட ஜனவரி மாதம் வரை பலஸ்தீனிய காசா பிரதேசம் மீது இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 500 மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டு இருந்தார்கள். இஸ்ரேலிய படையினர் ஐக்கிய நாடுகள் சபை கட்டிடம் மீது மேற்கொண்ட தாக்குதலில் சேதம் 10.4 மில்லியன் அமெரிக்க டொடலர் என ஐ.நாவினால் கணக்கெடுக்கப்பட்டது.

சோமாலியா , சிம்பாவே மற்றும் சிறிலங்கா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட இனப்பிரட்சனைகளில் பொது மக்கள் கொல்லப்பட்ட போது ஐக்கிய நாடுகள் சபை தனது கொடியினை உயர்த்தி நீட்டியது. ஆனால் பலம் பொருத்திய நாடுகள் ஈராக், ஆப்கானிஸ்தான், செச்சினியா , தீபெத் ஆகிய நாடுகளில் அப்பாவி மக்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட போது மெளனமாக இருந்தது. பலம் பொருத்திய நாடுகளும் தமது யுத்தத்தில் அப்பாவி மக்களை கொண்டுள்ளார்கள். மனித உரிமைகள் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை ஓர வஞ்சனையாக (Double standard) நடந்து கொள்ளுகின்றது என இதனை மேகோள் காட்டியே அரேபிய நாடுகள் கூட்டமைப்பும் அணிசேரா நாடுகளின் அமைப்பும் கூறியிருந்தது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...